Sunday, November 3, 2024

PATTU IYENGAR- LYRICIST

 PATTU IYENGAR- LYRICIST 

பாட்டு எழுத வந்த  பட்டு ஐயங்கார்

ன்னது பட்டு ஐயங்காரா?  அவர் என்ன பட்டு வ்யாபாரியா அல்லது எல்லா தொழிலிலும் அடி பட்டு அதனால் பட்டு ஐயங்கார் என்று பெயர் வந்ததா? அல்லது அவருக்கு ஏதாவது பிடிக்கவில்லை என்றால் "பட்" என்று அறைந்து விடுவார் எனவே பட்டு ஐயங்காரோ?   என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு நம் நண்பர் டைப் அடிக்க விடாமல் தொண தொணக்கிறார். இதற்குத்தான் பக்கத்தில் யாராவது இருக்கும் போது கம்ப்யூட்டரை திறக்கவே கூடாது . தெரியாமல் மாட்டிக்கொண்டேன். சரி நண்பரின் ஒரு கேள்விக்கும் பதில் சொல்லாமல் மௌனம் காத்து ஒரு வழியாக வெறுப்படைந்து அவரே "நான் வருகிறேன்" என்று சொல்லும்படி செய்தாயிற்று. இதற்கு ஏதாவது பதில் சொல்லப்போக நண்பர் இங்கேயே டேரா போட்டுவிட்டால் நம்ம பாடு ஆபத்து. கரண்ட் இருக்கும் போது வேலையை முடிக்கலாம் என்றால், இது போன்ற ஆர்வலர்கள் வேறு . இவர்கள் ஆர்வலர்களா ? எனில் ஊர்வலர்கள் என்று சொல்லலாம்.ஊர்வலமாக தெருத்தெருவாக நடந்து ஆங்காங்கே டேரா போட்டு சம்பந்தமில்லாமல் காபி பொடி என்ன விலை தெரியுமோ ஆரம்பித்து BRAZIL இல் காபிக்கொட்டை ஏலம் பற்றி தத்ரூபமாக [நாகேஷ் பாலையாவுக்கு கதை சொன்னது போல்] விவரித்து, நம் நேரம் வீணாகும். எனவே மௌனம் சர்வ ஒளஷதம் என்று வால்மீகி சொன்னார் என்று ஒரே போடாகப்போட்டு ஏதாவது செய்யவில்லையேல் BLOG WRITING நாள் முழுவதும் சாத்தியமே இல்லை.. அப்பாடா ஒரு வழியாக நண்பர் தெருமுனை தாண்டி போய்விட்டார் தலை  கண்ணுக்கெட்டிய வரை தென்படவே இல்லை.      

பட்டு [பட்டாபி]  ஐயங்கார் பள்ளி ஆசிரியர் ரிட்டயர்டு -22 வருஷங்களாக , ஆனாலும் புலம்பல் ஓயவில்லை -எனக்கு ஹெட்மாஸ்டர் போஸ்ட் தராமல் ஏமாற்றிவிட்டான் அந்த கரஸ்பாண்டெண்ட் கணபதி ஐயர் ;அவனுக்கெல்லாம் நல்ல சாவே வராது என்று வாரம் இருமுறை சாபம் தருவார் பட்டு ஐயங்கார் . அந்த சமயத்தில் யாரவது வந்து விட்டால் பாடத்தொடங்கிவிடுவார். அப்படி பலமுறை பாட்டு கேட்டு அசந்தவன் பால்கார திருப்பதி. சாமி நீங்க ஸ்கூல் பாட்டு வாத்தியாரா என்றான். அவர்      [Maths –BSc., BT].  பட்டு ஐயங்காருக்கு  கோபம் தன்னை பாட்டு வாத்யார் என்கிறான் இவன் after all -மில்க் vendor என்று ஏகாதசி சிங்கம் போல் கர் புர் என்றார். இல்ல சாமி நீங்க அளகா பாடுறீங்க அதான் கேட்டேன் என்றான் திருப்பதி . இப்போது திருப்பதி --ஏழுமலையானாகவே தெரிந்தான்  பட்டு ஐயங்காருக்கு.

