I MET YOU
உன்னை நான் சந்தித்தேன்
கருவிகளையும் மிருகங்களையும் , பறவைகளையும் ஏதோ சில அறிமுக அடையாளங்களாக உபயோகிக்கப்போக இப்போது எவரும் உண்மைப்பெயர்களை க்கூட தேடுவதில்லை. ஆனாலும் இது கொஞ்சம் ஓவர் என்ற நிலையில் தான் இந்தப்போக்கு வெகுவாக வளர்ந்துவிட்டது . மெல்ல மெல்ல இதை இயல்பு நிலைக்குத்திருப்பி மனிதர்களை அவர்தம் பெயர்களிலேயே அடையாளப்படுத்த முயற்சிக்கிறேன். மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திருப்புகிறேன் என்று ஏகமாக கதையை நீட்டுவாய் போல் தெரிகிரகிறதே என்று சிலர் நடுங்குவது புரிகிறது.. கவலை வேண்டாம் வெகுவிரைவில் முடித்து விட விரும்புகிறேன்.
டிக்கட் வந்ததால் சுபி குழுவினர் [1+4 } தயாரானார்கள். யூனிவர்சிட்டி விதிகளின் படி "ஆன் ட்யூட்டி " சலுகைகளை பெற்றுக்கொண்டு ஒரு புதன் கிழமை காலை 25-01-23- 7.00 மணி டெல்லி விமானத்தில் பயணித்து மதியம் 1.20 டெல்லி விமான நிலையத்தில் இறங்கி , பரபரப்பாக தத்தம் லக்கேஜ் களை கன்வேயர் பீடத்தில் இருந்து எடுத்துக்கொண்டு பிறரைப் பின்பற்றி வெளியே வந்தனர்.
Dr Subhadra என்ற அட்டையை ஏந்தி நின்றவனை நோக்கி நகர்ந்து முகம் மலர்ந்தனர் . அவன் இவர்களை வழி நடத்தி டாக்ஸி கூட்டத்தில் நடுவில் புகுந்து ஒரு பெரிய வாகனத்தின் அருகில் சென்று செல் போனில் ஓ லோக் ஆயா ' என்றான் அடுத்த வினாடி அம்பு போல் பாய்ந்து வந்த வேலுச்சாமி "வணக்கம் மா " வாஷ் ரூம் போய் வர கொஞ்சம் லேட்டா ஆயிருச்சு - sorry என்றான். அதெல்லாம் ஒண்ணுமில்லை என்றாள் சுபி . இரண்டு வினாடிகளில் லக்கேஜ் ஏற்றி டிக்கியை மூடி விட்டு , மேடம் இப்ப நீங்க அசோகா ஹோட்டல் ரூம் 205, 206, 207 இல் இறங்கி லஞ்ச் முடிச்சுடுங்க. லஞ்ச் சாப்பிட்டதும் உங்கள ரூமில் விட்டுட்டு , நான் போயி டைரக்டர் மேடம் மற்றும் 1 secretary sir , இரண்டு பேரையும் இங்க கூட்டிக்கிட்டு 4-45 -- 5.00 க்குள்ள கூட்டிட்டு வந்துர் றேன் .
நீங்க கிளம்புங்க நாங்க Dining ல போய் சாப்புட்டுக்கறோம் என்றாள் சுபி .
இல்ல மேடம் --இருந்து கரெக்ட்டா எல்லாம் செஞ்சு குடுத்துட்டு தான் வரணும் னு மேடம் உத்தரவு. அவங்க சொல்லிட்டா அது தான் final ; நான் உங்களுக்கு வேண்டிய எல்லாம் செய்யத்தானே அனுப்பி இருக்காங்க. நீட்டா எல்லா ஏற்பாடும் செஞ்சுடறேன் . மாலை வரை ரெஸ்ட் எடுங்க , பகலி லயே குளிரும் ஸ்வெட்டர் போட்டுக்குங்க.என்று பவ்யமாக வே பேசினான். சொன்னபடி ரூம், உணவு ஏற்பாடு களை கவனித்து விட்டு, பெரிய மினரல் வாட்டர் பாட்டில்களை 3 ரூமிலும் வைத்து விட்டு அம்மா ஈவினிங் வரேன் என்று விடை பெற்றான் வேலுச்சாமி --மணி 2-43.
3.10 க்கு வேலுச்சாமி வித்யா மேடம் சேம்பரில் போய் அனைத்தையும் சொல்லி விட்டு எப்பம்மா ட்ரிப் எடுக்கணும் என்று கேட்டான் . 4.30 டு 4. 40 க்குள்ள கிளம்பலாம் ,வழியில என்று ஏதோ மெல்லிய குரலில் கிசுகிசுத்தாள் [2 , 3-- 500/- ரூபாய் நோட்டுகளை கொடுத்து கவனம் என்றாள் -சரிங்கம்மா என்றான் வேலுச்சாமி ]
மாலை 4.35 க்கு கார் புறப்பட்டது ,வழியில் 5 bouquet வாங்கி வண்டியில் வைத்தான் வேலுச்சாமி. மாலையின் நெரிசலி ல்பயணித்து 5 மணிக்கு அசோகா ஹோட்டல் வந்தனர் வித்யா + செயலர். 205 இன் அழைப்பு மணி ஒலிக்க சுபி வெளிவந்தாள் - சுடிதாரில் குதிரை வால் கொண்டையுடன் நெற்றி மேல் ஏற்றிய கூலிங் கிளாஸ் உடன் ஹேமமாலினி -அதான் வித்யா.
குதிரை சற்று மிரண்டது -எவ்வளவு நேர்த்தியாக தன்னை அலங்கரித்துக்கொண்டிருக்கிறாள் - அதுவும் பெரும் உயரதிகாரி . இவளை இடுப்பைச்சுற்றி எவ்வளவு நெருக்கமாக மடிசார் அணிவித்தேன் இப்போது தொடமுடியுமா -தொட்டால் கம்பி எண்ண வேண்டியதுதான் என்று மனம் பயந்தது-குதிரைக்கு.
என்ன எல்லாரும் சாப்பிட்டீர்களா என்று விசாரித்து BOUQUET கொடுத்து வரவேற்றாள் வித்யா. அறிமுகம் முடிந்து சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தனர். நாளை 11.00 மணிக்கு 1 செஷன் , பின்னர் மாலை 3.30 மணிக்கு 2ம் செஷன் -இரண்டிலும் நீங்கள்[ குதிரை] LEAD பண்ணி ஆரம்பித்து பிறர் விளக்க டெமோ செய்ய வேண்டும். CD -பவர்பாயிண்ட்+ EXPLANATION சுமார் 40-45 நிமிடம் ஒவ்வொரு செஷனும் என்று OUTLINE தெரிவித்து, காலை 10.00 மணிக்கு ரெடி யா இருங்கள் கார் வரும் , கெஸ்ட் ஹவுஸ் இல் உயர் அதிகாரிகள் முன்பு டெமோ செய்யவேண்டும். கவனம். PM வரமாட்டார் ஆனால் VIDEO CONFERENCE இல் பார்த்து முடிவு செய்வார். GOOD LUCK என்று விடை பெற்றாள் வித்யாமாலினி .
தொடரும் அன்பன் ராமன்
ஆசை குதிரையின் இடுப்பைத் தொடுவதிலா ? ஆபத்துதான்
ReplyDeleteகுதிரை எட்டி உதைத்துவிடும்
வெங்கட்ராமன்