Wednesday, April 2, 2025

DIRECTOR - P MADHAVAN -3

 DIRECTOR - P MADHAVAN -3

இயக்குனர் பி மாதவன் -3

நிலவு வந்து பாடுமோ [ராமன் எத்தனை ராமனடி -1970] கண்ணதாசன் , விஸ்வநாதன், பி சுசீலா

 இது ஒரு குழப்பமான மன நிலையில்பெண்  பாடும் கீதம் . சுசீலா பொருள் உணர்ந்து சோகம் ததும்ப பாடிய பல பாடல்களில் இதுவும் ஒன்று . இதில் சோகம் என்பது பெண்ணுக்கும் , குதூகலம் என்பது ஆணுக்கும் இருப்பதை உணர்த்திய கவிதை . குதூகலத்தை வெளியிட பலர் விசில் ஒலி க்க இடை இசை அமைந்துள்ளது கூடவே ட்ரம் ஒலி இணைய அரங்கில் குதூகலம் அகத்தில் [பெண் மனதில்] சோகம். கொண்டவன் கண்டவளோடு ஆடித்திரிய அதற்கு பாடுவதென்றால் ? அதுவே பல்லவி 'நிலவு வந்து பாடுமோ ? சிலை எழுந்து ஆடுமோ? அதாவது நடக்காத எல்லாம் இங்கே நடக்கிறது. பலர் நிறைந்த சபையினிலே பண்பு கூட மாறுமோ ? என்று சரணத்தில் பெண் பாடிவிட்டு --மாறட்டும் மாறும்போது மாறட்டும் , தனை மறந்து ஆடட்டும் என்று வெறுப்பு கொள்கிறாள். இதையெல்லாம் சொல்லி விளக்க முடியாது என்று பொருள் பட

ஊமை கண்ட கனவையும், உறவு கொண்ட நிலையையும் , கருவில் உள்ள மழலையும் உருவும் காட்ட முடியுமோ? என்கிறார் கவியரசர் எதிர்காலத்தில் சாத்தியப்படலாம் என்பதாக "முடியட்டும் முடியும்போது முடியட்டும் ' என்று சாந்தம் கொள்ள முயலும் பெண்மனம் . அருமையான கவிதை , மென்மையான இசை, பாவங்கள் அனைத்தும் குரலில் , கேட்டு உணர இணைப்பு இதோ . 

NILAVU VANDHU PAADUMO [RAAMAN ETHANAI -1970] KD

MSV , PS https://www.youtube.com/watch?v=3kJm5268QTk

தத்திச்செல்லும் முத்துக்கண்ணன் [தங்கப்பதக்கம் -1974] கண்ணதாசன் , எம் எஸ் விஸ்வநாதன் , வாணி ஜெயராம் ---சாய் பாபா

இது ஒரு நேர்த்தியான பிக்னிக் பாடல். தாய் தந்தை சிறுவன் மூவரும் பங்குகொள்ள தாயார் பாட, பின்னர் குழந்தையை தூக்கிக்கொண்டு தந்தை “Twikle twikle little star , How I wonder what you are? Up above the world so high , Like a diamond in the sky” என்று  ரைம்ஸ் வகை   பாடலை நல்ல உச்சரிப்பில் பாடுகிறார் சாய்பாபா [டி எஸ் பாலையா வின் புதல்வர். அந்தக்கால கிறிஸ்தவக்கல்லூரி மாணவர் , ஆங்கில உச்சசரிப்பில் நேர்த்தியும் குரல்வளமும் கொண்ட இசைக்கலைஞர். எம் எஸ் வியின் இசைக்குழுவில் உறுப்பினர். பாடலை சிறப்பாக பாடியுள்ளனர். இணைப்பு இதோ 

 

THATHTHI CHELLUM [THANGAPADHAKKAM 1974] KD MSV VJ, SAIBABA https://www.google.com/search?q=thanga+pathakkam+tamil+movie%3Dthaththisellum+video+song+download&newwindow=1&sca_esv=84558b4239d0d7dc&sxsrf=AHTn8zrQAuWlGq3BMdAE5CI3QFdhzj60jg%3A1743495924289&ei=9KLrZ9uzEc2cseMPvbHv4Qg&oq=thanga+pathakkam+tamil+movie%3DTHATHTHISELLUM+VIDEO+SONG+&gs_lp=Egxnd3Mtd2l6LXNlcnAiN3RoYW5nYSBwYXRoYWtrYW0gdGFtaWwgbW92aWU

