Sunday, December 18, 2022

LASER IN SRIRANGAM -2

 LASER IN SRIRANGAM -2

ஸ்ரீரங்கத்தில் லேசர் -2

டேய், டெல்லிலிருந்து வேதாந்தம் பேசறேன்” - வேதாந்தம் ராமசாமியிடம் சொன்னான்.

ராமசாமி கிண்டல் செய்தான் "ஆமாம் வேதாந்தம் பேச டெல்லி வரைக்கும் போகணுமாக்கும் - இங்க இருக்கிற உத்தரவீதியில கயத்துக்கட்டில்ல வெத்தலைப்பாக்கு போட்டுண்டு நிலா வெளிச்சத்துல ஜாம்னு பேசலாம்" என்றான் கழுகு ராமசாமி.

வேதாந்தம் பொய் க்கோபம் கொண்டு போடா லூசு உன் கிளாஸ் மேட் வேதாந்தம் பேசறேன் உனக்கு அது கூட புரியல்ல -உனக்கெல்லாம் ரயில்வேல உத்யோகம் கொடுத்தான் பாரு அவனைத்தூக்குல போடணும்

"பேஷா போடு உங்க பெரியப்பா சீர்காழி வெங்கடேசன் தான் எனக்கு வேலை வாங்கித்தந்தார் அவரைப்போய் தூக்குல போடணும்ங்கிறாயே, நீதாண்டா லூசு. சொல்லப்போனா நம்ம ரெண்டு பேருக்குமே சென்ட்ரல் கவர்மெண்ட்   உத்யோகம். -- ஆனா நான் நெனச்சா காவேரி , பெருமாள் தீர்த்தம், மாவடு தயிர் சாதம்னு ஜமாய்க்கறேன் -நீ பானி  பூரி, சுக்கா ரொட்டி, ரைத்தா னு   எதையோ முழுங்கி காலந்தள்ளர- இதுல உனக்கென்ன ஜம்பம் வேண்டிருக்குன்னேன் 

நிலைமை விபரீதமாவதை உணர்ந்த வேதாந்தம் - "கோவிச்சுக்காதடா உன்னை விட்ட எனக்கு யார் கிட்ட டா உரிமையா பேசமுடியும், மன்னிச்சுக்கோடா என்று குரல் தழுதழுத்தான். நட்பின் பிடியை ஒதுக்கமுடியாத கழுகு " அடேய் சும்மா பேச்சுக்கு சொன்னா உன் பெரியமனுஷ தோரணையை ஆரம்பிக்கறயே -இதுதான் க்ளாஸ்மேட்டுக்கு அழகா? என்று வேதாந்தத்தை ஒரே நொடியில் வீழ்த்திவிட்டான்.

ராமசாமி தொடர்ந்தான் " ராத்திரியில போன் பண்றயே என்ன விசேஷம்?

அதுவா?  என் பையன் பத்ரிக்கு ஸ்ரீரங்கத்துல பூணல் போடணும்னு ஆசை. நீ தான் A -CLASS ஏற்பாடு பண்ணித்தரணும் -செலவப்பத்தி இல்ல -நீ நன்னா பண்ணித்தருவனு ஒன்ன மலை போல நம்பி கேக்கறேன் கைவிட்டுடாதடா என்று அழாக்குறையாக பேசினான் வேதாந்தம்..

கவலைய விடுறா இப்ப மணி 8-40 , இன்னும் அரை மணில பாரு  நான் யாருனு புரிஞ்சுப்ப - ராமசாமியா கொக்கா னு தெரியும்" என்றான் கழுகு.

கொக்கு காக்கா இதெல்லாம் எதுக்கு?  எனக்கு வேண்டியது நல்ல வைதீக, ஏற்பாடு ஸ்ரேஷ்டமான அய்யங்கார் தளிகை , நாதஸ்வர ஏற்பாடு இதெல்லாம்  தான்   " என்றான் வேதாந்தம். 

