LET US PERCEIVE THE SONG – 16
பாடலை உணர்வோம் -16
சொந்தமுமில்லே பந்தமுமில்லே [ஹலோ மிஸ்டர் ஜமீன்தார்
-1965] கண்ணதாசன் , விஸ்வநாதன் ராமமூர்த்தி
, குரல் ஜி கே வெங்கடேஷ் .
இந்தப்பாடல் நகைச்சுவைப்பாடலா, கோமாளிக்கூத்தா, தத்துவப்பாடலா என்று பேசும் அளவிற்கு தகவல் கொண்டது.. இப்பாடல் 1963-64 காலகட்டத்தில் வந்தது. அதாவது 60 ஆண்டுகள் முன்னர்.
எனினும் இந்த 60 ஆண்டுகளில் இப்பாடல் போன்ற இன்னொரு பாடல் இருப்பதாக நான் அறியவில்லை. எவருக்கேனும் தெரிந்தால் தெளிவு படுத்துங்கள். திரைப்பாடல் உருவாக்கத்தில் , ஆழ்ந்த கவனம் கொண்டு உருவாக்குதலையும், அதற்கேற்ற இசையை வடிவமைப்பதிலும் பெரும் ஈடுபாடு நன்கு புலப்படுகிறது அது ஒரு புறம் இருக்க, இது நாள் வரை நாம் அடையாளப்படுத்தி வந்த பாடல்களோடு சரிநிகர் சமமாக இப்பாடலை வைத்துப்பார்க்க முடியுமா? எனில் சந்தேகம் தான் .
ஆனால், சந்தேகம் இல்லாமல் இப்பாடல் ஆழ்ந்து கவனிக்க உகந்த பாடல் என்றே நான் கருதுகிறேன். அதற்கு 3 வலுவான காரணங்கள் உணர முடிகிறது.
1 பழைய தமிழ் சினிமாவில் எந்த சூழலுக்கும் பாடல் புனையவும்
அதற்குரிய இசை வடிவம் படைக்கும் பிரம்மாக்கள் இருந்தனர் என்று ஆணித்தரமான நிரூபணம்
இது போன்ற பாடல்கள்.
2 எந்த பாடல் எனினும் அதில் கருத்தும் கள யதார்த்தமும்
மேலோங்கி இருக்கும் அதற்கு ஒரு நல்ல உதாரணம் இந்தப்பாடல்.
3 பாடல் என்று வந்து விட்டால் இசையிலும், கருவிகளிலும்
முழு ஈடுபாடு கொண்டு செயல் படுவது 1960களில் மிகவும் இயல்பான ஒன்று தான்.
1 பாடலின் சூழல் முடி திருத்து நிலையம் , 4, 5 பணியாளர்கள் வேலை செய்ய முதன்மை நபர் பாடலை துவங்க ஏனையோர்
தொடர்ந்து பாடுவதாக காட்சி.
2 கள யதார்த்தம்
சொந்தமுமில்லே பந்தமுமில்லே -சொன்ன இடத்தில் அமர்ந்துகொள்கிறார்
[கஸ்டமர்]
மன்னருமில்லே மந்திரி இல்லே வணக்கம் போட்டு தலையை சாய்க்கிறார்
[100% உண்மை, முதலில் பரஸ்பர வணக்கம், 'இங்க உக்காருங்க ' என்று 'அவர்' சொல்ல , வந்தவர்
-அப்படியே செய்வார் , ஏன் எதற்கு என்றெல்லாம் ஒருநாளும் கிடையாது.] கள யதார்த்தம் எவ்வளவு
அழகாக வந்துள்ளது பாடலில்
3 பாடலில் வரும்
எந்த கருத்தும் மறுக்கவோ மறைக்கவோ இயலாது.
[முடி] வளர்ந்துவிட்டால் மனிதரெல்லாம் குரங்குகள் ஆவார்,
நாங்கள் மழித்து விட்டால் மறுபடியும் மனிதர்கள்
ஆவார்என்று சொல்லி எந்தெந்த வயதினருக்கு எந்தவகை
முடி திருத்தம் என்று சொல்லி விட்டு இசையுடன்
பாடல் தொடர்கிறது.
இருக்கும் போது தைலம் தேய்த்து அழகு பார்க்கிறார், இறங்கிவிட்டால்
திரும்பிப்பார்க்க வெறுப்பு கொள்கிறார், அவரே வெறுப்புக்கொள்கிறார் என்று அனைவரும்
பாட,
தத்துவம் சொல்கிறார் கவிஞர் “
“உள்ள இடத்தில் உள்ள வரைக்கும், உன்னை மதிக்கும் இந்த உலகம் , இறங்கி விட்டால் ஏறி
மிதிக்குமே” . இதுதான் அதிகார பீடம்இழந்த மாந்தரின் நிலை என்று எளிதில் சொல்லும் பாடல்.
4 கன்னட திரையில் மிகச்சிறப்பான இசை அமைப்பாளர் ஜி கே வெங்கடேஷ் என்பதை பலரும் அறிவோம். தமிழில் சில பாடல்கள் பாடியுள்ளார். அன்றைய சென்னையில் தென் இந்திய சினிமாக்கள் உருவாகி வந்த காலம், எனவே பன்மொழி திறமைகள் நெருங்கிப்பழகி வந்த சூழல் அன்று நிலவியது. பாடலை ஜி கே வெங்கடேஷ் [பாடகர்/ இசை அமைப்பாளர்] பாடியுள்ளார். ஆரம்பத்தில் எம் எஸ் வி குழுவில் முக்கியஸ்தர், பல இசைக்கருவிகளை இயக்கும் திறமைசாலி [இளையராஜாவின் ஆரம்பகால ஆசான்]. எம் ஆர் ராதாவுக்கு அவர் குரல் நன்கு பொருந்துகிறது.
இதையெல்லாம் விட இது ஒரு 'ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு ' வகைப்பாடல். ஒப்பீடு செய்வதற்கு
க்கூட வேறு பாடல் இருக்கிறதா? இல்லை என்றே நினைக்கிறேன். இத்துணை சிறப்புகளால் இந்தப்பாடலை
இங்கே பேசியுள்ளேன் . பிழை எனில் மன்னிப்பீர். இப்பாடலையும் பல முறை கேட்டு எண்ணற்ற
சிறப்புகளை புரிந்து கொள்ளுங்கள்
பாடலுக்கு இணைப்பு இதோ
Sondhamumille bandhamumille
https://www.youtube.com/watch?v=OkggjnArQds
நன்றி
அன்பன் ராமன்
No comments:
Post a Comment