Saturday, November 12, 2022

ரயில் வே புக்கிங் வரிசை – 2

                        ரயில் வே புக்கிங் வரிசை – 2

இது கவுண்டரா அன்றி என்கவுண்டரா என்னும் அளவுக்கு டிக்கெட் பதிவு சாரளத்தில் உள்ளே இருந்த சுகேஷ் க்கும் நம்மூர் ராஜா கண்ணுக்கும் . நிகழ்ந்த உரையாடல்

ராஜாக்கண்ணு சமஷ்டிப்பூர் போக டிக்கட் கேட்க

சுகேஷ் : Fபோம் எவட ,

ரா. : இங்க ஏது வடையும்,  பச்சியும் ?

சுகேஷ்: அல்லா Fபோம் என்று விண்ணப்ப படிவத்தைக்காட்ட , ரா, : எங்கிட்ட அது இல்ல

சுகேஷ்: எழுதிக்களா  என்று ஒரு படிவம் தர           ரா. : பேந்தப்பேந்த விழித்தது கண் கொள்ளாக்காட்சி

இப்போது ரா. கியூ வை விட்டு வெளியே வந்து ஒரு அமைதியான பையனைப்பிடித்து தம்பி இதை நிரப்பி தாங்க என்றான் . அந்தப்பையன் கிட்டத்தட்ட எல்லா தகவல்களையும் நிரப்பி விட்டு வண்டி நம்பர் தெரியாமல் விழிக்க,

ரா.   படிச்சிருக்கேங்கிற என்ன படிச்ச வண்டி நம்பர் தெரியலையே உனக்கு என்று கேலி பேச , பையன் [பரந்தாமன்] யோவ் இத்தனை வயசுக்கு உனக்கு எலு தக்கூட தெரியல சும்மாப்போய்யா என்று அந்த படிவத்தை ரா. வின் கையில் திணித்துவிட்டு அகன்றுவிட்டான்

ரா வந்தவன் போனவன் எவரிடமும் கேட்டுப்பெறமுடிய வில்லை சமஷ்டிப்பூர் போகும் ரயிலின் விவரங்களை. திடீரென்று ஞானோதயம் வந்து டிக்கெட் பரிசோதகர் ஒருவரிடம் அணுகினான். 

அவர் தனது உதவியாளர் போலிருந்த ஒரு புது பரிசோதகரை ரா. வின் தேவையை கவனிக்கச்சொல்ல, அவர் TECHNICAL BOOK புரட்டிப்பார்த்து , வண்டி நம்பர் எது என்று தேடிக்கொண்டே என்னிக்கு டிக்கெட் வேணும் என்று வினவ , சார் ஏப்ரல் 4 ம் தேதிக்கு என்றான் ரா. உடனே வேற தேதி சொல்லுங்க என்றார் உதவியாளர்.   

 நீ ங்க நம்பர் ஜோசியமா சொல்றீங்க ? ஏன் சார் வேற தேதி என்றான் ரா. .

உதவியாளர் விளக்கினார் வாரம் 2 ரயில் தான் போகுது செவ்வாய் / சனி.

ராக சார் செவ்வாயும் சனியும் நல்ல நாள் இல்ல சார் என,. வியாழனும் திங்களும் நல்ல நாளா என உதவி , சொல்ல, ரா. வேகமாக தலையை ஆட்ட, உதவியாளர் சொன்னார் " அன்னிக்கு தான் சார் சமஸ்திபூர் போகும் . அதனால காலண்டர் பார்த்து தேதி குறித்து கொளன்டர்ல குடுங்க என்றார்.

ராக தங்கப்பல்  தெரிய   சிரித்தான்.

தங்கப்பல் இருந்தென்ன, காலண்டர் பார்க்க/படிக்க தெரியாது. யாரவது பரந்தாமன் கருணை காட்டினால்  தான் உண்டு. தங்கப்பல்லும் சிங்கப்பல்லும் வேலைக்காகாது என்று புலம்பிக்கொண்டே கியூ வரிசை யில் நின்றான். பக்கத்து ஆசாமியை தாஜா செய்ய வேண்டியது தான்.

இது தான் சில கொழுத்த பணக்காரர்களின் நிலை. ஆனாலும் இந்த வகை ஆசாமிகளைப்பார்க்க மிகச்சிறந்த இடம் ரயில் வே ரிசர்வேஷன் பகுதிதான். வேறிடங்களில் தங்கப்பல் ஆசாமிகள் உயர்ந்த சமூக அந்தஸ்துடன் வலம் வருவார்கள்.  

பேரா.  ராமன்

1 comment:

  1. சுகேஷ்: பார்ம் கட்டியோ
    ரா. க. : கிட்டியோ பம்பரமோ
    இந்தாங்க பார்ம்
    சுகேஷ்: எந்த கிளாஸ்ன்னு எழுதலையே
    ரா. க. நான் எட்டு கிளாஸ்தான் படிச்சிருக்கேன்
    சுகேஷ்: அட அதல்லையா உனக்கு சொகுசா போணுமா இல்லை சாதாரணமா இருந்தா போதுமா
    ரா.க: சொகுசுல போடுங்க
    சுகேஷ்: அப்ப கூட ரூபாய் ஆகுமே
    ரா.க: ஏதாச்சும் போடுங்க
    அப்பாடா ஒருமாதிரி சமஷ்டிபூரே போன மாதிரி இருக்கு

    ReplyDelete

ANGER AND EGO -8

  ANGER AND EGO -8 கொந்தளிப்பும் அகம்பாவமும்-8 SEEKING- FEED-BACK   கருத்து கோரி பெறுதல் இது ஒரு மனித செயல்பாடு குறித்த அளவீ...