Thursday, October 20, 2022

பாவ யாமி ரகு ராமம்

                                                         பாவ யாமி  ரகு ராமம்

சமீபத்தில் கே. கு வை நிலை குலையச்செய்த முத்து இப்போது வெளியூர் திருமண நிமித்தம், கே. கு குறித்த தேதி, நேரம், அட்டவணைப்படி, நீண்ட கரண்டி , ஜாரணி , ஒரு ஜோடி வேஷ்டி, வெள்ளைப்பனியன் , நாமக்கட்டி, ஸ்ரீ சூர்ண குச்சி, சந்தன பவுடர் , கருப்பு சாந்து உள்ளிட்ட அலங்கார சாதனங்களுடன் பிரத்யேகமான அவனது அபிமான த. பி சொக்கலால் பீடி கட்டுகள்  சகிதம் ஈரோடு நோக்கி பயணம். கே. கு தேவையான பணம் மற்றும் எச்சரிக்கை இரண்டையும் தந்துவிட்டு சென்னையில் ஒரு கிரஹப்பிரவேசம் சமையல் வேலக்கு போய்  விட்டு அங்கிருந்தே நேராக ஈரோடு நிகழ்ச்சிக்கு வந்துவிடுவான், கே.கு. இப்போது வேறு பொறுப்புகளுக்கு முத்து பயன்படுத்தப்படுகிறான். ஆனாலும்அவனது ஐயப்பாடுகளுக்கு குறைவில்லை. 

எனவே கே. கு அவனைப்பார்த்ததும், குறை ஒன்றும் இல்லை கோவிந்தா என்று முன்கூட்டியே பாடி, மயக்கம் வராமல் தற்காத்து கொள்கிறான்.. என்ன தற்காத்துக்கொண்டால் என்ன, முத்து திடீரென்று ஏடாகூடமாக  ஏதாவது செய்வதில் கை தேர்ந்தவன். எவ்வளவு "அர்ச்சனை" வாங்கினாலும். 'அண்ணே' என்னாமல்  முத்துவின் பேச்சும்,. அபிஷ்ட்டூ என்று  கே.கு வின் ஏச்சும் இல்லாமல் இருவரும் சந்திப்பதே இல்லை. .                   அபிஸ்டு ன்னா என்னண்ணே என்பான் முத்து. 'நீ தான்' என்பான் கே.கு . 'சொல்லுங்கண்ணே' என்று நச்சரிப்பான் முத்து ஒன்ன மாதிரி குளிக்காம நெத்தில இட்டுக்காம இருக்கறவன் தான் அபிஷ்ட்டூ. .

அது எப்பிடீங்க அபிஸ்டு ஆகும் ? என்பான்.                                     இப்போது தெளிவான பதில் சொல்லமுடியாமல் கோபம் வர கே. கு அவனை முறைப்பான்.

 சரி நீ  போய் நெத்தி க்கு இட்டுக்கொண்டு வா என்பான் கே.கு. .      முத்து: :"பட்ட போடவா , ராமம் போடவா?" என்பான் /

கே.கு: ராமமா என்று மிரள்வான் . உடனே முத்து :இவுங்க ராமம் போடறவுங்க தானே என்பான். கே.கு தலையில் அடித்துக்கொள்ளாத குறையாக டேய் ராமம் இல்லடா , நாமம் டா எத்தனாவை தடவ டா சொல்றது.? 

முத்து: இந்தக்கல்யாணக்காரவுங்க ராமம் [உடனே வாயை மூடி விட்டு] கவனமாக நாமம் போடறவுங்க தானே  ?

கே.கு ; “நாமம் போடறவுங்க இல்லட [முத்து: அப்ப பட்டயா?]             கே.கு “டேய் அதில்லடா ஒழுங்கா பணம் தந்துடுவாங்க டா -நாமம் போடறவங்க இல்லைடா” . முத்து: ‘எனக்கு சரியா உங்க பாச யே வரமாட்டேங்குது’.

