GALLOPING HORSE
பாய்ந்த குதிரை
முழு மனதுடன் ஆத்மார்த்தமாக நன்றியும் பாராட்டும் தெரிவித்தாள் லேசர் . “இருக்கட்டும் மேடம் ப்ரோக்ராம் நடக்கும் போது பாருங்க , உங்களுக்கு பாராட்டும் ப்ரோமோஷனும் வருதா இல்லையானு.” -- சுபத்திரா
குதிரை தொடர்கிறது
3 இடங்கள்
ல காசிம் நாதஸ்வரம்,
2 ல செண்டை மேளம் [all women troupe], 2 ல கன்யாகுமரி -காசிம்,
ஹரித்துவாரமங்கலம் பழனிவேல், Zaakkir
Hussain தபலா ஜுகல் பந்தி,
அந்த ஷெட்யூல் அமைப்புக்குள்ளயே 3 ல 7 வயசு பசங்க
மின்னல் சிலம்பம் , இதோட பரத நாட்யம்
OR குச்சிப்புடி
, OR மோஹினி ஆட்டம் + கரகம் OR மயில் காவடி’
எல்லா இடத்துலயும் கேரளா களறி பாயட்டு 8-10 வயசு சிறார்கள் ஆடுவார்கள் எல்லாம் பிக்ஸ் பண்ணிட்டேன் என்று மூச்சு விடாமல்
சொன்னாள் சுபத்திரா.
எப்படிப்பாத்தாலும்
உங்க மினிஸ்ட்ரி கெய்டு லைன் படி 40-45 நிமிடத்துக்குள்ள நீட்டா முடி ச்சுடலாம் அநேகமா நாளை/ அல்லது ஒரு நாள் தள்ளி ஒத்திகை ஆரம்பிச்சு
டுவேன் எங்க ஆபீஸ் ஸ்டாப் [லெக்ச்சரர் கிரேடு] நல்ல அனுபவசாலிகள் தனித்தனியா கவனிச்சு
ரொம்ப கவனமா அமைச்சுக்கொடுத்துடுவா -vc கிட்ட schedule பேசி ஒப்புதல் வாங்கிட்டேன்.
இனிமே நீங்கள்ளாரும் தான் எங்களுக்கு எல்லா ஊருலயும் நல்ல வசதி /சாப்பாடு போக்குவரத்து
ஏற்பாடு பண்ணித்தரணும் . மேலேருந்து அப்ரூவல்
தெரிஞ்சதும் சரியான டிஸ்ட்ரிபியூஷன் எந்த டீம் எங்கே என்று நிச்சயம் பண்ணி நானே
சரியா பிரிச்சு உங்களுக்கே கிடைக்கும்படி மெயில் அனுப்பறேன் என்றாள் மீண்டும் மூச்சு
விடாமல் .
[லேசருக்கு மூச்சு வாங்கியது - ஆனால் உடனே ஒரு பிளான்
போட்டுவிட்டாள் லேசர் . PMO
ல பேசிட்டு கன் பர் ம் பண்றேன் -- ஒரு ரெண்டு தரம் நீங்க டெல்லி வரும்படியா இருக்கும்] .
அப்படியா?
என்றாள் சுபத்திரா , ப் ளை ட் , TO and FRO ++ எல்லாம் வாங்கிடலாம் நான் ஏற்பாடு பண்ணித்தரேன்
, நீங்க வந்துட்டேள் னா ஈஸி யா க்ளிய ரென்ஸ்
வாங்கிடலாம் எனக்கும் ரொம்ப டீடெய் லா ப்ரெசென்ட் பண்ணற அனுபவம் இல்லை என்றாள் லேசர்.
CLEAR POWER POINT
PRESENTATION பண்ணிடறேன் -கவலைய விடுங்கோ என்றாள் சுபத்திரா.
லிரில் சோப்பு நுரை மலைகளில் மூழ்கித்திளைக்கும் பெண்ணாக மனதில் பேருவகையில் மிதந்தாள் லேசர் . இன்னிக்கு ராத்திரி ஏதாவது ஆர்டர் பண்ணுங்கோ -நோ சமையல் என்றாள் வித்யா ;
பத்ரி குஷி ஆனான், வேதாந்தம் வாய் பேசாமல் ரிஷி ஆனான் . ரிஷி யாவது ஒண்ணாவது ஆர்டர் பண்ணித்தான் ஆகணும் என்று வேதாந்தத்துக்கு தெரியாதா என்ன?.
இத்தனை போன் பேச்சும் சுபத்ரா, கழுகு வீட்டில் இருந்தபோது நிகழ்ந்ததால் , ராமசாமி/அம்ஜம் அனைத்தையும் வினடிப்பொழுதில் தெரிந்து கொண்டனர். அம்ஜம் சொன்னாள் "ஒன்னளவு நான் படிக்கல ஆனாலும் சொல்றேன் -ஒரு பெரிய பொறுப்பை நிறைவேத்தப்போற , எல்லாம் நல்லபடியா நடக்கட்டும் ஒரு பத்து ரூபாய மஞ்சத்துணில முடிஞ்சு பெருமாள் சன்னதில வெச்சு [ஆத்தில தான்] நன்னா வேண்டிக்கோ பரிபூர்ணமா ஜெயிச்சுடுவ நீ –
இந்தா நான் ஒரு 5 ரூபா தரேன் -ஏன்னா எங்காத்துகூடத்துல இந்த பேச்சு நடந்ததால எங்களுக்கும் அக்கறை இருக்கு” -என்று 1 முழம் மல்லிகைப்பூவை சுபத்ரா தலையில் அணிவித்து ஆசீர்வதித்தாள் சுபத்ரா மிகவும் நெகிழ்ந்துபோனாள் , எனது நலனில் எவ்வளவு அக்கறை கொள்கின்றனர் இந்த தம்பதியினர் என்று சேவித்தாள் . எல்லாத்தையும் நன்னா கவனமா செஞ்சு குடு என்றார் ராமசாமி.
“எல்லாருக்கும் பெருமையும் கெளரவமும் சிறப்பா உயரும்படி செய்ய நினைக்கிறேன் ; பெருமாள் வழிகாட்டினால் போதும் , எங்க vc கிட்ட சொன்னா ரொம்ப சந்தோஷப்படுவார் , நம்ம யூனிவர்சிட்டி பேரை காப்பாத்தும்மா என்று வாழ்த்துச்சொல்வார்”.
அப்போது வந்த கஸ்தூரி ரெங்கனை ப்பார்த்து
'இவர் வேலைல சேந்தாச்சா என்றாள் சுபத்ரா ; இன்னும் இல்லை என்றான் க ரெ .ஏன் ஸார் வித்யா மேடம் husband கிட்ட நீங்க சொன்னா உடனே நடந்துருமே ஸார் " ---- சுபத்ரா
கழுகு "சொல்லிருக்கேன் ;
அவா அவாளுக்கு வேளை வந்தா வேலை தானே வரும்; இப்ப உனக்கு எப்படி புளியம்கொம்பு சிக்கியது , அவனுக்கும் குதிரைக்கொம்பு வாய்க்காமலாபோகும் ?"
"எப்பப்பாரு குதிரையே தான் ஸ்மரணை" என்று அம்ஜம் குமைந்தாள்
தொடரும்
அன்பன்
ராமன்
No comments:
Post a Comment