நல்லதொ ரு குடும்பம் [தங்கப்பதக்கம் -1974] கண்ணதாசன் , எம் எஸ் விஸ்வநாதன் ம் டி எம் எஸ், பி சுசீலா

குதூகலமான குடும்ப நிகழ்ச்சி யில் பாடல் . உல்லா சப்பாடல், திடீரென்று சிவாஜி கைகளில் தட்ட பாடல் வேக மெடுத்து ப்பாய ஒரே ஆரவாரம். அவ்வப்போது தவில் இசை சேர கேரட்கவே துடிப்பான பாடல். வண்ணம், கூட்டம் குதூகலம் ஆட்டம் பாட்டம் அமர்க்களம் இப்பாடல் ;மொத்தத்தில் விறுவிறுப்பான இசை பொழிவி.நை ரசிக்க இணைப்பு இதோ. 

Nalladhoru kudumbam kd msv tms ps

https://www.google.com/search?q=nallathoru+kudumbam+video+song+download&newwindow=1&sca_esv=84558b4239d0d7dc&sxsrf=AHTn8zolCWLophBQi-FLtJNqE05vUlHowA%3A1743496035369&ei=Y6PrZ9qgFpOaseMPkJTdAQ&oq=nallathoru+kudumbam+video+song+&gs_lp=Egxnd3Mtd2l6LXNlcnAiH25hbGxhdGhvcnUga3VkdW1iYW0gdmlkZW8gc29uZyAqAggAMgUQIRigATIFECEYoAEyBRAhGKABMgUQIRifBTIFECEYnwUyBRAhGJ8FMgUQIRifBUjSjgFQAFisd3ABeACQAQCYAbgBoAH5G6oBB

தை மாத மேகமிது [குழந்தைக்காக -1968] கண்ணதாசன், எம் எஸ் விஸ்வநாதன், சீர்காழி கோவிந்தராஜன், டி எம் எஸ்  குழுவினர்

ஒரு குழந்தையின் மென்மை குணாதிர்ஹத்திற்கு அடிமைப்பட்ட 3 திருடர்கள் , குழந்தையை மையப்படுத்திப்  பாடும்  பாடல். மேஜர் , மனோகர் , ராமதாஸ் என திருடர் கூட்டம் . அப்பாவிக்குழந்தை குஷியாக ஆட , திருடர்களின் கொண்டாட்டம் இப்பாடல். இறுதியில் திடீரென்று மேற்கத்திய வகையில் பாடி , கேட்க ஆனந்தம் இப்பாடல். இணைப்பு இதோ

 THAI MAADHA MEGAM IDHU KD MSV   SG, TMS , PS KUZHANDHAIKKAAGA 1968

https://www.google.com/search?q=tamil+movies+kuzhandhaikkaaga+thai+maadha+megam+ithu+song&newwindow=1&sca_esv=84558b4239d0d7dc&sxsrf=AHTn8zrQ4T6isKcbyakFF97OXSMjeqjjBg%3A1743497094852&ei=hqfrZ-7mM7S9seMPmtf_6A8&oq=TAMIL+movies+KUZHANDHAIKKAAGA+THAI+MAADHA+MEGAM+IDHU+&gs_lp=Egxnd3Mtd2l6LXNlcnAiNV

மதன மாளிகையில் [ராஜ பார்ட் ரங்கதுரை -1974] கண்ணதாசன், எம் எஸ் விஸ்வாநரதன் , டி எம் எஸ், பி சுசீலா

மிகவும் பிரபலமான பாடல் , காஃபி பாய் சொல்படி 3 வது +5 வது ட்யூனை இணைத்து உருவான பாடல். எனவே நாடக பாணியில் துவங்கி பின்னர் சம கால அமைப்புக்கு வந்து புகழ் பெற்ற பாடல். பாடலில் கவிதை நயமும் சொல்லாடல் அமைப்பும் வெகு உயர்தரம். இசையின் போக்கும் சஞ்சாரங்களும் கேட்போரை ஆட்கொள்ளும் திறன் மிகுந்த நேர்த்தியின் உச்சம். இசைக்கருவிகளின் தாக்கம் நம்மை அடிமைப்படுத்தும் வசீகரம் மிக்கது . பாடலுக்கு இணைப்பு இதோ .

