LASER IN SRIRANGAM -8
ஸ்ரீரங்கத்தில் லேசர் -8
டெல்லி வாழ் VE மற்றும் VI ஹோட்டலின் -சாரி கல்யாண மண்டபத்தின் நேர்த்தியையும் அதை ஏற்பாடு செய்த ராமாசாமியையும் மனமார நன்றியுடன் பாராட்டி தங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறை 207 க்கு சென்றனர் . வாயிலில் இருகைகூப்பி வரவேற்றான் 20 வயது பையன் நெற்றியில் ஸ்ரீசூர்ணம் தரித்திருந்தான் காலை 4.40 மணிக்கு. லேசர் தம்பதி அவனை நீ யாரப்பா என்றனர். ராமசாமி சார் உங்களுக்கு உதவி செய்ய என்னை அனுப்பிருக்கார் .காப்பி வாங்கிண்டு வரவா ஸார் ? என்றான் . மணி 5 கூட ஆகல்லே இப்ப எங்க காப்பி கிடைக்கும் என்றாள் வித்யா. நல்ல காப்பி நான் வாங்கிண்டு வரேன் இங்க பக்கத்திலேயே முரளி காப்பி இப்பவே ஒரு 7 ,8 பேர் காப்பி சாப்பிட ரெடி யா வந்திருப்பா. வேதாந்தம் சரி வாங்கிசூடா கொண்டுவா என்றான். வித்யாவுக்கு பயம் இந்த சின்ன ஊர்ல 5 மணிக்கு ஏதாவது டீ க்கடை தான் இருக்கும் என்று கணக்கு போட்டபடி தனக்கு வேண்டாம் என்று சொல்லி விட்டாள் . வேதாந்தம் பல் துலக்கி தோளில் துண்டுடன் வெராந்தாவில் நின்று சற்று வடக்குநோக்கி திரும்ப கம்பீரமாக ராஜகோபுரம் நெடிதுயர்ந்து வரவேற்பது போல் நின்றது. தன் நிலை மறந்து கை கூப்பி ரங்கா என்று உருகினான். சட்டென்று மீண்டு வித்யா இங்க வாயேன் என்றான் . துடிப்பாக ஓடி வந்தவள் கோபுர கம்பீரத்தில் கண்ணைப்பறி கொடுத்து நீர் மல்க பெருமாளே என்றால். இதற்குள் சார் என்ற குரல் கேட்டு திரும்பினர் -கையில் காபி பிளாஸ்க்குடன் பையன் , உள்ளே சென்று பவ்யமாக டேபிளில் வைத்துவிட்டு பின் புறமாக கீழே ஓடி 2 தம்ளர் டவரா எடுத்து வந்தான்.. கழுகைப்போலவே துடிப்பாக வேலை செய்கிறானே ……
சார் காப்பி ?
ஆங் -- குடு குடு என்று பரபரத்தான் வேதாந்து .
பிளாஸ்கை திறந்ததும் கம் என்று காப்பி வாசனை , சுடச்ச்சுட தம்ளரில் - இப்போது வித்யா ஐயோ வேண்டாம் என்று சொன்னது பிசகு என்று உள்ளூர வருந்தினாள். ஏம்பா இன்னொரு காப்பி வாங்கலாமா என்றாள் .
இதுலியே இருக்கு 'மாமி ' என்று சொல்லவந்தவன் 'இருக்கு 'மா' என்று |"மி" இல்லாமலே நிறுத்தினான் .அவளை 'மாமி' என்று சொல்ல கஸ்தூரிரங்கன் ஒன்றும் வெகுளி அல்ல , மேலும் லேசர் தான் ஹேமமாலினியின் பிரதிபோல slim அண்ட்straight ஆசாமி ஆயிற்றே. காப்பியை சாப்பிட்ட லேசர் இப்படி ஒரு தயாரிப்பு ஸ்ரீரங்கத்திலா என்று வியந்து , உன் பெயர் என்னப்பா? என்றாள்
கஸ்தூரி ரங்கன் . நெறையப்பேர் பாதி கூப்புடுவா -கஸ்தூரி [அல்லது] ரங்கன் , ரயில்வே அதிகாரி மட்டும் வாய் நிறைய கஸ்தூரி ரங்கா னு அழைப்பார். ஆமாம் நீ ரைல்வேல உத்யோகம் பண்றயா ? இல்ல அந்த அதிகாரி கிட்ட லஸ்கர் ஆ இருக்கேன். தினக்கூலி . இப்ப அவர் வடக்க camp போய் இருக்கார் . அவா லீவு ல போனா எனக்கு வேலையும் கூலியும் கிடையாது. ஏதாவது கிடைக்குமா னு தேடிண் டுருக்கேன் .ஏதாவது கிடைக்காமலா போய்டும் , எப்படியும் முன்னுக்கு வந்துடுவேன் கொஞ்சம் ஆசீர் வாதம் பண்ணுங்கோ என்று சாஷ்டாங்கமாக 4 முறை வடகலை சம்பிரதாயமாக சேவித்தான். லேசர் தம்பதியினர் அதிர்ந்து போனார்கள்.
சூட்டிகையான பையன்கள் வாய்ப்பின்றி வசதியுமின்றி கருகிக்கொண்டிருக்கிறார்கள். பெரிய இடத்து மனிதர்கள் கொஞ்சம் கீழே யும் பார்த்தால் பலர் பிழைத்துக்கொள்வார்கள்.
"ஏம்பா இதே காபி எப்பவும் கிடைக்குமா ?"--லேசர்
காத்தால 9.30 வரை தான் , மாலை 3-15 -- 7.30 வரை ஆனா ஒரே தரம் மா இருக்கும். இப்ப எவ்வளவாச்சு என்றாள் . 36/- ரூபாய். சார் [ராமசாமி] 100/- ரூபாய் கொடுத்திருக்கார் , யார்ட்டயும் கேக்கக்கூடாதுனு சொல்லிருக்கார். அவராலதான் தினக்கூலி யாவது கிடைக்கறது -அவருக்கு துரோகம் பண்ணவே கூடாது என்று கை கூப்பி நின்றான். மீண்டும் ஒரு முறை லேசர் அண்ட் co அதிர்ந்தது. மணி 6.30. ஏதாவது வேணுன்னா இந்த நம்பர்ல கூப்புடுங்கோ என்று ஒரு சீட்டை க்கொடுத்துவிட்டு தம்ளர்களை அலம்பி வைத்துவிட்டு புறப்பட்டான் க.ரெ.
No comments:
Post a Comment