கன்னத்தில் போட்டுக்கொள்ளாத குறை பட்டு ஐயங்காருக்கு   -நீ நன்னா புரிஞ்சுட்டிருக்கிறேயே என்னோட சங்கீத ஞானத்தை பத்தி பேஷ் பேஷ் என்று பாராட்டினார். திருப்பதிக்கு தலை கால் புரியவில்லை -சாமி தன்னை மனதார ப்பாராட்டி விட்டார் என்று. . வரேன் சாமி என்று சைக்கிளில் ஏறி பால் விநியோகத்துக்கு      கிளம்பி விட்டா ன். இது நடந்து ஒரு வருஷம் இருக்கும் ; இப்போதெல்லாம் திருப்பதி வருவது இல்லை அவன் பையன் வெங்கடேசு தான் அன்றாடம் வருகிறான்.  

ஒரு ஞாயிறு காலை திடீரென்று திருப்பதி ப்ரசன்னமானான் -சாமி என்று கூப்பிட்டபடி. . இப்போது திருப்பதியை அடையாளம் தெரியாது -ஒரு ஜீன்ஸ் , வெள்ளை அரைக்கை சட்டை, கையில் தங்க செய்னில் வாட்ச், முன் நெற்றியில் சிறிய முடிக்கொத்து ஸ்பிரிங் போல் ஆடிக்கொண்டிருக்க, வணக்கம் சாமி என்று கை கூப்பினான் .

பட்டு ஐயங்கார் உண்டமயக்கம் 10.30 மணிக்கு மோர்க்குழம்பு, பின் பருப்பு உசிலி, என்று வெளுத்துக் கட்டிவிட்டு அவ்வப்போது ஏவ், ஏவ் என்று ஏப்ப ஒலியுடன் சாய்ந்து கிடந்தவருக்கு திருப்பதியை அடையாளம் தெரியவில்லை. யாரூ என்று கேட்டுக்கொண்டே ஏவ் என்றார்.. நான் தான் சாமி திருப்பதி    என்றார் வந்தவர். நமது ரசிகனல்லவா , வா வா வா வா என்று வாய் நிறைய அழைத்து உன்ன எங்கே ஆளையே காணும் என்றார் ஐயங்கார். அதுவா சாமி -சினிமாவுல அசிஸ்டன்ட் டைரக்ட ர் ஆயிட்டேன். வர தீபாவளிக்கு நம்ம படம் வருது அஜீத் தம்பி சுகேசு -அப்புறம் மோனா னு பம்பாய் பொண்ணு [நீங்க பாத்தீங்கன்னா அசந்துருவீங்க]. ஐயோ வேணாம் அன்னத்ரேஷம் என்று முகம் சுளித்தார் ஐயங்கார். . சாமி நீங்க பாட்டு பாடுவீங்க-தெரியும் .       பாட்டு எளுதுவீங்களா ?

சாஹித்யமா ? பின்னிப்பிடுவேன் பிரமாதமா இழுதுவேன் . பாவ நாசம் சிவனே என்னக்கண்டு பயப்புடுவர் அந்த நாள் ல. [ சாமி நீங்க அந்த நாள் சினிமால நடிச் சீங்களா என்றார் நவ -திருப்பதி ]

ஐயங்கார் நறநறதத்தார் அப்போது பார்த்து ஒரு ஏவ் வெளிப்பட்டது. சாமி வாயு இருக்குது பூண்டு சாப்பிடுங்க எத்தன வருசத்து காத்தா இருந்தாலும் கலச்சிறும். என்று திருப்பதி நாட்டு வைத்தியம் சொன்னார்.

சாமி பாட்டு எளு தணும் .   அடுத்தவாரம் கம்பெனிக்கு கூட்டிக்கிட்டு போறேன் வாங்க. நீங்க 6 மாசம் வாங்குன சம்பளத்தை ஒரே பாட்டுலேயே வாங்கிறலாம்என்றார்திருப்பதி.

ஐயங்கார் மிதந்தார்.

மன்மத லீலை யை வென்றார்   உண்டோ, மாதரசி ஏ ஏ என்று மூக்கால் உச்சஸ்தாயியில் பாட , வரேன் சாமி என்று திருப்பதி கிளம்பினார்.

