Thursday, January 19, 2023

WHO THOU ART?--

 

WHO THOU ART?--

யாரடீ நீ மோஹினி -விந்தையான வேந்தனே

இது என்ன ஒரு சினிமாப்பாடல் போல இருக்கிறதே என்பவர்கள் சினிமாவை விட்டு விலகி வெளியே வாருங்கள். பொது வெளியில் ஏராளமான நன் முத்துக்கள் சிதறிக்கிடக்கின்றன; நாமோ சினிமாவே அனைத்தும் என்பது போல பொருளையும் பொழுதையும் வீணாக்கிவிட்டு , ஐயமும் கிலேசமும் நிறைந்த கோமாளிகளாக என்று பல்லைக்காட்டிக்கொண்டு சீரியல் நாடகங்களின் வக்கிரத்தில் ஆழ்ந்து அமிழ்ந்து சுற்றிலும் இருப்பவர்கள் சுயநலமிகளே என்று இறுதித்தீர்ப்பும் எழுதிவிட்டு 'நீயே உனக்கு என்றும் நிகரானவ ன் /நிகரானவள்'  என்று  தனக்குத்தானே புகழ்மாலை சூட்டிக்கொண்டு -பக்கா கீழ்ப்பாக்கங்களாக அலைகிறோம். அது போன்ற ஒரு கதைக்களம் தான் இது.

ஒரு வெள்ளிக்கிழமை காலை 10. 30 மணி

லட்சுமி தன்  கணவருடன்   போனில் பேச முயற்சித்தாள்

போனில் குரல் ' நீங்கள் தொடர்பு கொள்ள முயற்சிக்கும் வாடிக்கையாளர் வேறு ஒருவருடன் பேசிக்கொண்டிருக்கிறார்., சிறிது நேரம் கழித்துதொடர்பு கொள்ளவும்,

மீண்டும் 11.00 மணிக்கு அதே நம்பர் போனில் அதே போன்  குரல் .  " ' நீங்கள் தொடர்பு கொள்ள முயற்சிக்கும் வாடிக்கையாளர் வேறு ஒருவருட''................ கழித்துதொடர்பு கொள்ளவும்," மீண்டும் மதியம் 12.20 மணிக்கு அதே நம்பர் போனில் அதே போன்  குரல் .  " ' நீங்கள் தொடர்பு கொள்ள முயற்சிக்கும் வாடிக்கையாளர் வேறு ஒருவருட''................ கழித்துதொடர்பு கொள்ளவும்',

இவன்[பாஸ்கரன்] நல்ல அழகன் கைநிறைய சம்பளம் வாங்கும் ஆசாமி, யார் யாரோ இவனுக்கு வலை வீசுகின்றனர் போலும் இவன் பேக்கு மாதிரி இருக்கிறான் இன்று இரண்டில் ஒன்று பார்த்து விட வேண்டியதுதான்.சாயங்காலம் வரட்டும் அவன் என்று உறுமினாள் லட்சுமி.

சாயங்காலம் என்பது அவளுக்கு 5.30 ; அவனுக்கு கணக்கே இல்லை 5.15 முதல் 7-50 வரை சாயங்காலம் தான். அன்று 6-20க்கு வந்தான்.5 நிமிடம் கழித்து ஹார்லிக்ஸ் வந்தது சூடாக. ஏன் காப்பி இல்லையா என்று ஏங்கினான். இல்ல -ஹார்லிக்ஸ் சாப்பிட்டா நல்ல பலம் வரும் சண்டை போடலாம் என்றாள் லட்சுமி. அப்ப நீயும் .ஹார்லிக்ஸ் சாப்பிடு என்றான் ; வேண்டாம் நன் என்ஷ்யூர் சாப்பிட்டுவிட்டு தான் தயாரா இருக்கிறேன்

"தயாராவா இல்ல தாயாராவா என்று வம்பிழுத்தான்;  இது தான் சமயம் என்று 10.30/ 11.00/ 12.20 க்கு ஒலி த்த  ' நீங்கள் தொடர்பு கொள்ள முயற்சிக்கும் வாடிக்கையாளர் வேறு ஒருவருடன் பேசிக்கொண்டிருக்கிறார்., சிறிது நேரம் கழித்துதொடர்பு கொள்ளவும் என்று மூன்று முறை ஒப்பித்தாள் . உடனே பாஸ்கரன் அவங்க சரியா சொல்லல ஏன்னா , " நீங்கள் தொடர்பு கொள்ள முயற்சிக்கும் வாடிக்கையாளர் வேறு ஒருத்தியுடன்  பேசிக்கொண்டிருக்கிறார். தினமும் [ஆபீஸ் நாட்களில்] அவளோடு பேசிக்கொண்டிருக்கிறார் , இருப்பினும் விடாது முயற்சிக்கவும் என்று சொல்லியிருக்கணும் சுத்த பயந்தாங் கொள்ளிக -அரைகுறையா சொல்றாங்க என்றான். இப்பதான் பெண்மனம் அதி விரைவாக இயங்கியது. காலை 3 முறையும் அவள் போன் பேச முயற்சித்ததே பெங்களூரில் ஒரு 10 நாள் தாய் வீட்டிற்கு போய்  வரலாம் என்பதற்காகத்தான். இப்போது போன் சம்பவத்தினால் மனம் உடைந்ததனால் நன் அம்மா வீட்டிற்கு போகிறேன் என்று கிளம்பினாள். பாஸ்கரன் பனங்காட்டு நரி .. போகலாமே ராத்திரி பஸ்ல டிக்கட் இருக்கா --பாக்கவா என்றான். சரி என்று சொன்னால் நீ முதலில் கிளம்பு என்று மொத்தமாக துரத்திவிடுவான் போலிருக்கிறதே , வேண்டாம் என்றால் சும்மா மூக்கை சிந்தாதே என்றுஊருக்குப்போக நினைத்ததும் போய் விடும் . ஒண்ணும் இல்ல ஒரு 4-5 நாள் மட்டும் போய்விட்டு வருகிறேன் என்றாள் ;அவன் எஸ் என்றதுடன் மறுநாள் காலை ரயிலில் அனுப்பிவைத்தான்.                                                                தொடரும்  அன்பன் ராமன்

1 comment:

  1. வேறு ஒருத்தியுடன் பேசிக்கொண்டிருக்கிறார் என்றால் விவகாரம் தான்
    வெங்கட்ராமன்

    ReplyDelete

Of KINGS AND CABBAGES

  Of KINGS AND CABBAGES கோஸ் / முட்டை கோஸ் In response to the previous blog post of mine on “Curry leaf” my revered friend Dr. KANNA...