Thursday, December 22, 2022

LASER IN SRIRANGAM- 5

 

LASER IN SRIRANGAM- 5

ஸ்ரீரங்கத்தில் லேசர்- 5

என்னம்மா திடீர்னு குருவாயூரப்பா னு கூப்பிடற ? என்றான் வேதாந்தம்

அதுவா உங்க friend ராமாசாமியை நான் பாத்த இடம் குருவாயூர் , எவ்வளவு நல்ல பெருமாள் சேவை , coffee house , காபி -- ஹூம் திரும்பியும் எப்ப கிடைக்குமோ ? அதுதான் குருவாயூரப்பனை நினைச்சுண்டேன் -தப்பா ? என்று குழந்தைபோல் கேட்டாள் .

தப்பில்ல -நம்ப வழக்கமா கோவிந்தா வெங்கடேசா பத்மநாபா ரெங்கநாதா இப்பிடீன்னு தானே பெருமாளை நெனைச்சுப்போம் என்று தோணிப்போய் கேட்டேன் வேற ஒண்ணும் இல்லை என்றான் வேதாந்தம்..

ஏன்? குருவாயூரப்பனை லிஸ்டிலே சேர்த்துக்கமாட்டேளோ - சரியான சீரங்கத்து அழும்பு என்று வாயை இடது வலதாக முறுவலித்து அழகு காட்டினாள் .

“என்ன அழும்பு தழும்பு னு ஏதேதோ பேசற -எனக்கு ஒண்ணும் புரியல” ;

லேசர்: “புரியாதே நமக்கு சாதகமா இல்லேன்னா புரியல்ல னு சொல்லி தப்பிச்சுக்க பாக்கறீங்களா ? உக்கும்

“புரியல்லேன்னா நான் விடுவேனாக்கும் அழும்புன்னா , அழ்ச்சாட்டியம் , பிடிவாதம் [ கொரங்குப்பிடி ] னு ஊருக்கே தெரியும் -சயின்டிஸ்ட் Mr . வேதாந்தத்துக்கு கிளாஸ் எடுத்து சொல்லித்தரணுமாக்கும் ?| என்று தங்களது “நீண்ட திருமண பந்தத்தை நிறுவினாள் [ அதாவது நான் புது மனைவி அல்ல -வார்த்தைக்கு வார்த்தை பதில் சொல்லுவேன் அல்லது புதுப்புது DICTIONARY /THESAURUS எடுத்து / எதிர்த்து வீசுவேன் , முடிந்தால் சமாளியுங்கள் சார் என்று உள்  அர்த்தம்]

வேதாந்து ஸ்ரீரங்கத்தில் கடைந்தெடுத்த வடகலை அய்யங்கார் அதனால் தெரியாதது போல் நடித்து நேரடித்தாக்குதலை முறியடிப்பான்.  பாவம் லேசர் 23-24 வயசிலேயே டெல்லியில் ஐக்கியம் , எனவே அய்யங்கார் தகிடுத்தத்தம் இன்னும் முழுவதும் கற்றபாடில்லை.

ஆனால் அம்புஜம் உள்ளூர் தயாரிப்பு எந்த டகல் பாச்சாவையும் எளிதாக சமாளிப்பாள் . ஆனால் கழுகு 12 அம்புஜங்களுக்கு ஈடு கொடுப்பான் இப்படி ஒரு தடாலடி PAIR ஒரு HI-TECH  PAIR இவைதான் வரும் நாட்களில் சீரங்கத்தில் பட்டையைக்கிளப்ப ப் போகும் நட்பு வட்டம்.

லேசர்: “அது சரி எல்லாத்தையும் ராமசாமி தலையில போட்டுட்டா நமக்கு பொறுப்போ வேலையோ கிடையாதா? வாங்கவேண்டிய வஸ்திரம் பாத்திரம் பண்டம் , பணியாரக்காய் [பருப்புதேங்காய்] குடை என்னெவெல்லாமோ இருக்குமே ? மசமசன்னு தூங்காம மள ம ள  னு -எதை எங்க வாங்கறது எங்க நல்ல ஐட்டமும் நியாய விலை யும் இருக்கும்னு Mr . ராமசாமிகிட்ட பேசி பணம் வேணுன்னா அக்கௌன்ட் நம்பர் வாங்கி TRANSFER பண்ணுங்கோ , சும்மா LECTURE பண்ணிட்டு வந்துட்டா போறுமா.?”

லேசர் தொடர்ந்தாள்

“உங்களுக்கு கஷ்டமாக தெரிஞ்சா நம்பர் குடுங்கோ நான் அம்புஜம் [அதான் Mrs  ராமசாமி கிட்ட கேட்டுடப்போறேன். இல்லேன்னா SELFISH PEOPLE னு நெனச்சுப்பா”; என்று அம்புஜத்தை தொடர்பு கொண்டாள்  லேசர் வித்யா..