MADHANA MALIGAIYIL 1974 RAJAPART RANGATHURAI KD MSV TMS PS

https://www.google.com/search?q=tamil+movie+rajapart+rangadurai+MADHAA+MALIGAIYIL+VIDEO+SONG+&newwindow=1&sca_esv=84558b4239d0d7dc&sxsrf=AHTn8zqHN5GMF145-7o39ZvP3IXWeuFSEA%3A1743497707579&ei=66nrZ46ZI6LgseMPkNjnyAo&ved=0ahUKEwjOupuMu7aMAxUicGwGHRDsGakQ4dUDCBA&oq=tamil+movie+rajapart+rangadurai+MA

இவ்வாறு நல்ல பாடல்களை வழங்கிய திரு பி மாதவனின் இயக்கத்தில் வந்த மேலும் சிலவற்றைக்காண்போம் .

நன்றி

அன்பன் ராமன்

Tuesday, April 1, 2025

LET US PERCEIVE THE SONG – 16

 LET US PERCEIVE THE SONG – 16

பாடலை உணர்வோம் -16

சொந்தமுமில்லே பந்தமுமில்லே [ஹலோ மிஸ்டர் ஜமீன்தார் -1965]  கண்ணதாசன் , விஸ்வநாதன் ராமமூர்த்தி , குரல் ஜி கே வெங்கடேஷ் .

இந்தப்பாடல் நகைச்சுவைப்பாடலா, கோமாளிக்கூத்தா, தத்துவப்பாடலா என்று பேசும் அளவிற்கு தகவல் கொண்டது.. இப்பாடல் 1963-64  காலகட்டத்தில் வந்தது. அதாவது 60 ஆண்டுகள் முன்னர். 

எனினும் இந்த 60 ஆண்டுகளில் இப்பாடல் போன்ற இன்னொரு பாடல் இருப்பதாக நான் அறியவில்லை. எவருக்கேனும் தெரிந்தால் தெளிவு படுத்துங்கள். திரைப்பாடல் உருவாக்கத்தில் , ஆழ்ந்த கவனம் கொண்டு உருவாக்குதலையும், அதற்கேற்ற இசையை வடிவமைப்பதிலும் பெரும் ஈடுபாடு நன்கு புலப்படுகிறது அது ஒரு புறம் இருக்க, இது நாள் வரை நாம் அடையாளப்படுத்தி வந்த பாடல்களோடு சரிநிகர் சமமாக இப்பாடலை வைத்துப்பார்க்க முடியுமா? எனில் சந்தேகம் தான் . 

ஆனால், சந்தேகம் இல்லாமல் இப்பாடல் ஆழ்ந்து கவனிக்க உகந்த பாடல் என்றே நான் கருதுகிறேன். அதற்கு 3 வலுவான காரணங்கள் உணர முடிகிறது. 

1 பழைய தமிழ் சினிமாவில் எந்த சூழலுக்கும் பாடல் புனையவும் அதற்குரிய இசை வடிவம் படைக்கும் பிரம்மாக்கள் இருந்தனர் என்று ஆணித்தரமான நிரூபணம் இது போன்ற பாடல்கள்.

2 எந்த பாடல் எனினும் அதில் கருத்தும் கள யதார்த்தமும் மேலோங்கி இருக்கும் அதற்கு ஒரு நல்ல உதாரணம் இந்தப்பாடல்.

3 பாடல் என்று வந்து விட்டால் இசையிலும், கருவிகளிலும் முழு ஈடுபாடு கொண்டு செயல் படுவது 1960களில் மிகவும் இயல்பான ஒன்று தான்.