மறு வாரம் செவ்வாய் இரவு 8.00 மணிக்கு திருப்பதி வந்தார்-- "சாமி , நாளைக்கு காலைல எனக்கு போன் வரும் , அப்படி வந்தா நன் வந்து கூட்டிக்கிட்டு போறேன்  இல்லைன்னா அடுத்த நாள் கண்டிப்பா நான் வந்து கூட்டிக்கிட்டு போறேன் ரெடியா இருங்க வரேன் என்று அவசரமாக கிளம்பிப்போனார்.திருமதி பட்டு ஐயங்கார் இப்ப எங்க சஞ்சாரம் பால்காராளோட ? என்றாள் .

தொடரும் [3ம் பகுதியில் நிறைவு பெறும் ]

நன்றி அன்பன் ராமன்

Saturday, November 2, 2024

TEACHER BEYOND YOUR IMAGE-21

 TEACHER BEYOND YOUR IMAGE-21

ஆசிரியர்- உங்கள் பிம்பத்தை தாண்டி-21

“ஆசிரியப்பணி பிறர் நலம் சார்ந்தது . அதை மறவாது செயல் புரிந்தால் வள்ளுவன் வாக்கு போல் 'முயற்சி தன்  மெய் வர்த்தக்கூலி தரும்"

என்று சென்ற பதிவில் குறிப்பிட்டிருந்தேன் . மேலும் சிந்திப்போம்

உனக்கு வேறு வேலையே இல்லையா ? எப்போதும் ஆசிரியப்பணி என்று கொல்கிறாயே என்றொருவர் கொதிக்கிறார். அதாவது பலர் உள்ளூரைக்கொதித்துக்கொண்டிருக்கிறார்கள்.. மன்னிக்கவும் என்னுடைய பொழுது போவதற்காக இதை பேச வரவில்லை. எவ்வளவு செம்மையான ஆசிரியர்கள் இருந்தமண்ணில் இன்று ஆசிரியப்பணி மண்ணில் விழுந்துவிடும் போல் இருக்கிறதே என்ற கவலையில் நான் அறிந்தவற்றை சொல்கிறேன். உனக்கு தெரிந்தது தான் இலக்கணமா நீ என்ன ஆசிரியப்பணிக்கு தொல்காப்பியனா என்றெல்லாம் எண்ணாமல், ஏன் சொல்கிறேன் என்பதை புரிந்துகொள்ளுதல் பலன் தரும் , பணம் தருமா ? எனில்-- இல்லை. எனவே பணம் விழைவோர் ஏதேனும் வேறுபணி நோக்கி செல்லுங்கள், தயவுகூர்ந்து புரிந்து கொள்ளுங்கள் ஆசிரியப்பணி [இருக்கவே இருக்கிறது என்று] வேண்டாவெறுப்பாக செய்வதைவிட ஜேப்படி திருட்டு கூட உயர்வானதாக வே தோன்றுகிறது. ஆம் ஜேப்படி திருடன் வெகு நேர்த்தியாக செயல் படுகிறான் ஆனால் கூலிக்கு மாரடிக்கும் ஆசிரியன் பணியில் நேர்மையும் இல்லை,  நேர்த்தியுமில்லை, நேர்த்திக்கடன் செலுத்தும் ஈடுபாடு கூட இல்லை எனவே தான்சொல்கிறேன் மனம் ஒன்றாமல் , ஏனோ தானோ என்று செய்யும் பணிக்கு பெயர் -நிச்சயம் மகோன்னதப்பணி [NOBLE PROFESSION] எனப்படும் ஆசிரியப்பணி அல்ல. அந்த சொல்லாடலை கவனியுங்கள்

‘NOBLE PROFESSION’ என்கிறார்கள். அதை, WORK என்றோ, JOB என்றோ, BUSINESS என்றோ அழைப்பதில்லை. ஏன் அதற்கு- PROFESSION என்ற உயரிய கௌரவம் வழங்கப்பட்டுள்ளது?என்றுசிந்தியுங்கள்.              ஒன்று நிச்சயம்-- ஆசிரியல்லாத எவரோ முன் காலத்தில் அதை PROFESSION என்று பெயர் சூட்டியுள்ளனர்; அவர்களுக்கு வாய்த்த      ஆசிரியர்கள் அந்த உயரிய தொழில் விற்பன்னர்கள் போலும் அதன் வெளிப்பாடாக இந்த நாமகரணம் என்று புரிந்துகொள்கிறேன்.

