Thursday, December 22, 2022

LESAR IN SRIRANGAM -7

 

LESAR IN SRIRANGAM -7

ஸ்ரீரங்கத்தில் லேசர் -7

இதோ ஆயிற்று இன்னும் 1 வாரத்துக்கும் குறைவான கால இடை வெளியே இருக்கிறது த்ரியின் உபநயன மகோத்சவத்திற்கு. லேசரும், வேதாந்தமும் ஆபீஸ் மற்றும் உபநயன வேலைகளை விட்டுக்கொடுக்காமல் ஈடேற்றி வந்தனர். தத்தம் நிறுவனங்களிலிருந்து ஒரு 10 நாள் விடுமுறையை பெற்றிருந்தனர். அந்த சூழலி ல்   ஒரு காலை 7.00 மணியளவில் சென்னை வந்தடைந்தனர். ஒரு உயர் ரக ஹோட்டலில் ரூம் எடுத்துக்கொண்டு நேராக அடையார் விரைந்தனர். வேதாந்தம் பெரியப்பா ஜட்ஜ் ராமசாமி ஐயங்கார் [94] ஊஞ்சலில் பேப்பர் படித்துக்கொண்டிருந்தார். உள்ளே ரேடியோவில் சுப்ரபாதம் ஒலித்துக்கொண்டிருந்தது. வேதாந்தத்தை ப்பார்த்ததும் ஜட்ஜ் 'வாடாப்பா சௌக்கியமா - பிள்ளைக்கு பூணல் சீரங்கத்துல போடறாயாமே -சந்தோஷ ம் =பெரியம்மா பாராயணம் முடிஞ்சு 8.30 க்கு வருவா. போய் தீர்த்தாமாடிட்டு வாங்கோ மாடியிலே கீசர் இருக்கு நீ நன்னா யூஸ் பண்ணிக்கோ - உங்க அப்பா அம்மாவுக்கு பேரன் பூணல் பாக்க கொடுத்து வெக்கல. ஈஸ்வரன் என்ன முடிவெடுக்கறானோ அது தான். மத்தபடி எல்லாரும் சௌக்கியந்தானே என்றார் ஜட்ஜ். பெரிய தட்டு நிறைய டெல்லி வகை பழங்களை வைத்து பெரியப்பா-பெரியம்மா இருவரையும் சேவித்தனர் வே-வி மற்றும் பத்ரீ

பெரியம்மா பழுத்த சுமங்கலி -நன்கு ஆசிர்வதித்தாள்.

 வயசு காரணமா அலைய முடியல்ல, கோவிச்சுக்காதடீ ம்மா எல்லாம் பெருமாள் அனுகிரஹத்துல பேஷா நடக்கும். இந்தா ஸ்ரீரங்கம் கோவில் உண்டியில இந்தரூபாய்  நோட்ட காணிக்கையா செலுத்து என்று 500 ரூபாய் தந்தாள்.. வித்யா கவனமாக வைத்துக்கொண்டு டைரியில் குறித்துக்கொண்டாள்.  

காலைச்சாதம் சாப்பிடும் முறையைத்தொடரும் சென்னை ஐயங்கார் ஜட்ஜ். .10 மணிக்கு சாப்பிட்டுவிட்டு மைலாப்பூர் வெங்கடேச பெருமாள் கோயிலில் அர்ச்சனை அப்படியே மாட வீதியில் பட்டுப்புடவை பட்டு வேஷ்டி வாங்கிக்கொண்டு நேரே லஸ் அவென்யூ பகுதியில் வித்யாவின் மாமா மாமி க்கு அழைப்பு கொடுத்தாயிற்று. மாமாவுக்கு புடவையோ சுடிதாரோ அணிவித்தால் வித்யாவைக்காணலாம் . வேதாந்தமே ஏமாந்தான் என்றால் நான் சொல்வது சர்வ சத்யம் என்றுணர்வீர்கள். மாமா மெட்ராஸ் யுனிவர்சிட்டியில் கெமிஸ்ட்ரி ப்ரொபஸர். நல்ல உயரம் சிவந்த நிறம் அளவான ஆனால் திடமான ஆரோக்கியம். கொழந்தே உன்பிள்ளை பூணலுக்கு வந்து அப்படியே அன்பில் ஸ்ரீரங்கம் எல்லாம் சேவிச்சுட்டு வரணும்னு டிக்கெட் வாங்கிவெச்சிருக்கேன். மாமியால் அலைய முடியாது ஆனா நான் கண்டிப்பாக வரேண்டியம்மா என்று வாஞ்சையுடன் சொல்லி , மாப்பிள்ளை நீங்க எனக்காக எதுவும் மெனக்கிட வேண்டாம் ஸ்ரீரங்கத்துல என் கிளாசுஸ்மேட் நரசிம்மன் ரி ட்டையர்டுரெஜிஸ்திரார் ]   ரொம்ப நாளா கூட்டிண்டு இருக்கான் அவாத்துலயே ஏகப்பட்ட இடம் இருக்கு. இத்தனை சௌரியம் இருக்கறத இப்பதான் யூஸ் பண்ணிக்கணும். அதனால நான் அவசியம் வரேன் என்றார்.  லேசரின் தோழி சாவித்ரி அபிராமபுரத்தில் வாசம் அவளுக்கும் ழைப்பு கொடுத்து கிளம்பி இரவு ராக்போர்ட் ரயிலில் சீரங்கம் வந்தனர். பிளாட்பாரத்தில் முண்டாசுத்தலை போர்ட்டர் பொட்டிய குடுங்கய்யா என்று வாங்கிக்கொண்டான் விறுவிறு என்று ஒரு காரில் பெட்டியை வைத்துவிட வேதாந்தம் என்னைக்கேக்காம என்று ஆரம்பிக்க முண்டாசை அவிழ்த்தான் கழுகு. . டேய் ஏறுடா வண்டியில உனக்கு மண்டபத்துலயே ஒரு ரூம் அட்டெண்டரோட ஏற்பாடு பண்ணிருக்கேன் , கண்ட இடத்துல சாப்பிடாத , நீ எதையாவது சாக்குபோக்கு சொல்லி சாப்பிடல்லைன்னா அம்புஜம் எனக்கு சோறு கிடையாது நேத்திக்கே சொல்லிட்டா , நான் ஒன்றும் செய்ய முடியாது

சரி அழைப்பு , வாங்கவேண்டிய ஐட்டம்ஸ் என்று வித்யா முணுமுணுத்தாள்,

கழுகு சொன்னான் , அம்புஜம் ஒரு லிஸ்ட் போட்டு , விலை எங்க சரியா இருக்கு எல்லாம் பாத்து வெச்சிருக்கா . 12 மணிக்கு மேல 4 -- 41/'2க்குள்ள எல்லாம் முடிச்சுடலாம்னு ஐடியா பண்ணி வெச்சிருக்கா . 9.00 மணி வரை ரூம் ரெஸ்ட் எடுங்கோ , நான் வந்து கூட்டிண்டு போறேன் என்று ட்ரைவரிடம் சொல்லி அனுப்பினான்.

தொடரும்

அன்பன் ராமன்

No comments:

Post a Comment

G PAY JEEVAA -4

  G   PAY JEEVAA-4                    ஜீ - பே – ஜீவா- 4 சிறப்பு செருப்பு தயாரிப்பில் பெரும் புகழ் பெற்றான் . விடா முயற்சியால் ம...