Tuesday, October 18, 2022

தமிழில் சில உளறல்கள்

                                                    தமிழில் சில உளறல்கள்

              [இது எனது 400 வது பதிவு. தங்களின் ஆதரவிற்கு நன்றி ]

"பெரியோர்கலே , தாய் மார்க லே , இன்று மாலை சரியாக ஏலு மணி அலவில் நமது சித்தி [அதாவது பெரியம்மா அல்ல எனும் பொருள் பட] விநாயகர் கோவிலில், மதுரை மீனாச்சி பல்லி மானவிகலின் பாட்டு நிகல்ச்சி நடைபெறும் . அனைவரும், திரலாக வந்திருந்து சித்தி வ்நாயகர் அருல் பெற்று செல்லுமாறு அன்புடன் கேட்டு கொல்ல படுகிறோம்.

இன்றைய ஒலிபெருக்கி அமைப்பு 'சிவா ரேடியோஸ் 'மதுரை -5 , எங்கலிடம் , மின்   சார வசதி உல்ல இடங்கலிலும் , அல்லாத இடங்கலி லும், புத்தம் புதிய பாடல்கலை கொண்ண்டு ஒலி / ஒலி அமைத்து  நிகல் ச்சி , குறைந்த செலவில் நடைபெறுவோம் . தங்கலின் மேலான ஆதரவுக்கு நன்றி சிவா ரேடியோஸ் திருப்பரங்குன்றம் .   

இன்னுமோர் அமைதியான உளறல் , தமிழகத்தில் விரைவுச்சாலையில் அடிக்கடி இரண்டு பொய்கள் தென்படுவதைக்காணலாம் . "கும்பகோணம் டிகிரி பில்டர் காபி " இதில் நான்கு பொய்கள் அடக்கம். ஆம் கும்பகோணத்திற்கு, இந்த இடத்திற்கும் ஸ்நான ப்ராப்தி என்னும் தொடர்பு கூட கிடையாது, டிகிரி காபி என்பதை விட THIRD DEGREE COFFEE என்பதே பொருத்தம், அதில் FILTER என்னும் சொல் வடிகட்டிய பொய் என்பதனை சுட்டிக்காட்டும்  சான்று அவ்வளவே.

மற்றுமோர் பிரகடனம் இதே சாலையில் ஐயங்கார் பேக்கரி பல வித நாமகரணங்களுடன் . உதாரணமாக வெள்ளைச்சாமி ஐயங்கார் பேக்கரி உரிமை : பேச்சியம்மாள் அல்லது கருப்பசாமி ஐயங்கார் பேக்கரி உரிமை : நாச்சிமுத்து அல்லது இதுபோன்ற பெயர்களில்.

இவற்றை ஏளனம் செய்யும் தரத்தில் சில கல்வியாளர்கள், பின்னணிப்பாடகர்கள், செய்தி அறிவிப்பாளர்கள் /அறிவிப்பாளினிகள் என்று தமிழ்க்கொலை பட்டாளம் இயங்கிவருகிறது . இவர்கள் கூலிப்படையினர் அல்லர் ஆயின் கூலி பெற்றுக்கொண்டு தமிழை க்கொலை செய்யும் பாதகர்கள். உதாரணமாக ஒற்றை கொம்பன் யானை தாக்கியதில் பெற்ற குழந்தையை நழுவ விட்ட தாய் எனும் தகவலை இவர்கள் படிப்பது

“ஓட்றை கொம்பண் யாணை   தாக்கியதில் பெட்ற குளந்தையை நளுவவிட்ட  தாய்” .

விவாதத்தில்  பேசும் சிலர் “மஞ்சல் விளை  வீல்ச்சிக்கு அரசு காப்பீ டு     வளங்கி அரசானை பிறப்பிக்காமல் காளம் தால்துகிறது.. காலான் தொலி லை மேம்படுத்த குளு அமைக்கவேண்டும் என்று உளறித்தள்ளுவார்கள்.

வேறு சிலர் மிகுந்த எச்சரிக்கை உணர்வோடு சரியான இடத்தில்  தவறாக பேசுவார்கள். அதாவது "நீ என்ன சாப்பிட்டாய் ? என்ற வினாவிற்கு மிக கவனமாக புழி குழம்பு என்பார்கள். ஏய் சரியாகச்சொல்லு என்றதும் புலி க் குளம்பு என்று தடுமாறுவார்கள்.  

மொழிக்காகவே வாழ்வதாக முழக்கமிடும் அரசியல் கூடாரங்கள் நடத்தும் காட்சி ஊடகங்களில் அவ்வப்போது வெளியிடப்படும் SCROLL எனப்படும் வாசகங்கள் அனேகமாக "ஒருமை", “பன்மை” எனும் இலக்கண மரபுகளைப் பற்றி கவனமில்லாமல் ஏனோ தானோ என்று 2 ம் வகுப்பு படிப்பவன் போல பிதற்றுவதைப் பறைசாற்றி,  மொழியையும், கொள்கையையும் ஒருசேர அவமதிப்பது அன்றாட நிகழ்வு.

சான்றாக:  இந்த ஆண்டின் நலத்திட்ட உதவிகல், மாவாட்ட தலைநர்களில் நாளை அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் துவங்குகிறது.                                                                         

பேரா ராமன்                                  

 

3 comments:

  1. Hahaha true. It's trendy to speak like that.

    ReplyDelete
  2. திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணி
    திருச்செந்தூரிலும்
    மணப்பாறை முருக்கு மலேயாவிலும்
    ஆம் பூர் பிரியாணி அலங்காநல்லூரிலும்
    ஐயங்கார் கேக் ஐயம்பேட்டையிலும்
    மதுரை முனியாண்டியை மான்செஸ்டரிலும்
    காணலாம்
    கொள் நெல்முதல். இல்லை இல்லை எள் நெல்முதல் sorry நெல் கொள் முதல்
    சரி சரி டிஸம்பர் மாதம் சதந்திர நாளன்னிக்குப் பார்ப்போம்.
    வெங்கட்ராமன்

    ReplyDelete
  3. மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி.இப்போதுள்ள அரசியல் தலைவர்களில் அழகு தமிழில் பிழையின்றி பேச எத்தனைபேரால் முடியும்? The irony is தமிழ் எங்கள் மூச்சு என்று முழங்கும் இவர்களால்தான் தமிழ் மெல்ல செத்துக்கொண்டிருக்கிறது.

    ReplyDelete

TEACHER BEYOND YOUR IMAGE-16

  TEACHER BEYOND YOUR IMAGE-16 ஆசிரியர் - உங்கள் பிம்பத்தை தாண்டி-16 நீ ங்கள் பேசும் ஒவ்வொரு சொல்லும்    கவனம் பெறும் . அதனால் , ...