கையில் போன் அழைப்பு ஒலித்ததே ஒழிய அம்புஜத்துடன் எப்படி பேச தொடங்குவது என்ற ஒரு தடுமாற்றம் =hello அம்புஜம் என்றா, ஹலோ மாமி  என்றா - ஐயோ இப்போது என்ன செய்வது என்று விழிக்க வேதாந்தம் ஆபத்பாந்தவன் ஆகி, போனைப்பிடுங்கி "டேய் ராமாசாமி , வித்யா ஒன் wife ஓட பேசணுமாம் கொஞ்ச ம் போன அவா கிட்ட குடு என்றான்

கழுகு சொன்னான் Hello CBI  உனக்கு HEAD OFFICE -அதான் டெல்லிலிருந்து போன் யாரோ LADY OFFICER பேசணுமாம் என்று அம்புஜத்தை வம்பிழுத்தான் கழுகு

அம்புஜம் ஸ்டைலாக இடது காதில் android ஒலிக்க Hello என்று நளினமான உச்சரிப்பில் MNC கம்பெனி யில் front ஆபீஸ்  செக்ரட்டரி போல ஆரம்பித்தாள் 

மறு  முனையில் நான் வித்யா [Mrs வேதாந்தம் ] டெல்லியில் இருந்து என்றாள்

அம் ஜம் here என்றாள் Mrs .கழுகு,

உடனேயே தூய ஆங்கிலத்தில் congrats on your kid's   உபநயனம்  என்றாள் .

வாழ்வில் முதல் முதலாக கழுகு  சற்று அதிர்ந்து போனான் அய்யய்யோ இவள் எமகாதகியாக இருப்பாள் போல் இருக்கிறதே இனிமேல் இவளிடம் இங்கிலிஷ் ஜவடால் செல்லாது போல் இருக்கே நல்ல வேளை மாட்டிக்காம தப்பிச்சேன் நன்றி குருவாயூரப்பா என்றான் ஸ்ரீரங்கக்ஷேத்ர-ராமசாமி           [ வேறென்ன லேசர் முதன் முதலில் குருவாயூரில் தானே பரிச்சயம் -அதன் தாக்கமாக கிருஷ்ண லீலை வேலை செய்கிறது ]

அம்ஜம் சொன்னாள் : நீங்க இங்க வந்ததும் எல்லாம் வாங்கலாம் -அப்பா அம்மா வை தவிர . ஒரு கடைக்கு 10 கடை பார்த்து  கரெக்ட்டா வாங்கலாம் -சீரங்கம், கும்பகோணம் இங்கெல்லாம் ஒரு 4 மணி நேரத்துல எல்லாம் பண்ணிடலாம். உள்ளூர் அழைப்பெல்லாம் நீங்க வந்தப்புறம் பார்த்துக்கலாம். உங்க பெரியவா சொந்தக்காரா  இவாளெல்லாம் அங்கிருந்தே அழைச்சுட்டு எத்தனை பேர்  வருவா னு சொன்னா  போறும் -ஜாமாச்சுடலாம். நாமெல்லாம் சகோதரிகள்[ [ அக்கா என்றோ, தங்கை என்றோ சொல்லி ego வராமல், தெளிவாகப்பேசி ] " GOOD நைட்" என்றாள் .

சிறகொடிந்த நிலையில் கழுகாக நடுக்கூடத்தில் வீழ்ந்து அம்ஜம் சரியான சீரங்கத்து டிக்கெட் என்று மலைப்புடன் வியந்து அப்படியே கண் அயர்ந்தான்.

காலையில் தலையில் துண்டில் கோடாலி முடிச்சில் கையில் காபி மணக்க கழுகை கூப்பிட்டாள் அம்ஜம் .

பாய்ந்து எழுந்து ஓடி பல் துலக்கி விட்டு வந்தவன் அதுக்குள்ள தீர்த்தாமாடியாச்சா ?

மார்கழி பொறந்தாச்சு ஞாபகம் இல்லையா என்றாள் அம்ஜம்.

சரி போன்;ல இங்கிலீஷ் பொளக்கறியே  என்றான்.

தூர் தர்ஷன் ல 2 வாரம் ஆங்கில த்துல  எப்படி பேசணும் னு கத்துக்குடுத்தா NOTES கூட எழுதி வெச்சிருக்கேன் இல்லேன்னா CBI ல சேத்துப்பாளா என்று கழுகை அதிரவிட்டாள் .

தொடரும் அன்பன்   ராமன்

1 comment:

  1. வீண் விவாதம் அம்புவிடம் செய்யும் வேதாந்தம் ஒரு கில்லாடிதான்
    வேதாந்தம் வடகலையான் என்பதை நிரூபித்துவிட்டான்
    வெங்கட்ராமன்

    ReplyDelete

G PAY JEEVAA -4

  G   PAY JEEVAA-4                    ஜீ - பே – ஜீவா- 4 சிறப்பு செருப்பு தயாரிப்பில் பெரும் புகழ் பெற்றான் . விடா முயற்சியால் ம...