WHO THOU ART? --II
யாரடீ நீ மோஹினி -விந்தையான வேந்தனே -- 2
பெங்களூரில் இருந்து போன் பேசினாள் லட்சுமி, அப்போதும் ' நீங்கள் தொடர்பு கொள்ள முயற்சிக்கும் வாடிக்கையாளர் வேறு ஒருவருடன் பேசிக்கொண்டிருக்கிறார்., சிறிது நேரம் கழித்துதொடர்பு கொள்ளவும்’என்றே கடமை தவறாமல் ஒலித்தது. லட்சுமி முடிவெடுத்தாள் -ஊருக்கு திரும்பியதும் இந்த ஆசாமி யாருடன் நெருங்கி அன்பைப்பொழிகிறார் , நான் கேட்டால் கூட அசரப்போவதில்லை என்பது போல இருக்கிறார் , எனவே கூர்ந்து கண் காணிக்க வேண்டும் என்று முடிவெடுத்தாள் லட்சுமி . அப்போது தான் தனது பெங்களூர் தோழி BSNL நிறுவனத்தில் உயர் அதிகாரி என்று நினைவு வந்து அவளிடம் ஆலோசித்தாள் .அவள் இவளுக்கு என்று ரிஸ்க் எடுக்க [ரெகார்டிங் OF பிரைவேட் CONVERSATION ] முன்வரவில்லை. நீயே வேறு ஏதாவது செய்து கொள் என்று கை கழுவினாள்.
ஊர்
வந்தவுடன் பாஸ்கரனிடம் 'நீங்கள் யாரோடயே பேசிக்கொண்டே இருக்கிறீர்களே யார் அது?
-பாஸ்க
"அவள் ஒரு பெண் '"
"ஓ"
-லட்சுமி , அப்புறம்-- பேர் ? பாஸ்க "லலித் குட்டி"
எத்தனை
நாளாக இந்தப்பழக்கம் ?-- லக்ஷ் .
பாஸ்க் -"சுமார் மூணு வருஷமா"
லக்ஷ்
-அப்போ நம்ம கல்யாணத்திற்கு முன்னாலிருந்தேவா ?
" பாஸ்க "EXACTLY"—
வெக்கமா
இல்ல உங்களுக்கு ? -லக்ஷ் .
'வெக்கப்பட்டா
இதெல்லாம் முடியுமா?" என்றான் பாஸ்க
நான் அவளப்பாக்கணும் நறுக்குன்னு நாலு கேட்கணும் என்றாள் , உன்னாலே முடியாது ஏன்னா 3 வருஷமா லலித் என் டார்லிங், நீ 2 வருஷமாதான்.
கோபம்
கொப்பளித்தாள் லட்சுமி.
அப்போது
போன் வந்தது.. பாஸ்கரன் " ஹாய் டியர் எப்படி இருக்கே"
குரல்
FINE -நீங்கதான் 10 நாளா வரவே இல்லையே அதுதான் எனக்கு கொஞ்சம் வருத்தம். என்றாள் லலித்
குட்டி.
ஈவினிங்
பார்ப்போம் என்றான் பாஸ்கரன் .
'நானும்
வருவேன்' --லட்சுமி -SURE வா உன் கல்யாணம் பெரிசா அவ தொடர்பு பெரிசா முடிவு பண்ணனும் -அதனால வா என்றான் பாஸ்கரன்.
இவன்
மஹா எத்தன் போலிருக்கே என்று திகைத்தாள்.
அப்போது
இன்னொரு போன் " டேய் மது பேசறேன் சாயங்காலம் மீட் பண்ணலாமா " என்றான். ஒ … நீ -லலித்
இருக்கும் ஹாஸ்டலு க்கு வா -5.00PM என்றான்
.லக்ஷ்மிக்கு
தலை சுற்றியது , ஒரு பொண்டாட்டி , ஒரு ---------- இதோட ஒரு மூன்றாம் நபர் இது மஹா அவந்தரைக்கூட்டம்
போலயே என்று வெறுப்புகொண்டாள்.
பெரிய
BOQUET , ஒரு 1/2 கிலோ ஸ்வீட் வாங்கிக்கொண்டு போய் இறங்கினர் "அன்னை சாரதா தேவி மகளிர்
விடுதி " என்னும் விலாசத்தில்.
சரியாக வந்து சேர்ந்தான் மது என்னும் மது சூதனன். ஹாஸ்டல் தலைவி கூப்பிய கைகளுடன்
அனைவரையும் வரவேற்று 'லலித் குட்டியின் 5ம்
எண் அறைக்கு அழைத்துச்சென்றாள் . அழைப்புமணியை அழுத்தினாள் லலித் குட்டி ஓடி
வந்து வாங்க அங்கிள் என்று பாஸ்கரன் மீது பாசமுடன் சாய்ந்தாள் அவளுக்கு சுமார் 10 வயது
இருக்கும். ஒரு கண் ஊனம், கிட்டத்தட்ட மறு கண்ணும் பொய்த்துப்போகும் முன் பாஸ்கரன்
நண்பன் மதுவின் உதவியால் ஒரு கண்ணை மீட்டுக்கொடுத்தான். மதுசூதனன் வியன்னாவில் மிகச்சிறந்த கண் வைத்திய பயிற்சி பெற்று ஏராளமான
குழந்தைகளுக்கு கண்ணொளி வழங்கியவன்.
அப்போது
தான் முதல் முறையாக லலிதாவைப்பார்த்த லட்சுமி விக்கித்து நின்றாள். வார்டன் அனைத்தையும்
லக்ஷ்மிக்கு விளக்கி சொல்ல அவள், [லட்சுமி] --- நான் எவ்வளவு நல்ல மனதுடையவனை காமுகனாக
கற்பனை செய்தேன் -என்று மிகவும் வருத்தமுற்றாள். இதை ஏன் நீங்க முன்னாலேயே சொல்லல என்று
பாஸ்கரை க்கேட்டாள். நான் என்னனு சொல்லிக்க முடியும் , மது தான் கடவுளா வந்தான் , இந்த
ஹாஸ்டல் இவள் போன்ற பலரை காப்பாற்றி வாழ வைக்கிறது நமக்கென்ன பெருமை என்று ஞானியாய்
மிளிர்ந்தான். மது சொன்னான் "சின்ன வயசுலேந்தே பாஸ்கரன் கருணையும், நகைச்சுவையும்
உடையவன் யு ஆர் லக்கி MAM என்றான். மனித வடிவில்
தெய்வங்கள் இந்த நாட்டில் ஏராளம்.
பாஸ்கரன்
சார் னு ஒருத்தர் இல்லேன்னா இந்த குழந்தை --நினைத்துப்பார்க்கவே நெஞ்சு பதறுகிறது என்றாள்
வார்டன்
லலித்குட்டி
மோஹினி - யும் அல்ல பாஸ்கரன் விந்தையானவனும்அல்ல
வேந்த னும்அல்ல-- மனம் கொண்ட மனிதர்கள்.
நன்றியுடன் அன்பன் ராமன்
No comments:
Post a Comment