Sunday, October 2, 2022

தமிழ் விளையாடுது

                            தமிழ் விளையாடுது      

இதில் வரும் உரையாடல்கள் முற்றிலும் கற்பனையே.  ஆயினும் வியப்பிற்கோ, நகைச்சுவைக்கோ பற்றாக்குறை  இருக்காது. ஒரு பலமுனை தேர்வு அரங்கில் ஒன்று கூடிய வேலை தேடும் மனிதர்களின் இடையே முகிழ்ந்த நெருக்கம் மற்றும் நட்பின் கலவை ; எனவே வேற்றுமைகளை புறந்தள்ளிவிடலாம்.

சென்னகேசவலு [ வட சென்னை] , பாண்டியன் [வட மதுரை -திண்டுக்கல் அருகில் ] சின்னச்சாமி [வடவள்ளி -கோவை] அபூபக்கர் -வடவார் தஞ்சை அருகில்], அல்போன்ஸ் [வடசேரி -நாகர்கோயில் அருகில்] சுப்பையா [தென்காசி வடக்கு பகுதி]  அவரவர் வட்டார வழக்கில் உரையாட நமக்கு விருந்தாக அமைகின்றது

 சென்னகேச : நாஸ்தா துண் டீங்கோ -   ஏனையோர் மலங்க   மலங்க விழிக்க  மீண்டும் அவன் டிபன் தூண் டீங்கோ என்றதும் , உப்ப தான் போவ் ணும் என்றான் சின்னச்சாமி . சிலர் முழிக்க மீண்டும் செ . கே : போத் தாவல,

இன்னாங்கடா மண்ட காஞ்சுரும் போலருக்கு என்றான் பாண்டியன் .

 இப்ப இன்னா ன்ற நீ என்றான் செ .கே ; ஒண்ணும் வெளங்குதில்லை ங்கிறேன் . காலைல சாப்புடாம ஏக தேசம் ஏதும்  வெளங்காதுல்லா - இது அல்போன்ஸ்  .

அது சரி ஏன்ங்கொணா ங்கொணாண்றீங்க” என்றான் பாண்டியன்

ஆர்லே என்றான் சுப்பையா

உடனே செ . கே வை,  கை  காட்ட ,சென்ன கேசவுலு -- ஜல்ப்பு என்றான்

ஜல் ப்பா என்று பெரிய கோரஸ் ,, அஹ்க்க அஹ்க்கங் என்றான் செ . கே அப்புண்ணா அப்புண்ணா என்று தென்னகம் கோரஸாக கிளம்ப ,

செ .கே: கோள் டு என்றான்  தடுமன் னு சொல்லுங் என்றான் பாண்டியன்

அது இன்னா? --செ .கே

அதான் -கோ ள் டு என்றான் பாண்டியன்

உங் க்ளோட படா பேஜாரா பூட்க்ஷே --செ .கே

என்னங்கடா பூட்க்ஷே கோட்க்ஷே னு --மண்ட காஞ்சிரும்பொருக்கு -பாண்டியன்

சரி இன்ரியூ எப்பமாம் - இது  சுப்பையா எப்பமும் இருக்கட்டு , ரிசல்ட் சொன்னானுவன்னா அப்பமே பெய்டலாம் என்று தொடர்ந்தான் சுப்பையா

அது ஒன்ற கவல நான் இப்ப எதையாது திங்கோணு. - சின்னச்சாமி

நான்போய் தொளுகை வெக்கணும் முட்ட பர்ட்டா அடிச்ட்டு தான் இன்டர்வ்யூ என்றான்  அபூபக்கர்     

 நானும் வருதேன்”- சுப்பையா    தொளுக வெக்கவா?-- அபூபக்கர்            ‘ஆங் முட்ட பர்ட்டா திங்க’ -சுப்பையா ;

சுப்பையா ;” இன்ரியூ னு கேட்டாலே அந்தாக்குல பயந்து வருது இங்கிலுசுல வேற கேப்பானுவ பொலுக்கே என்ன செய்ய -பகவதி விட்ட வளி இப்பமே பெய்டலாம்னு இருக்கு. வேலயே தந்தாலும் மெட்றாசு பக்கம் போடுவானுவ அங்க பூராவும் சப்பட்ட பயலுவ ல்லா .

இங்கிலீஸி நால்லாம் ஜமால் ச்சிறுவேன் என்றான் பாண்டியன்.

நான் எப்படியும் போஸ்டிங் வாங்கிருவேன் அதும் பண்டார வாடையிலேயே போடவெச்சிருவேன் -அபூபக்கர் .

அப்பம் எனக்கு தென்காசில வாங்கித்தாரீயளா -சுப்பையா.

எங்ஙண போட்டாதேங் என்ன? வேலைனு ஒண்ணு கிடைக்குமா னு அலைஞ்சுக்கிருக்காய்ங்கே இவங்கெ பக்கத்து தெருவிலேயே வேல கேக்குறாய்ங்கெ . ரொம்பத்தான் தெனாவட்டா திர் ராய்ங்கெ .இப்புர் ருந்தா என்னத்த வெளங்கும் ? சுத்த கிறுக்கய் ங்க ளா இருப்பாய்ங் பொருக்கு , என்னா  எளவோ? சில் ஓட்டம் இருந்தா இப்பிடித்தேங் -பாண்டியன்

இவை அனைத்தையும் சரியாக புரிந்து கொண்டவர்கள் பல வட்டார வழக்குகளை தெரிந்து கொண்டவர்கள். ஏனையோர் அறிந்தோரிடம் விளக்கம் பெறுக. எத்துணை வகையான பேச்சுகள். ?

பேரா. ராமன்   

1 comment:

  1. வடக்கன்குளம் (நெல்லை) வருணாண்டி இவங்க பேச்சை க்கேட்டுட்டு என்ன சார்வாள் என்னல்லாமோபேசறேள் எனக்கு ஒண்ணும் புரியலை. நீங்க எல்லாம. தூரமா? இங்க தள்ள வாங்க .அங்க மாடு நிக்கில்லா . முட்டிடும் அந்த முடுக்கிலே போய் நின்னுக்கிட்டு பேசலாமே
    வெங்கட்ராமன்

    ReplyDelete

TM SOUNDARARAJAN-38

  TM SOUNDARARAJAN-38 டி எம் சௌந்தரராஜன் -38                    POSTING NO. 1225  திரு டி எம் எஸ் அவர்களின் குரலில் வெளிவந்த பாடல்கள் ...