செருப்பு பிஞ்சுடும்
இது என்ன ரொம்ப கேள்விப்பட்ட பாஷையா இருக்கிறதே. ஆமாம் கோபம் வந்தால் இதுவே கை வந்த சொல்லாடல். அது எதற்கு இப்போது என்கிறீர்களா? காரணம் இல்லாமலா இந்த வசனம்? ஒரு 10 வருடங்களுக்கு முன்பு நம்ம 'கழுகு' கோயிலில் பாடிக்கொண்டே போனார். என்ன பாட்டு? அதுதான் இப்ப topic. 'மன்மத லீலையை வென்றார் உண்டோ ?' இது பாகவதர் பாட்டா அல்லது பாலச்சந்தர் எடுத்த மன்மத லீலை படத்தில் வருவதா?. எதுவானால் என்ன ? அச்சு அசலாக, பாகவதர் போல சற்றே மூக்கில் தம் பிடித்து, மன்மத லீலையை என்று உரத்த குரலில் 'கழுகு' பாட முன்னால் சென்ற மெட்ராஸ் பொண்ணு [காலேஜ் படிப்பு போலும்], தன்னைப்பார்த்து தான் இவன் பாடுகிறான் என்று எண்ணிவிட்டாள் போலும், சடாரென்று திரும்பி செருப்பு பிஞ்சுடும் என்று கத்த , கழுகோ பனங்காட்டு நரி, அதுவும் உள்ளூர் பனங்காடு , மேலும் இளம் நரி [சுமார் -26 வயசு]-unmarried நரி.
கழுகு, "பழைய செருப்பு பிஞ்சுதான் போகும்". அவளோ , நீ பாடினத்துக்கு தான் சொன்னேன் என்றாள். 'எங்கே திரும்பியும் சொல்லு என்றது கழுகு . என்ன? சொல்றதா இதோ பார் என்று HAND BAG ஐ திறந்து புத்தம் புதிய செருப்பை வலதுகையில் தூக்கிக்கொண்டு கழுகைப்பற்றி அறியாதவளாக முன்னேறி வர, மின்னல் வேகத்தில் கழுகு அவள் கையை செருப்புடன் கெட்டியாக பிடித்துக்கொண்டு, வாட்ச்மன் சுந்தரத்தை கூப்பிட , அவன் ஓடி வந்து என்ன சார் என்றான். இவள் ஓடப்பார்க்க , கழுகு பிடியை விடுவதாக இல்லை.
அப்போது தான் யானையை கூட்டிக்கொண்டு வந்த ஸ்ரீதரன் யானையை வழியிலே நிறுத்திவிட்டு என்ன என்ன என்று ஓடி வர, கழுகு பாருங்கோ, கோவிலுக்குள்ளே செருப்பை கொண்டு வந்ததே தப்பு, இவளை விடாதீங்க executive officer ரூம்ல உக்கார வெச்சு போலீஸ் காம்ப்லெய்ன்ட் குடுங்க என்று சொல்ல, மெட்ராஸ் ஓடப்பார்த்து சற்றே நகர்ந்ததும், பிரம்மாண்ட யானை வழியில் நிற்பதைப்பார்த்து நடு நடுங்கி சார் சார் என்று மெல்லிய குரலில் அழ, கழுகு சொன்னது, செருப்பு பிஞ்சுடும் னு சொன்னியே இப்பொது ஒனக்கு முதுகு பிஞ்சுடும் EO நாயர் பக்கத்து வீடு தான் ஒன்ன சும்மா விடப்போறதில்லை நான் என்று மிரட்டி, சுந்தரம் இவளை விடாத என்று தனது செல்வாக்கை நிலை நாட்டினார் இளம் ராமசாமி.
EO ஆபீஸ் புழுக்கத்தில் மெட்ராஸ் தொப்பலாக நனைந்து விசும்பிக்கொண்டிருந்தது. கழுகு சொல்லியது நான் வீட்டுக்கு போயிட்டு 6.30 க்கு வரேன், EO அப்பதான் வருவார், நான் வந்து பேசிக்கிறேன் இவளை விட்டுடாத என்று EO ஆபீஸ் பியூன் ராஜமாணிக்கத்துக்கும் உத்தரவு போட்டு, அவளை மூலையில் உட்கார வைத்துவிட்டு, சந்திரபாபு பாடல் “பொம்பளையெல்லாம் ஆம்பளை போலே ஆடவும் கூடாது" என்று பாடிக்கொண்டே வீட்டுக்குப் பறந்தது. EO திருச்சிக்கு போய் இருக்கிறார் ராத்திரி வந்தால் வருவார் இல்லை எனில் நாளைக்குத்தான் என்று ராஜமாணிக்கம் அக்கௌன்டன்ட் குடுமி ரெங்கநாதனிடம் சொல்ல, மெட்ராஸ் சோகத்தில் ஆழ்ந்தது.
6.30 PM
டாண் என்று கழுகு பிரசன்னம். EO நாளைக்குத்தான் வருவார் என்று குடுமி பஞ்சக்கச்சத்தை
சரி செய்துகொண்டு, டிபன் BOX ஐ தூக்கிக்கொண்டு புறப்பட. அழுது வீங்கிய கண்ணுடன் மெட்ராஸ்
சோகமாக கழுகைப்பார்த்து கும்பிடு போட, "என்ன?" என்றது கழுகு . சார் ராத்திரிக்கு
ட்ரெயின் னுக்கு போகணும் என்றாள். “சரி செருப்பை பிச்சுட்டு தான் போவேன் னு வீர வசனம்
பேசின யே, யார் செருப்பு பிஞ்சுடும் -பார்ப்போமா” என்று மிரட்ட சார் தெரியாம பேசிட்டேன்
சார் மன்னிச்சுடுங்க என கை கூப்பி நின்றாள். சரி ஒழிஞ்சு போ இனிமே உன் மெட்ராஸ் வேலைய
வெளியூர் ல காட்டாத -போ என்று கழுகு அவளை விடுவித்தது. அப்பாடா என்று ஓடிய மெட்ராஸ்
திரும்பிப்பார்க்கவில்லை என சொல்லவும் வேண்டுமோ. ரங்கநாதஸ்வாமி திருவடியை சேவிக்க வந்தவள்
அவசரப்பட்டு, தனது திருவடியையே காப்பாற்றிக்கொண்டு ஓட வேண்டியதாயிற்று. கழுகா கொக்கா இல்ல இல்ல கழுகு
கழுகே தான்.
பேரா. ராமன்.
பிரம்மச்சாரி கழுகின் சேஷ்ட்டை கொஞ்சம் ஓவர் தான். ஶ்ரீரங்கத்து வாலி நம்பர் டூ வாக இருப்பாரோ?
ReplyDeleteK. Venkataraman
ஐயா, சேட்டை யை துவங்கியது பெண். மற்றவை கழுகின் செயல்
ReplyDelete