Monday, October 24, 2022

மேல் நாட்டில் பலவேசம்

                      மேல் நாட்டில் பலவேசம்

பலவேசம் மேல் நாட்டிலா என்று நகைக்கவேண்டாம். இப்போது அவன் எம லோகத்தில். ஆம் அவன் எப்பேற்பட்ட வாய்ச்சவடால் பேசுவான் என நாம் அறிவோம் அல்லவா? பூத உடலை நீத்தாலும்,பூதத்தின் பண்புகளை  இழக்காமல் இப்போதும் நையாண்டி பேசிக்கொண்டு அடி வாங்கிக்கொண்டிருக்கிறான் .அவனுக்கு சொரணை என்பது மறந்து பல வருடங்கள் கடந்து விட்டன. ஆனால் சுகபோகத்தில்  திளைத்ததனால் இப்போதும் AC கிடைக்குமா , பொதுக்கூட்டம் போடலாமா என்று கேட்டு யமதர்மன் கோபமுற்று அடே அற்ப பதரே , உன்னால் உலகப்பொதுமொழியில் பேச முடியுமா?; திடீரென்று நினைவு வந்தவனாக உனக்கு பிற மொழிகள் எட்டியும் ,வேம்புமாக கசக்குமே என்றான் யமதர்மன். சரி இவனைப்பேச விட்டால் ஏதாவது திசை திருப்புவான் அதனால் இப்போதைக்கு இவனை எண்ணெய்க்கொப்பறையில் போடுங்கள் , பிறகு பார்ப்போம் என்று யமதர்மன் கிளம்பினான். உடனே பலவேசம், இப்போதைக்குத்தானே, பின்னர் எண்ணெயிலிருந்து வந்துவிடலாம் அல்லவா என்றான்.

அவனருகில் இருந்த யமகிங்கரன் அடேய் ,உனக்கு எப்போதும் எண்ணெய்தான் ஆனால் சூடு ஏறிக்கொண்டே போகும். எத்தனை காலத்திற்கு  உன்னை எண்ணெய் கொப்பரையில் போடுவது என்று சித்ரகுப்தர் குழம்பிக்கிடக்கிறார். உனது பாவப்பட்டியல் இதுவரை அறிந்திராத ஒன்றாக இருக்கிறதுஎன்று சித்ரகுப்தர் மலைத்துப்போய் 3 நாள் விடுப்பில் செல்ல இருக்கிறார் . அதுவரை உன்னை இடுப்பில் சூடு வைக்க சொல்லி நிர்ணயம் ஆகி உள்ளது . அதனால் கொப்பரையில் இருந்து ராட்டினக்கயிற்றால் உன்னை வெளியே இழுத்து மாறி மாறி இடுப்பில் சூடு வைத்து , மீண்டும் எண்ணையில் தள்ளுவோம், வெளியே எடுத்து சூடு வைப்போம், நீ செய்துள்ள பாவத்திற்கு இது ஒன்றும் அதிகம் அல்ல, இங்கேயே இரு எண்ணை  சூடாகட்டும் என்றான் எம கிங்கரன் . எனக்கு யார் இந்த தண்டனை வழங்கியது என்றான் பலவேசம் . கிங்கரன் சொன்னான் -சித்திரகுப்தர்.,

உடனே பலவேசம் "எனக்கு ப்புரிந்து விட்டது '[சித்ர”] ‘குப்தா’, என்றாலே வடநாட்டவர் தான்  அதனால் வெறுப்பை உமிழ்கிறார் , காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக தீர்ப்பு எழுதுகிறார் .இன்னும் இறுதி தீர்ப்பு என்ன என்று தெரிவதற்குள் என்ன அவசரம்? தென்னாட்டவன் என்றால் தெனாவெட்டாய் தீர்ப்பு எழுதுவீரோ? இங்கு நீதி மன்றம் இல்லையா? அங்கே மேல் முறையிடு வேன் , எனக்கு ஒரு வழக்கறிஞரை நியமியுங்கள் என்று பலவேசம் பொதுக்கூட்டத்தில் பேசுபவன் போல அரற்றினான். 

எம கிங்கரன் சொன்னான் 'பைத்தியக்காரா நீ தேடும் வழக்கறிஞர்கள் பலரும் இங்கே தண்டனை அனுபவிக்கும் பிறவிகள். குற்றவாளிகள் வழக்குரைக்க முடியாது. உன் போல குரைக்கத்தான்  முடியும். இரு இரு எண்ணை கொப்பளிக்கிறதா என்று பார்த்து வருகிறேன் என்று கிளம்ப, எதிர் பாராமல் வந்த எம தர்மராஜன், இன்னுமா இவனை கொப்பரையில் அமிழ்த்தவில்லை என்று ஆவேசமாக முறைக்க, இரண்டாம் கிங்கரன் சொன்னான் "தலைவா, இப்போது கொப்பரையில் இருக்கும் எண்ணை நேற்றுதான் மாற்றப்பட்டது. இவனை அந்த எண்ணையில் அமிழ்த்தினால் ,மொத்த எண்ணையும் பாழாகி விடும் என்று கணக்கர் கவலையுடன் யோசித்துக்கொண்டிருக்கிறார்.. ஒரு நாள் பொறுத்தால்   எண்ணை முற்றிலும் அழுக்கானபின் கொதிநிலையில் இவனை உள்ளே தள்ளச்சொல்லி இருக்கிறார் என்றான்.

உடனே பலவேசம் பழக்க தோஷம் காரணமாக 'என்னை கொல்ல  சதி நடக்கிறது’ என்று அலறினான். கிங்கரன் சொன்னான் டேய் நீ இறந்தபிறகுதான் இங்கே வந்திருக்கிறாய். உனக்கு மேலும் மேலும் தண்டனை ஏறிக்கொண்டே போகிறது , ஊழ்வினை அறியாமல் உளறாதே என்று எச்சரித்தான். இப்போது முதல் முறையாக பலவேசம் மலங்க மலங்க விழித்தான். அப்போது ஒரு அதிசயம் நடந்தது. ...    தொடரும் 

பேரா. ராமன்

1 comment:

  1. என் பாட்டி எங்களுக்கு உபதேசம் செய்யும் போது பாவம் செய்தவர்களை நரகத்துக்கு அனுப்புவான் எமன்.
    நரகத்திலே கொதிக்கும் எண்ணைக்கொப்பரையில் தள்ளுவான் என்று எங்களை பயமுறுத்துவாள் எங்க பாட்டி.
    நாங்களும. பலவேசம் போலஇருந்தோம்னு தெரியுது.
    வெங்கட்ராமன்

    ReplyDelete

THE CARPENTER

  THE CARPENTER   Yet another weakening artisan is the carpenter. Well, readers may construe that I am exaggerating and that carpenters ar...