இவ்வாறிருக்க ஏனோ தானோ செயல்கள் எப்படி noble ஆகும்? மேலும் ஒன்றை நினைவில் கொள்வது நலம்

பயில வருபவர்கள் எடுத்த எடுப்பிலேயே ஆசிரியரை கிண்டல் செய்யும் நோக்கத்துடன் வருவது கிடையாது. ஆசிரியரின் செயல் பாடுகள், குறிப்பாக உளறல்கள், மொழிக் குறைகள், முன்னுக்குப்பின் முரணான விளக்கங்கள், ஏதேனும் சந்தேகம் கேட்டா ல் கேட்பவரை அச்சுறுத்துவது அல்லது இது கூட தெரியாதா என்று ஏளனம் செய்வது, பயில்வோரிடையே, இனம் மொழி மதம் சார்ந்த பாகுபாடு காட்டுதல் போன்ற பணிக்குப்புறம்பான தர்ம நிலைப்பாடுகள் தென்படும் போது ஆசிரியர் கேலிப்பொருள் ஆவது உறுவது.அப்படி கேலிக்கு ஆட்படும் ஆசிரியர்  எவரும் அப்போது தனது வீரத்தைக்காட்ட முனைவதில்லை; மாறாக ஹி ஹி ஹி என்று அடங்கி முடங்கி பையனின் முதுகைத்தடவிக்கொடுத்து பிழைப்பு நடத்தும் அவலத்தையும் அதிகம் காண்கிறோம். அவ்வகை ஆசிரியர்களுக்கு முனகுவதும் முடங்குவதும் மாத்திரமே புகலிடம்.  ஏனெனில் கம்பீரமாக செயல் படும் அளவிற்கு, தகவலையோ, தகவல் மேம்பாடுகளையோ, முறையான சொல்லாடலையோ, நேர்த்தியாக வடிவமைத்துக் கொள்ளாமல், பயில்வோரிடம் ஆசிரிய தோரணையை அரங்கேற்ற முடியாது. பட்டவர்த்தனமாக சொல்வதானால், அவர்கள் சுயமரியாதை என்ற சொல்லையோ அதன் முறையான கம்பீர ஆதிக்கத்தையோ அரியாதவர்கள்; ஆனால் வீரவசனம் பேசுவர். பிறர் அதை நம்புவதாக இவர்கள் நம்புவது, கிணற்று தவளைகளுக்கு சரியான எடுத்துக்காட்டு.

இப்போது மீண்டும் ஆசிரியப்பணியின் மேன்மை தனை, நினைவு கூர்தல் பொருத்தமானது.

ஆம், பயில வரும் எவருக்கும் -அவளுக்கு/ அவனுக்கு என்ன தெரியும் என்றெண்ணி அவலத்தில் சிக்கிக்கொள்ளாதீர்கள். சிறிய ஊர்களில் கூட, பெற்றோரின் பணி நிமித்தம் வெளி மாநிலங்களில் படித்துவிட்டு இங்கே உயர்கல்வி பெற வருகின்றனர். அவர்கள், அடிப்படைக்கல்வித்தரம் சிறப்பாக இருப்பதால், இங்கே ஆசிரியரிடம் மேலும் சிறப்பான விளக்கம் / சொல்லாடல் கிடைக்கும் என எதிர்நோக்குகின்றனர். சொல்லாடல் "டல் [dull] "ஆனால், கேலிசெய்யாமல் பின் வெண்சாமரமா  வீசிக்கொண்டிருப்பர்?. இன்றைய சூழலில் பல மாநிலங்களில் பள்ளிக்கல்வியிலேயே மாணவ மாணவியர் நல்ல மொழிப்பயிற்சி -உரையாடும் திறன் வளர்ப்பும் பெற்று எளிதில் ஆளுமையுடன் பேச இங்கே கையில் நோட் இருந்தால் தான் படிக்க இயலும், பேச்சு என்பது ஒரு சில சொற்கள் என்ற எல்லைக்குள் முடங்கிப் போய் . ஏதேனும் கேள்வி கேட்டால் வியர்த்து வெலவெலத்து நடுங்கும்ஆசிரியர்  எண்ணிக்கை  உயர்ந்து கொண்டே வருகிறது.