பரிஜாரகன் -நம்ப கே கு வை ஏற்பாடு பண்ணவா இல்ல ரொம்ப ஒசத்தியா பட்டப்பா லெவல் வேணுமா.? கழுகு

“இதை பாரு பட்டப்பா , பொடி டப்பா இதெல்லாம் எனக்கு தெரியாது , யாரு ஒனக்கு கட்டுப்பட்டு வேலை செய்வானோ அவனையே ஏற்பாடு பண்ணிடு அப்பதான் கட்டுப்பாடு சரியா இருக்கும். அது சரி என்னமோ கே கு ன்னியே அது யாரு ? -வேதாந்தம்

கழுகு : "அது நம்ப ஊர் சேஷாத்திரி டா - கேப்டன் குக் என்பதை கே கு னு செல்லமா கூப்புடுவோம். பையன் ஜமாச்சுடுவான் ; ஆனா என்ன ---பரிமாறவன் யாருனு நம்ப தான் கண்குத்திப்பாம்பா பாத்துக்கணும்".

வேதாந்தம் " டேய் அதெல்லாம் நீ கொஞ்சம் நன்னா பாத்துக்கோடா -எனக்கு அவ்வளோ போறாது " என்றான்.

கழுகு " ஏடா கூடமா ஏதாவது பண்ணினான்னா அவன் தலையை காஸ் அடுப்பிலேயே  வெச்சு தீச்சுப்புடுவேன் நம்ம கிட்ட ஒழுங்கா இருந்தாகணும் இல்லேன்னா அவன் சமையலை விட்டுட்டு சைக்கிள் கடையில பஞ்சர்                      ட்டத்தான் போகணும்; நீ கவலைப்படாத நான் அவனை கண்டிச்சு பேசிடுவேன். "

அடுத்த 15 நிமிடத்தில் கே கு வேலையை அனைத்து நிபந்தனைகளுடன் ஒப்புக்கொண்டான் என்பதை இரவு 9.15 க்கு போனில் வேதாந்தத்திடம் தெரிவித்து விட்டு -- டேய் நாதஸ்வரம்  காசிம் ஏற்பாடு பண்ணவா?

வேதாந்தம் " என்னது காசிமா ? என்னடா சொல்ற ? என்று மிரண்டான்

கழுகு : ஏன் அலர் காசிம் யார் தெரியுமா சின்ன மௌலானா வோட பேரன் டா -கோவில் பெரிய உற்சவங்கள் லியே  அவங்க தான் நாதஸ்வரம் சீரங்கத்துலயே டாப் -நீ ஏன்டா கவலைப்படற ? பேசாம தூங்கு "

வேதாந்தம் : டேய் இன்னொரு விஷயம் " வித்யாக்கு மடிசார் கட்டி விட யாரையாவது மாமி யை ஏற்பாடு பண்ணுடா. "

மாமியெல்லாம்வேணாண்டா நம்மளே கட்டி விடலாம் டா அது ஒன்னும் பெரிய விஷயம் இல்ல ஏன்னா இங்க கல்யாண வேலைக்கு வர மாமிகள் பெரும்பாலும் அமங்கலிடா அதுனாலதான் வேண்டாங்கறேன் என்றான் கழுகு. [என்னது நம்மளா? -ஐயோ இதில் கழுகு புகுந்துவிடுவானோ என்று கதி கலங்கினான் வேதாந்தம் ]

வேதாந்தம் –“சரி நல்ல சுமங்கலியா பிடிடா "

கழுகு " சுமங்கலிதானே பிடிச்சுட்டா போச்சு "

எந்த சுமங்கலிய இந்தராத்திரியில பிடிக்கறேன்னு அலையறேளே -கொஞ்சம் கூட சொரணையே இல்லாதவாளா இருக்கேளே -ராமா, ராமா என்று புலம்பினாள் அம்பவுஜம்

தொடரும்

அன்பன்  ராமன்

No comments:

Post a Comment

ANGER AND EGO -8

  ANGER AND EGO -8 கொந்தளிப்பும் அகம்பாவமும்-8 SEEKING- FEED-BACK   கருத்து கோரி பெறுதல் இது ஒரு மனித செயல்பாடு குறித்த அளவீ...