1 பாடலின் சூழல் முடி திருத்து நிலையம் , 4, 5 பணியாளர்கள்   வேலை செய்ய முதன்மை நபர் பாடலை துவங்க ஏனையோர் தொடர்ந்து பாடுவதாக காட்சி.

2 கள யதார்த்தம்

சொந்தமுமில்லே பந்தமுமில்லே -சொன்ன இடத்தில் அமர்ந்துகொள்கிறார் [கஸ்டமர்]

மன்னருமில்லே மந்திரி இல்லே வணக்கம் போட்டு தலையை சாய்க்கிறார் [100% உண்மை, முதலில் பரஸ்பர வணக்கம், 'இங்க உக்காருங்க ' என்று 'அவர்' சொல்ல , வந்தவர் -அப்படியே செய்வார் , ஏன் எதற்கு என்றெல்லாம் ஒருநாளும் கிடையாது.] கள யதார்த்தம் எவ்வளவு அழகாக வந்துள்ளது பாடலில்

 3 பாடலில் வரும் எந்த கருத்தும் மறுக்கவோ மறைக்கவோ இயலாது.

[முடி] வளர்ந்துவிட்டால் மனிதரெல்லாம் குரங்குகள் ஆவார்,  நாங்கள் மழித்து விட்டால் மறுபடியும் மனிதர்கள் ஆவார்என்று சொல்லி  எந்தெந்த வயதினருக்கு எந்தவகை முடி  திருத்தம் என்று சொல்லி விட்டு இசையுடன் பாடல் தொடர்கிறது.

இருக்கும் போது தைலம் தேய்த்து அழகு பார்க்கிறார், இறங்கிவிட்டால் திரும்பிப்பார்க்க வெறுப்பு கொள்கிறார், அவரே வெறுப்புக்கொள்கிறார் என்று அனைவரும் பாட,

தத்துவம் சொல்கிறார் கவிஞர் “
“உள்ள இடத்தில் உள்ள வரைக்கும், உன்னை மதிக்கும் இந்த உலகம் , இறங்கி விட்டால் ஏறி மிதிக்குமே
. இதுதான் அதிகார பீடம்இழந்த மாந்தரின் நிலை என்று எளிதில் சொல்லும் பாடல்.

4 கன்னட திரையில் மிகச்சிறப்பான இசை அமைப்பாளர் ஜி கே வெங்கடேஷ் என்பதை பலரும் அறிவோம். தமிழில் சில பாடல்கள் பாடியுள்ளார். அன்றைய சென்னையில் தென் இந்திய சினிமாக்கள் உருவாகி வந்த காலம், எனவே பன்மொழி திறமைகள் நெருங்கிப்பழகி வந்த சூழல் அன்று நிலவியது. பாடலை ஜி கே வெங்கடேஷ் [பாடகர்/ இசை அமைப்பாளர்] பாடியுள்ளார். ஆரம்பத்தில் எம் எஸ் வி குழுவில் முக்கியஸ்தர், பல இசைக்கருவிகளை இயக்கும்  திறமைசாலி [இளையராஜாவின் ஆரம்பகால ஆசான்].     எம் ஆர் ராதாவுக்கு அவர் குரல் நன்கு பொருந்துகிறது. 

இதையெல்லாம் விட இது ஒரு 'ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு ' வகைப்பாடல். ஒப்பீடு செய்வதற்கு க்கூட வேறு பாடல் இருக்கிறதா? இல்லை என்றே நினைக்கிறேன். இத்துணை சிறப்புகளால் இந்தப்பாடலை இங்கே பேசியுள்ளேன் . பிழை எனில் மன்னிப்பீர். இப்பாடலையும் பல முறை கேட்டு எண்ணற்ற சிறப்புகளை புரிந்து கொள்ளுங்கள்

பாடலுக்கு இணைப்பு இதோ Sondhamumille bandhamumille

 https://www.youtube.com/watch?v=OkggjnArQds

நன்றி

அன்பன் ராமன்

CHANGING TIMES-6

  CHANGING TIMES-6    கால மற்றம் -6 பழைய பாடல்களின் வளம் ஏன் பேசு பொருள் ஆகிறது என்ற கேள்வி எழுவது இயற்கை தான் . அதற்கான அ...