Thursday, December 22, 2022

LASER IN SRIRANGAM -4

 

LASER IN SRIRANGAM -4

ஸ்ரீரங்கத்தில் லேசர்- 4

வீயார் கல்யாண மண்டபத்தைக் கே கு வுடன் பார்த்த கழுகு கொஞ்சம் மிரண்டுதான் போனான் என்றால் வேறு சொல்லவும் வேண்டுமோ? அட்வான்ஸ் ரூபாய் ஆயிரம் கொடுத்து இடம் புக் பண்ணிவிட்டு இருவரும் குண்டன் கடையில் காப்பி சாப்பிட்டனர்.

அண்ணா நான் தான் பில்லை தருவேன் எவ்வளவு வாய்ப்பு வாங்கித்தரேள் , நான் இது கூட செய்யக்கூடாதா என்று விடாப்பிடியாக கே கு பணம் செலுத்தினான்.

கழுகின் கண்களில் நீர் துளிர்த்தது , சிறிய வருமான க்காரர்கள் பெருந்தன்மையாக நடந்து கொள்கிறார்கள்

ஆனால் சில பணக்காரர்கள் கீரை விற்கும் கிழவிகளிடம் ஒரு ரூபாய்க்கு கூட பேரம் பேசுகிறார்கள் -உலகத்தை இத்தனை வ்சயசிலும் புரிஞ்சுக்கமுடியவில்லையே என்று ஒரு கணம் விக்கித்தான்

கல்யாண மண்டப பில்லை ப்பார்த்து போனில் படித்தான் ராமசாமி . " டேய் குறிச்சுக்கோ [பத்திரிகைக்காக சொல்றேன்] வீயார் மஹால் 27 காந்தி ரோடு , ஸ்ரீரங்கம் 620 006 , ரயில்வே ஸ்டேஷன் பஸ் ஸ்டாண்ட் எல்லாம் பக்கம் , பத்திரிகையை இங்க அடிக்கவா இல்ல உங்கூர்ல பாத்துக்கறியா . இங்க இந்தில பிரிண்ட் பண்ணினாலும் ப்ரூப் பார்க்க வழியில்லை அதான் சொல்றேன். உனக்கு எப்படி வேணுமோ அப்பிடி நீயே பாத்துக்கோ. டேய் steam குக்கிங்,   western closet , AC ROOM எல்லாம் நன்னா இருக்கு ஒன்  கௌரவத்துக்கு ஏத்தமாதிரி பிடிச்சிருக்கேன் சரியா? என்று பேச்சு முடிந்தது.

நன்றிப்பெருக்கில் வேதாந்தம் சிலையாக நின்றான் கண்களில் கண்ணீர் பிரவாகமாக ஊற்றெடுத்தது. சே ஒரு 10 பைசா கூட லாபம் இல்லாத வேலையை எவ்வளவு பொறுப்பா செய்கிறான் ராமசாமி. . குறைந்த வருவாயில் உள்ளூரில் எப்படி ஜீவனம் செய்கிறானோ  பணம் கொடுத்தாலும் வாங்க மாட்டான் ; இவனுக்கு நான் என்ன கைம்மாறு செய்ய முடியும் / ஒரு 20 மணி நேரத்தில் சமையல் நாதஸ்வரம்,மண்டபம் எல்லாம் மின்னல் வேகத்தில் ஏற்பாடு செய்திட இவனால் முடிகிறதே. இவன் மட்டும் டெல்லியில் வந்திருந்தால் நிச்சயம் பிரதமரின் PA அந்தஸ்துக்கு உயர்ந்திருப்பான். என்று பச்சாதாபப்பட்டான் . அப்போது  அவன் உள்மனம் பேசியது டேய் நீ சம்பாதிக்கிறாய் ஆனால் அவன் பகவான் ரங்கநாதன் நிழலில் சம்பிரதாய வாழ்க்கையில் மகிழ்ச்சியாக வாழ்கிறான் . முந்தா நாள் சொன்னானே காவேரி, கோயில் , மாவடு தயிர் சாதம் என்று மன மகிழ்ச்சியாக ; நீ ஏன் கலங்குகிறாய்  'அவனுக்கு' தெரியாதா யாருக்கு எதைத்தர வேண்டும் என்று ? அந்த ராமசாமியை உனக்கு உற்ற நண்பனாக தந்திருக்கிறானே அதுவே 'அவன்' தந்த  அருள் அல்லவா? நீ மலங்காதே இறைவன் சமயமறிந்து அருள்வான். உலகின் இயக்கம் வினோதமானது பொருள் படைத்தவன் அல்லலுறுவதும் ஏழ்மையை மகிழ்வுடன் தள்ளுவதும் கூட ஒரு வகை சமன்பாடு [EQUATION] தான் -என்று அசரீரி போல் முழங்கியது மனம்.

வேதாந்தம் விளக்கமாக சொல்ல சொல்ல அனைத்தையும் கேட்ட வித்யா இவ்வளவு வேலையும் சித்த நாழியில் செஞ்சுட்டாரா? நமக்கு பிரயாணம் பண்றதே பெரிசா இருக்கே -அவாளுக்கு நம்ம என்ன செஞ்சாலும் குறைவாத்தான் இருக்கும் "குருவாயூரப்பா " எல்லாரையும் காப்பாத்து என்றே ஆத்மார்த்தமாக வேண்டினாள்.  தொடரும்          அன்பன்  ராமன்

1 comment:

  1. ஓய் ராமஸ்வாமி உம்மை எங்காத்துக் கல்யாணத்துக்கு கூப்பிடப்போறேன்
    வருவீரோ? இல்லை டில்லி ன்னாத்தான் வருவீரோ.
    வெங்கட்ராமன்

    ReplyDelete

G PAY JEEVAA -4

  G   PAY JEEVAA-4                    ஜீ - பே – ஜீவா- 4 சிறப்பு செருப்பு தயாரிப்பில் பெரும் புகழ் பெற்றான் . விடா முயற்சியால் ம...