கே.கு : டேய் ராமம் இல்ல, அது நாமம் , அப்புறம் அவங்க[நாமம் ] போடறவங்க இல்ல; [நாமம்] போட்டுக்கறவங்க 

முத்து: இப்போது குழந்தைபோல் குதித்துக்கொண்டு, இப்பவும் எனக்கு    வெளங்கல. . சரி நான் நாமம் போட்டுக்கிட்டு வாறன் என்று கிளம்பியவன் நின்றுவிட்டான்             

என்னடா அசமஞ்சம் மாதிரி நிக்கற , வேலையைப்பாருடா என்றான் கே.கு.

முத்து: அதில்லண்ணே , வன்கொலையா , வெண்கலமா எதை போடணும் னு யோசிக்கிறேன்.

கே.கு : வன் கொலை இல்லடா ,தென் கலை, இன்னொண்ணு வடகலை

முத்து : இப்ப தெரிஞ்சிருச்சு, உப்பிலி அப்பன் கோயில் ல இருக்கது தென் கலை,தேன்

ஆத்திரம் பொங்க முறைத்தான் கே.கு. டேய் அதெல்லாம் வேணாம் நீ ஒண்ணு மட்டும் போட்டுக்கடா

முத்து: வெள்ளையா?  சிவப்பா?

கே.கு டேய் ஒன்னு மட்டும் னா சிவப்பு தாண்டா . முத்து : ஏன் மஞ்சல் இருக்கில்ல என்றான் அதுக்கு ஏதோ மருந்து பேர் மாதிரிசொல்லுவீங்களே ?

இப்போது தோத்தாத்திரி எனும் சுப்பையா சொன்னான் அது சிவப்பு /  மஞ்சள் ஸ்ரீ சூர்ணம்

டேய். அதெல்லாம் ரொம்ப ஆச்சாரமானவன்களுக்குடா . நீ சிவப்பு மட்டும் போட்டுக்கடா

கே.கு : நீ பந்தி பக்கம் போக வேணாம் இங்கயே அடுப்படில நான் சொல்றத செய்.

முத்து: அதுக்கு எதுக்கு ராமம்?

உனக்கு, வேலையும். சம்பளமும் வேணுமா இல்ல வீட்டுக்குப்போய், ஹோட்டல் ல மாவு அரைக்கப்போறியா? 3 கிலோவுக்கு 45 ரூவாயும், ஒரு காபியும் தருவான், நாமம், பூணல் எதுவும் வேண்டாம் என்றான் கே. கு.

வாயடைத்து சிலை ஆனான் – முத்து.

பாவம் [பாவ] யம்மி உணவு [யாமி] தேடி வந்தவனை ராகு ஆட்ட [ரகு] நாமம் என்பதை ராமம் என்றதால் “பாவ யாமி ரகு ராமம்” என்று பெயரிட்டுள்ளேன், இசை அன்பர்கள் பொறுத்தருள்வீர் .

பேரா. ராமன்

2 comments:

  1. இந்தப் போராட்டமெல்லாம் ஐயங்கார் கல்யாணத்திலதான் . ஐயர் கல்யாணம்னா பட்டைய போட்டா போதும் என்றான் கே.கு்
    அப்ப பட்டைய போட்டுட்டு செர்வ் பண்ணமுடியுமா என்றான் முத்து.
    அட அந்தப்பட்டையை நான் சொல்லலை வீபூதிப்பட்டைடா மக்கு.
    அப்ப கொஞ்சம் வாயில பட்டையும் நெத்தியில பட்டையும் போட்டுக்கலாம்ல என்றதும்
    கே.கு எதாவது எடகூடமா செஞ்சு தொலைக்காதே என்றான்.
    வெங்கட்ராமன்

    ReplyDelete
  2. Times have changed. Society is becoming cosmopolitan and even in Orthodox brahmin families, orthodoxy has been given a go bye. Attending weddings and other functions are slowly becoming a social obligation and people have neither time nor keenness to find out if the CC or those who serve are brahmins at all. So, can I call the theme anachronistic? However, I enjoyed the humour in the piece.

    ReplyDelete

THE CARPENTER

  THE CARPENTER   Yet another weakening artisan is the carpenter. Well, readers may construe that I am exaggerating and that carpenters ar...