Thursday, December 22, 2022

LASER IN SRIRANGAM- 6

 

LASER IN SRIRANGAM- 6

ஸ்ரீரங்கத்தில் லேசர்  6

இப்போது வித்யா நெக்குருகி நின்றாள் அம்புஜம் ஒரு கட்டுப்பெட்டி னு கற்பனை பண்ணி வெச்சிருந்தேன் ; ஆனா அஹமதாபாத் MBA  மாதிரி ரொம்ப லாஜிக்கலாவும் ம்யூசிக்கல்லா வும் பேசறாளே ஒருவேளை மெட்ராஸ் சிட்டி படிச்சவளோ ? எவ்வளவு ஹாப்பி யா பொறுப்புகளை ஏற்றுக்கொள்கிறாள் . எதெதை எங்கெங்கு செய்யவேண்டும் வாங்க வேண்டிய பொருள்களை ஒரு நாலு மணி நேரத்தில் சரியா வாங்கிடலாம் னு தைரியமா ஆதரவா பேசறாளே பழுத்த அனுபவம் போலிருக்கு, நமக்கு என்னடான் னா லைப்ரரி UBER , OLA இதுதான் தெரியறது . மாமிகள் லேசுப்பட்டவா இல்லைனு அடிக்கடி ரம்யா சொல்லிண்டே இருப்பளே ரொம்ப கரெக்ட் தான். எப்படி அடுத்தவர் வேலைனு பார்க்காம சரியான ஐடியா / அட்வைஸ் அள்ளி  வீசறா ஆனா காசு பணம் னு மயங்கமாட்டா பகவான் எப்படி ஜோடி சேர்க்கிறார் ஒரே மாதிரி பாலன்ஸ் உள்ள தம்பதிகள் என்று ஒரு ஒப்பீடாக மனதிற்குள் சொல்லிக்கொண்டு அதையே வேதாந்தத்திடமும்  விவரித்தாள்.

வேதாந்தம் சொன்னான் : எனக்கு 2 நாளா நாம ரொம்ப சின்னவானு தோணிண்டே இருக்கு. . அவா இடத்துல நாம இருந்தா ??? நெனச்சுப்பாக்கவே நடுக்கமா இருக்கு. ஆபீஸ் கான்பரன்ஸ் னு எதையாவது சொல்லி தப்பிச்சுட்டு பங்க்ஷன் போய் திருப்தி யா சாப்புட்டுட்டு வருவோம். இது தான் நம்ம செய்வோம்

சௌத் ல எவ்வளவு பொறுப்பேத்துக்கறா -இதுக்கெல்லாம் என்ன ஈடு தர முடியும்?  எவ்வளவு ஒசந்த குணம் அவா எந்த குறையும் இல்லாம சௌக்கியமா இருக்கணும் குருவாயூரப்பா என்று மனமுருக வேண்டினான். சமயம் பார்த்து குருவாயூரப்பன் நம் சொல்லில் தோன்றுவது கூட ஒரு வகை கிருஷ்ண லீலை. இதில் முக்கிய அம்சம் என்னவென்றால் VEDHAANTHAMS / RAAMASAAMIS அனைவரும் இணைந்த புள்ளி அந்த குருவாயூர் தானே அதனால் தான் ஒவ்வொருவரும் தனித்தனியே குருவாயூரப்பா என்று வாய் நிறைய வேண்டுகிறர்கள்.

ஒன்று பட்டவர்த்தனமாகத்தெரிகிறது , இந்த ஸ்ரீரங்கத்து அய்யங்கார்களுக்குக்கு குருவாயூர் அப்பன் கடாக்ஷம் பேருதவி செய்ய இருக்கிறதென்பது.

உனக்கெப்படித்தெரியும் என்று சிலர் முணுமுணுப்பது என் காதில் ஒலிக்கிறது.

பகவத் கடாக்ஷம் என்பதை சில குறியீடுகள் உணர்த்தும் .

இந்த உபநயனம் பற்றி டெல்லியில் இருந்து லேசர் தம்பதி பேச ஆரம்பித்ததில் இருந்து எந்த ஒரு செயல் பாடும் வினாடி கூட பிசகாமல் நடந்தேறி வருகிறது --என்னே துல்யம் என்று   கோடிட்டுக்காட்டுகிறதே . அதே சமயம் நடையாய் நடந்தாலும் சில நாட்களில் சலூனில் முடிவெட்டிக்கொள்ள முடியாமல் தள்ளிப்போடும் நிகழ்வுகளை நினைவு கூர்ந்தாலும் இறையருள் எப்படி வெளிப்படுகிறதென்பதை உணர்ந்து விடலாம்.

