Thursday, December 15, 2022

GREAT MINDS [TAMIL ]-8

 

GREAT MINDS [TAMIL ]-8 

தொடரின் தலைப்பே சிலருக்கு மறந்திருக்கக்கூடும் . ஆனால் நான் மறதியை நம்பி செயல் பட முடியாது.அசுரக்கூட்டத்தில் இப்போது மூவகை ஆளுமைகள் இடம் பிடிக்கின்றன . அவை நடன இயக்குனர் தங்கப்பன் குழுவினர், நடிக நடிகையர் அண்ட் இயக்குனர் ஸ்ரீதர் .,

நாளாம் நாளாம் திருநாளாம் பாடல் குறித்த விளக்கம் தொடர்கிறது.

கிட்டத்தட்ட சித்ராலயா நிறுவனத்தின் ஆஸ்தான நடன இயக்குனர் நிலைக்கு உயர்ந்தவர் தங்கப்பன். 1960 களில் அனைத்து உயர்தர தமிழ்ப்படங்களிலும் அவர் பெயர் இடம் பெற்றதை நான் நினைவு கூர்கிறேன் . நடன த்தில் பெயர் பெற்ற  பலர் தங்கப்பனின் ஆக்கங்களே. பாடலுக்கேற்ப semiclassical வகை நடனத்தை இப்பாடலுக்கு வடிவமைத்த அவர் இதே படத்தின் பிற பாடல்களுக்கு அமைத்திருந்த உள்ளங்கவர் நடன அமைப்புகளை பார்த்தாலே அவர் காலத்திற்கு முந்தைய நடன அசைவுகளை திரையில் உலவ விட்டவர் என்பது புலனாகும்.

பிறிதொரு சந்தர்ப்பத்தில் தங்கப்பன் குறித்து விரிவாகப்பேசலாம் என்று எண்ணுகிறேன். இப்போதைக்கு சாந்தா மற்றும் திரு கமல்ஹாசன் இருவரும் ஒரு நிலையில் தங்கப்[பனின் உதவியாளர்கள் என்பதை நினைவூட்டி வேறு தகவல்களைப்பார்ப்போம்.

ராஜஸ்ரீ /ரவிச்சந்திரன் இருவரும் மிக எளிதாக இப்பாடலில் தங்களை அற்புதமாக வெளிப்படுத்திக்கொண்டனர். இதில் மிக முக்கியமாக கருத்தில் கொள்ள வேண்டியது ராஜஸ்ரீ கவர்ச்சி நடிகை என்றறியப்பட்டவவர். ஆயினும் இந்தப்பாடலில் கெளரவமான ஆடை அணிந்து மிகவும் இயல்பாக நடன அசைவுகளை வெளிப்படுத்தி தான் ஒரு தேர்ந்த நடிகை என நிரூபித்திருந்தார்.

தலைமை அசுரன் ஸ்ரீதர்

ஸ்ரீதருக்கு எப்போதும் மாறுபட்ட படைப்புகளின் மீது தீராத ஆர்வம் இருந்தது. காலப்போக்கில் அதை இழந்ததால் அவர் தனது  வாழ்வில் பிற்பகுதியில்  பெருமளவில் சோபிக்கவில்லை என்பது அடியேனின் கருத்து. எவ்வாறாயினும் இந்தப்படம் [கா. நே] ஸ்ரீதரை ஒரு புரட்சிகர தயாரிப்பாளராக உயர்த்தியது. கதையே இல்லாமல் ஒரு காவியம் அதுவும் கலரில் மிகத்துணிச்சலாக தமிழ்த்திரை உலகைபுரட்டிபோட்டார் . உதவியாளர் கோபு அவர்களுக்கு சம அந்தஸ்து அளித்து நட்பையும் நற்பண்பையும் மிளிரவைத்தார். படத்தில் ஒரு வினாடி கூட தொய்வில்லாமல் மிகச்சிறந்த தொழில் நுட்ப முத்திரைகளுடன் அனாயாசமாக இப்படத்தை இயக்கி மிகவுயர்ந்த உயரத்தை எட்டினார். சொல்லிக்கொண்டே போகலாம். எங்கே அது பொன்றை ஆளுமையை இனி பார்க்கப்போகிறோம்.

மீண்டும் வேறு தகவல்களுடன் பின்னர் சந்திப்போம்.

அன்பன் ராமன்

 

,   

2 comments:

  1. மறக்க முடியாத பாடலையும் படத்தையும் நாங்கள் எப்படி மறப்போம்
    வெங்கட்ராமன்

    ReplyDelete
  2. கா.நே. ஒரு காவியம் என்பது சிலருக்கு மிகைப்படுத்தலாகத் தெரியலாம். ஆனால் என் பார்வையில் அப்படி அழைக்கப்பட எல்லா தகுதிகளும் உடைய திரைப்படமே. ஐம்பது ஆண்டுகளுக்குப்பின்பும் இத்திரைப்படம் அதே உயிரோட்டத்துடன் இருக்கிறதென்றால் அது காவியமல்லாமல் வேறென்ன?

    ReplyDelete

TEACHER BEYOND YOUR IMAGE-16

  TEACHER BEYOND YOUR IMAGE-16 ஆசிரியர் - உங்கள் பிம்பத்தை தாண்டி-16 நீ ங்கள் பேசும் ஒவ்வொரு சொல்லும்    கவனம் பெறும் . அதனால் , ...