Saturday, January 21, 2023

HORSE HUNT

HORSE HUNT

குதிரை வேட்டை

வழக்கம் போல் காலையிலேயே ஸ்கூட்டரில் பறந்த கழுகு, பஸ் ஸ்டாண்டில், யூனிவர்சிட்டி பஸ்ஸுக்காக நின்றிருந்த சுபி என்ற சுபத்திரா வைப்பார்த்து, மிக மிக அவசரம் நீ காலை 11.00 மணிக்குள் டெல்லி வித்யாவிடம் பேசி விவரம் அறிந்துகொள் -TOP PRIORITY ட் டம்  மறந்து விடாதே என்று 3 போன் நம்பர்களைக்கொடுத்தான்.கண்டிப்பா பேசிடறேன் ஈவினிங் உங்க வீட்டுல வந்து விவரமா பேசறேன் ,அதோ பஸ் வரது  -- பை என்றாள் .

கழுகு பயங்கர ராசிக்காரன் , 'என்னதான் நடக்கும் நடக்கட்டுமே ' என்று பாடிய படி ஸ்கூட்டரில் பறந்தான்.

காலை 10.20 ரெ ஓடி வந்து சார் போன் பண்ணனும் னு ஞாபக ப்படுத்த சொன்னீங்களே என்றான். அதெல்லாம் கார்த்தாலேயே முடிச்சாச்சு என்று அம்ஜம் புகைந்ததை  நினைத்து சிரித்து விட்டு வேலையில் மூழ்கி விட்டான்.

காலை 10.50 -போன் ஒலித்தது ; கோன் என்றாள் வித்யா. [கோனும் இல்ல உருண்டையும் இல்ல என்று மனதில் நினைத்துக்கொண்டே ] நான் சுபத்ரா FROM TRICHY என்றாள் .   தாங்க்  யூ   என்றாள் வித்யா.

கட கட வென்று பூரா தகவலும் பரிமாறப்பட்டு, ஓர் BLUE PRINT அனுப்பறேளா என்றாள் வித்யா. ஒண்ணு  என்ன 6 அனுப்பறேன் -HIGHLY  FLEXIBLE  TO ACCOMMODATE FOR LAST  MINUTE CHANGES போறுமா என்றது குதிரை .

இவ குதிரையா , ரெக்கை கட்டிண்டு Pegasus மாதிரின்னா பறக்கறா 1 கேட்டா 6 தரேங்கறா -பயங்கர ஆசாமி அதான் ராமசாமி பிடிச்சு வெச்சுண்டிருக்கார்.என்று வியந்தாள் லேசர்.

இங்கே சுபத்ரா

"எப்பேர்ப்பட்டசெல்வாக்கு உள்ள ஆசாமிக்கு மடிசார் உடுத்திவிட்டிருக்கேன். கையை நீட்டி ஏதாவது வாங்கியிருந்தா அந்த பிசினஸ் அதோடு போயிருக்கும் .இவ்வளவு பெரிய INTERNATIONAL  DIGNITARIES க்கு நம்ம நாட்டின் சார்பில் நிறைய இடங்கள் PROGRAM பண்ணற வாய்ப்பு எல்லாருக்கும் வாய்க்குமா , சும்மா ஜமாய்ச்சுப்புட வேண்டியது தான். ராமசாமி சாரும் சந்தோஷப்படுவார் . அந்த லேடி [வித்யா] நெஜம்மாவே பெரிய அதிகாரிதான் போலிருக்கு. 3 போன் 2 HOT LINE  ங்கறாளே -தப்பித்தவறி கூட வேற விஷயம் பேச வேண்டாம் எல்லா லயனும் ரெக்கார்ட் ஆகுமாமே . சரி ஜாக்கிரதையா நடந்துண்டு சக்கைபோடு போடறேன் என்று மாரியம்மனை வேண்டிக்கொண்டாள் . மாலை 4.20 மணிக்கு 6 வித BLUE PRINT வெவ்வேறு ஐட்டங்களுடன் சுமார் 35-45 நிமிடங்களுக்குள்ஒவ்வொன்றும்   நடைபெறத்தக்கதாக வடிவமைத்து e-mail 4.42 க்கு சென்று சேர்ந்தது , உடனே PRINCIPAL  SECRETARY க்கு, தனது குறிப்பு மற்றும் பட்ஜெட் உடன் அனுப்பிவைத்தாள் வித்யா.

அதான் PM  இந்த லேடியை தேர்ந்தெடுத்திருக்கார் SOUTH INDIANS எவ்வளவு நுணுக்கமாக வேலை செய்கின்றனர் என்று அசந்தார்  PRINCIPAL  SECRETARY .

பஞ்ச கல்யாணி

குதிரையில் பஞ்ச  கல்யாணி என்றொரு பெயர் / வ/கைஉண்டு. நமக்கு அதைப்பற்றி ரொம்ப தெரியாது ; ஆனா இவ பாஞ்ச [அதாவது பாய்ந்த ] கல்யாணி என்று நிச்சயம் நம்பலாம் .சும்மா ஒரு 5 மணி நேரத்துக்குள்ள 6 ப்ரோபோசல் அதுவும் ரொம்ப தெளிவா -குழப்பமே இல்லாம அப்பப்பா இவாள்ளாம் WHITE HOUSE விட்டா கூட UNO வை யே கலக்கி , கஞ்சி பிழிஞ்சுடுவா -அம்மாடியோவ் என்று சுபத்திரா வைப்பற்றி வேதாந்தத்திடம் வியந்து பாராட்டிக்கொண்டிருந்தாள் லேசர்

அதெல்லாம் சரி -அவாளுக்கு ஒரு தாங்க்ஸ் சொன்னியா நீ என்றான் வேதாந்தம். சாரி பேச்சுவாக்கில விட்டுப்போய்டுத்து சாரி சாரி என்றாள் லேசர்..

ஏய் இப்ப உட்கார்ந்து கதை அடிச்சிண்டுஇருக்க - இப்ப கூப்பிட்டு சொல்லேன் என்றான் வேதாந்தம் 

உடனே போன் பறந்தது சுபத்திராவிற்கு

தொடரும்   

அன்பன் ராமன்   

No comments:

Post a Comment

COMPETENCE - IS IT A GIFT?

  COMPETENCE - IS IT A GIFT? Too much has been said and heard of it, but little has been understood by the learner-stage youth. There is a...