அனைத்திற்கும் மேலாக சில மணி நேரங்களே பழகியிருந்த வித்யாவை சகோதரி என்னும் நிலையில் பாவித்து அம்புஜம் தெரிவித்த பேராதரவு சொற்கள் -தொலை தூரத்தில் இருந்து உதவி கேட்பவர்களுக்கு ஏற்படுத்தும் மகிழ்ச்சியான மயிலிறகு வருடல் என்பதை எழுதி விளக்கிவிடவோ/ விலக்கிவிடவோ முடியாது. மேலும் டெல்லி வாழ் V / V இருவர் மனங்களுக்குள்ளு ம் கழுகு -அம்புஜம் குறித்து விளைவித்த பெரு மதிப்புகூட நட்பின் மாட்சிமையின் அருமை பெருமைகளை உணர்த்தவல்லது.

பிறிதொருவர் பால் கொள்ளும் உயர் அன்பு வாழ்வில் பல மகோன்னதங்களை உணர்த்தும் என்று அனுபவம் சொல்லித்தந்துள்ளதை நினைவு கூர்கிறேன் 

ஆம் வேதாந்தம்- வித்யா இருவருக்கும் ராமசாமி-அம்புஜம் இருவரும் அண்ணன் குடும்பம் என்று போற்றத்தக்க நிலைக்கு உயர்ந்திருந்தனர். ஏன் ? இவ்விடத்தில் தான் தொழில் ரீதியான நட்புக்கும் -ஊர் முறையில் எழும் தொடர்புக்கும்  ஏற்படும் அன்பின் ஆழம்/வித்தியாசம்  புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கும். வேதாந்தம்-ராமசாமி வகுப்புத்தோழர்கள் அன்பால் பிணைந்தவர்கள். ஆனால் அம்புஜம்-வித்யா இருவரும் சமீபத்திய  தொடர்பால் அறிமுகம் ஆனவர்கள் தானே . ஆனாலும் எந்த மறு  பேச்சும் இல்லாமல் கழுகும் சரி, அம்புஜமும் சரி உடனடியாக கள ப் பணிகளை எப்படிச்செய்யலாம் என்று வினாடி கூட தாமதிக்காமல் செயல்  பட்டனர் . இதை எல்லாரிடமும் கேட்கவோ பெறவோ முடியாது. . அப்படியே முயன்றாலும் விளைவு என்ன என்று இறைவனுக்குத்தான் வெளிச்சம். அது போன்ற திரிசங்கு நிலைக்கு தள்ளாமல் ரொம்ப ஆர்வத்துடன் ஈடுபடும் கழுகு-சின்னக்கழுகு இவர்களுக்கு யாரால் என்ன செய்திட முடியும் என்ற கவலை தொற்றிக்கொண்டது லேசர்  மற்றும்  வேதாந்தம் இருவர்க்கும். ஆனால் அவர்களுக்கு மிகச்சிறந்த கௌரவம் ஒன்றைச்  செய்ய வேண்டும்     என்று VE -VI  தம்பதியினர் ஒருமனதாக தீர்மானித்தனர்.

தொடரும்

அன்பன்  ராமன்

2 comments:

  1. வேதாந்தம்-ராமசாமி, வித்யா-அம்புஜம்
    நட்பு குருவாயூரப்பன் துணையால் தொடரட்டும்
    வெங்கட்ராமன

    ReplyDelete
  2. ஒரு சாதாரண சம்பவத்தை சற்று நகைச்சுவையுடன் சொல்வதுதான் ஆசிரியரின் நோக்கம் என்ற எண்ணத்தை மாற்றி வைணவதத்துவத்தை--எல்லாமே அந்த கண்ணணுடைய லீலைதான்--சற்றே நெகிழ்ச்சியுடன் கொடுத்திருப்பது அவரின் எழுத்து திறனுக்கு சான்று.

    ReplyDelete

G PAY JEEVAA -4

  G   PAY JEEVAA-4                    ஜீ - பே – ஜீவா- 4 சிறப்பு செருப்பு தயாரிப்பில் பெரும் புகழ் பெற்றான் . விடா முயற்சியால் ம...