Saturday, December 17, 2022

TAMIL TAMIL TAMIL

தமிழ் தமிழ் தமிழ்

இது என்ன திக்குவாய் வேலையாக இருக்குமஎன்றெண்ண-த்தோன்று        கிறதா ? ஒரு நிமிடம்-- திக்கு வாய்  அல்ல திக்குத்தெரியாத அல்லல் எனக்கொள்க. இப்போது உங்களுக்கு திக்கு தெரியாத அல்லல் போல இருக்குமே. அது தானே நம்ம வேலையே.. சரி என்ன சொல்ல வருகிறேன் என்றால் தமிழ் மீது பற்றும் பாசமும் கொண்ட பலர் அம்மொழியின் மரபுகளை சரியாக நிறுவாமல், ஏனோ தானோ என்று எழுதுவதும் பேசுவதும்  வேறு மொழியினரிடையே இதுபோன்ற செயல்பாடு செல்லுமா எனில் நிச்சயம் செல்லாது என்றே சொல்லிவிடலாம். ஏனெனில் தமிழில் எழுத்துக்கள் அதிகம் அனால் ஒரே எழுத்தையே பல சூழலுக்கும் எழுதி சிறப்பாக எழுதி விட்டதாக மார் தட்டிக்கொள்ளலாம். கங்கை [GANGAI ] கண்ணகி [KANNAGI ] கட்டடம் [KATTADAM ]கடம் [GATAM ] எல்லா இடத்திலும் 'க’'.பயன்படுத்தப்படுகிறது. இதனால் நம்மொழியினருக்கு சிறப்பு ஒலி வடிவங்கள் உச்சரிப்பதில் தடுமாற்றம் ஏற்பட்டு பொது இடங்களாகிய பிற பிரதேசங்கள் தொலைகாட்சி விவாதங்கள்,  ஏன் நாடாளு  மன்ற அவைகளில் கூட உளறு வாயன்களாக 'ரசிக்க'ப்படுகிறார்கள். PADMA AWARD என்பதை BATHMA AWARD  என்று மிக எளிதாக உளறுவதைக்காணலாம் . அவ்வளவு ஏன்  சிவாஜி கணேசன்[SIVAJI GANESAN] பெயரை க்கூட மிக கவனக்குறைவாக சிவகாசி கணேசன் [SIVAGAASI KANESAN ] என்று எளிதாக உளறுவதையும் , எம் ஜி ஆர் என்பதை எம் ச் யார் அல்லது செம்சியார் ,ஜெயலலிதா[JAYALALITHAA] பெயர் JEYALALIDHAA மற்றும் RAJANI GANDHU , VIJAYA  GANDHU என்னும் ஒலி யில் பேசுவதைக்காணலாம் - இதில் தமிழ் குறித்துப்பேருவகை வேறு..

தமிழ் ஒரு வலிமையான மொழி என்பதில் பூரணமாக உடன்படுகிறேன். ; ஆனால் நமது பிழையான உச்சரிப்பை தமிழர்கள் அல்லாது தமிழின் குறைபாடு என்று விமரிசப்பதற்கு நாம் ஏன் இடம் அளிக்கவேண்டும்.? பிற தென்னிந்தியமொழிகள் அனைத்திலும் சமஸ்க்ரித ஒலி  வடிவங்கள் பின்பற்றப்படுவதால் அவர்களுக்கு பிற பிராந்திய மொழியில் பேசுவது, , படிப்பது எளிதாகிறது. அதை விட அவலம் தமிழ் மொழியை பின் பற்றி ஆங்கிலத்திலும் உளறுவது அமோகமாக நடை பெறுகிறது . சான்றாக CRICKET என்ற சொல்லை KIRIKKET என்றே தமிழர்கள் சொல்வதையும் , ஒரு பிரபல சினிமா இயக்குனர் DHAAJ MAGAAL அதாவது [த்]தாஜ் மஹல் என்பதைக்கூட உச்சரிக்க இயலாத நபர்-- கொள்ளும் சுய கௌரவம் தரணி எங்கும் தேடினாலும்  கிடைக்காது.

ராஷ்ட்ரபதி என்ற சொல்லே அறியாமல் ஜனாதிபதி என்றே புழங்கி , ராஷ்ட்ரபதி என்று சொல்ல வரா மல் புழுங்கிச்சாவதை ப்பார்த்து சிரிக்காமல் என்ன செய்வது?  இதனைத்திலும் உச்ச கட்டம் TEMPORARY என்ற ஆங்கிலச்சொல்லை TEMPARAVARY டெம்பரவரி என்று ஆங்கில உரையாடலில் கூடஉளறி அதனால்  காய்ந்து  உலரும் தமிழர்கள் அநேகம்.. அது எந்த அளவிற்கு போய் விட்டதென்றால் மௌத் , சௌத்,  கௌரவம் என்ற ஒலிவடிவங்களே மறக்கப்பட்டு  மவுத் , சவுத், கவுரவம் என்றெல்லாம் எழுதி - ஒருசில எழுத்து வடிவங்களை குழிதோண்டி ஆழமாக ப்புதைத்து இப்போது உச்சரிப்பில் தடுமாற்றம் வந்து , ஒருகட்சியின் முக்கியஸ்தரே           Vajpayee அவர்களின் பெயரை Vaaj bai  என்று அனாயாசமாக [அனாவசியமாக ] உளறுகிறார். உளறலில் உவகை கொள்வதில் நம்மவர்கள் அலாதி ரகம் மற்றும் ராகம். குழந்தைகளுக்கு முறையான உச்சரிப்புகளை சொல்லித்தாருங்கள் இல்லையேல் எதிர்கால கிண்டல்களை எதிகொள்ள வேண்டி வரும்.  

 அன்பன் ராமன்

1 comment:

  1. தமில் எங்க உசுருக்கு நேரு
    எந்த கஸ்மாலமும் எங்க கிட்டதான் தமில் படிக்கனும். எவனாச்சும் எகிரினா ஜோட்டால அடிப்போம்
    ஹக் கும்
    வெங்கட்ராமன்

    ReplyDelete

ANGER AND EGO -8

  ANGER AND EGO -8 கொந்தளிப்பும் அகம்பாவமும்-8 SEEKING- FEED-BACK   கருத்து கோரி பெறுதல் இது ஒரு மனித செயல்பாடு குறித்த அளவீ...