என் மீது கோபம் கொள்ளாதீர்கள். எனது கூற்றில் உண்மை இருக்கிறதா இல்லையா?  உண்மை எனில்- செய்ய வேண்டியது என்ன என்று சிந்தியுங்கள். உயர் கல்வியில் ஆசிரியர் என்ற பெருமை நம்மை நோக்கி வரவேண்டும், நாமாக எனது எக்ஸ்பீரியன்ஸ் எவ்வளவு தெரியுமா என தம்பட்டம் ஒலித்தல் கூடாது. நமது எக்ஸ்பீரியன்ஸ் மிக நேர்த்தியாக செயலில் வெளிப்பட வேண்டும் -வீர வசனங்களால் .அல்ல. எனவே மூன்று வகை கட்டமைப்புகள் அவசியம் தேவை

1. உயர் தகவல் திரட்டல் 2   அவற்றை முறையாக ஒருங்கிணைத்தல் 3 சீராக முறையாக நல்ல மொழி வழி கற்பித்தல். இவற்றை கைக்கொள்ளாமல் ஆசிரியராக பரிணமிப்பது பகற்கனவு என்பதையும் கடந்து, பாகற் கனவு [bitter dream] என்பதாக வடிவு பெறும்.

நான் அந்தப்படம் பெற்றுள்ளேன், இந்தத்தகுதி பெற்றுள்ளேன் என்பதெல்லாம் ஆசிரியப்பணிக்கு பெருமை சேர்க்காத வரை அவற்றால் எந்த பெருமையும் இல்லை.  .

பிற தேவைகளை மீண்டும்விவாதிப்போம் .   

 

 

 

Friday, November 1, 2024

The syringe

 The syringe

Perhaps among the gadgets used by clinics / physicians, the most well-known item is ‘The Syringe’. Irrespective of one’s age, the item simultaneously raises attraction and ‘fear’ of prick. Most children seldom  aver the visit to a clinic, because their mothers have frequently admonished them saying “I would ask the doctor to give you a shot in the hand, unless you eat food or do your homework or some similar duty of his/hers.  More than the act of prick by a needle, the thought of the prick is unnerving.

Leaving aside the issue of the fear component, one has to realize the need and value of ‘injections’ as a route to faster recovery.   The purpose of any treatment is restoration of normal health and wellness. Being so, the need to administer an injection is based on certain critical requirements. Drug delivery can take an oral route or vascular path [the blood stream]. Either would reach the metabolic stream and get to the ‘site of action’. An item eaten would take time before it is digested and delivered to the blood stream. Instead if the drug can be directly fed through the blood stream, the ‘uptake’ would be quicker and the drug action would begin soon to alleviate the patient, of the suffering. That explains the relevance of the gadget- ‘the syringe’.    However, the magnitude of the requirement demands variation in dimension among syringes for appropriate need. Before the metric system was adopted, calibrations in syringes were in cubic centimeters [ cc ] However, cubic centimeter[cc]  and milliliter [ml] measure the  same volume

In fact, syringes ranging from 0.3 ml to3 ml and at the other extreme 60.0 ml. are used.  There are those with 1.0 ml capacity intended for use, by diabetics and those of tuberculosis on daily medication.

The size prescriptions in ml refer to the capacity to hold the liquid or fluid and this feature is termed ‘barrel ‘ size or capacity ; it is the larger cylinder holding the liquid and the barrel has precise markings to reveal  the quantum released / held .

The function of delivering the liquid is done by a smooth-sliding cylinder –the plunger which fits nearly snug into the barrel; the plunger sliding through the barrel expels the liquid in a volume proportional to the inward thrust of plunger. It ensures a steady air-free stream of liquid as intramuscular/ intravenous medication.

However, the most critical part in a syringe is the needle, a thin metallic tube with an internal canal facilitating drug output. Necessarily varied needles, big / small are a part of the physician’s armour. The right needle for a job was chosen and used., when syringes were reused  by sterilizing them

The earlier custom of sterilizing the injecting kit by thorough boiling of the varied parts of a hypodermic syringe has been disbanded. The then syringes were made of glass and could be sterilized over and over several times. Most popular among them were ‘Pyrex’, ‘Borosil’ and later ‘Glass van’. All of them were high quality materials of precision in drug delivery and would stand boiling water sterilization. Now the scenario is different with ‘Disposable syringes’ made of polypropylene

With disposable item each patient is injected using a pre-sterilized outfit eliminating any scope of patient-patient transfer of body fluids /infected blood etc. Such one-time syringes are made of polypropylene and factory sterilized and hermetically sealed . However, the daily load of hospital waste by way of used syringes is another environmental issue to address and contend with.

Also, the earlier practice of physician’s personal care in administering injections to patients has literally come to an end. Such medical attentions are handled by ‘paramedics’ who have school level education and a certificate in nursing.

 The culture of one-person, one-syringe is a safe strategy that precludes scope of cross infection.

In all situations, the medicine in syringe is expelled to drive out any air- a potential hazard of pumping air into vascular stream –an avoidable error.

In our own times, we witness changes largely from technology and equipment to monitor patient’s  health status round the clock.  

                                              ++++++++++++++++

SIVAKASI

 SIVAKASI

 

There could be eyebrows arching up –as to what the title tries to bring about. Honestly, it is just an impulsive response, as I had to carefully tread my path through the prospect of getting hit by a fire cracker or any other deftly designed pyro product ruling the evening skies on deepavali day. Seeing the recent videos of Israel-Iran counter attacks, our plight through Chennai streets is far more complex with the liberal scope a splinter landing on a passer-by, while in the countries of conflict missiles were precisely guided on to targets. So, scope of a heavy missile hitting a passer-by is ruled out. The scenario is somewhat unnerving, since the persons celebrating deepavali are in a  competitive mood letting of a variety of such pyro products , some known ,some unknown, some have bizarre attitude of “love thy neighbour”, even as they emit rich sparkles while moving off like unknown planets. Literally one has to find his/her way through such cross fire from houses on either side in any street. Even more alarming is the ‘directionless’ galloping of stray dogs that seek cover of safety from the noise of these bombshells; in their panic they intervene and staying guarded from those strays in an urgency is an exercise of sorts.   

The day’s print medium carried a news that firecracker sale in the current season has had a whopping value of Rs 6000/- crores [for Sivakasi ] and another 2000/-crores from Virudhunagar belt. These two towns of South Tamilnadu, have several manufacturing units –big and small thriving on fireworks industry. However, it is Sivakasi that holds pride for making ‘state of the art’ products in Pyro techniques and in printing technology. In Tamilnadu two places promise job opportunities   for any- one. They  are Tirupur near Coimbatore with a plethora of Garment manufacturing factories and Sivakasi with 2 major sectors of Firework industries and the most modern Printing houses in this ‘Dry, Sun-scorched’ town.  Through best part of the year Sivakasi has a dry climate. It is this Sun blessed –Sun bathedclimate making it  ideal for firework product making and for colour offset printing. Either trade needs that the product made quickly dries up and remains crisp, lest damp products should suffer poor marketability.

Equally, the printing job involves multilayer printing of three or more superimposed colour layers of image [which together present an elegant image in the final reckoning]. That each print layer gets dried up even as it rolls out of the machine is a ‘no-compromise’ demand to avoid smudging of dyes. It is a god-sent blessing of climate that the town has a majestic record of turnover in economic yield and has pan India clientele for matches, varied versions of fire crackers and other pleasant sparklers that mark festivity in all parts of the country.

The printing of calendars, Diaries and other annual stationery of prestigious organizations of India are elegantly executed by printing technicians of Sivakasi.

 

With no hesitation one may state that the fireworks industry of Sivakasi has a powerful R&D network that brings forth quite updated products in firecrackers and other elegant products of pyro technique.   Besides, the industry is able to face stiff competition and also abide by revised norms relating to safety, levels of pollution and other stipulations issued from time to time. No agency is able to enforce safety to the workers in firework manufacturing units, as the raw material is prone to go off exploding in flames by sheer friction during packaging. 

 A tiny town –Sivakasi has thus, registered a place of pride by hard labour and sticking to time schedule for releasing all firework products and Calendars / related stationery that have a relevance of ephemeral value. That in the current season firecrackers manufactured, have had a sale of 90%- is an important signal of sustenance.

                           ******************

Andaal –Sridharan

  Andaal –Sridharan ஆண்டாள் - ஸ்ரீதரன் ஸ்ரீதரன் ஸ்ரீரங்கம் ஆண்டாள் யானையின் அன்பு பாகன் . அவரது அறிவும் கூர்மையும் இறை பக்தி...