LASER IN SRIRANGAM- 10
ஸ்ரீரங்கத்தில் லேசர் --10
திடீர்னு பூவே இல்லங்கரா ளே சாத்தாரா வீதி முழுக்க என்று அதிர்ந்தாள் அம்ஜம் . சரி அப்புறம் -இது கழுகு
திரட்டுப்பால் கிளற 3-லிட்டர் பால் வேணும் -இது அம்ஜம்
வேணும் வேணும் னா கூரைலேர்ந்து குதிக்குமா ? இப்ப பார் நான் என்ன பண்ணறேன்னு என்று ஸ்கூட்டரில் விர் ரென பாய்ந்தான் வடக்கு வாசலில் . லாவண்யா வீட்டில் வந்து நின்றான். என்ன சாமி என்று ஓடி வந்தாள் லாவண்யா, மஞ்சள் பூசிக்குளித்துவிட்டு .
சுத்தமான பசும்பால் வேணும் 3 லிட்டர் அதுவும் இன்றே முடியுமா? என்றான் கழுகு.
நேத்துதான் சாமி புது மாடு கரூரிலேர்ந்து வங்கியிருக்கோம். கண்டிப்பா உங்களுக்கு 4 லிட்டர் கூட தரேன் கொண்டு போங்க. உங்க ராசிக்கு எனக்கு நல்லா ஓடும் வியாபாரம் , தரேன் கொண்டு போறீங்களா என்றாள். நல்ல பெரிய எவர்சில்வர் கூஜாவில் சுமார் 4 லிட்டர் பால் கழுகுவிடம் கொடுத்து ,பணம் நான் அப்புறமா வாங்கிக்கறேன் சாமி என்றாள். வெற்றிப்புன்னகையுடன் கழுகு வீடு திரும்பினான்.
பூ என்றாள் அம்ஜம் ;
என்ன “ப் பூ” இவ்வளவு தானாங்கறியா என்றான் கழுகு
அதில்ல
நான் பூ வாங்கலியா னு
கேட்டேன் என்றாள் . பாலைத்தூக்கிண்டு ஊர் சுத்தினா அது
கெட்டுப்போய்டும். அதுனால அதை குடுத்துட்டு
போகலாம்னு வந்தேன் . பூ கொஞ்ச நேரத்தில
வாங்கித்தரேன் என்றான் கழுகு
இப்போது அம்ஜம் ஆச்சரியப்பட்டு கேட்டாள் -"சொன்ன உடனேயே வாங்கிண்டு வறேளே -எல்லா பால்காரனும் உதட்டை பிதுக்கிட்டு பாக்கலாம்மா னு நழுவறானே .
“நான்
அப்பவே சொன்னேனே 'எல்லாம் இனிமே சஸ்பென்ஸ்
தான் என்று” - கழுகு
அம்ஜம் லேசாக ஜகா வாங்கினாள். பெரிய சஸ்பென்ஸ் என்று வலது கையை இடம் வலமாக ஆட்டினாள்.
கழுகுக்கு ப்புரிந்துவிட்டது அம்ஜம் தோல்வியின் கோபத்தில் அரற்றுகிறாள் என்று.
சரி பூ எவ்வளவு முழம் என்ன பூ என்றான் கழுகு.
இவனை நன்றாக வேலை வாங்க வேண்டும் என்ற எண்ணத்துடன் 25 முழம் மல்லிகை , 15-16 முழம் கதம்பம், அரைக்கிலோ உதிரி என்று அடுக்கினாள்.
இதோ என்று ஸ்கூட்டரில் ஹை ஸ்கூல் பக்கம் சுப்பிரமணி தெருவில் கோவிந்தசாமியை பிடிக்க போனான்.
கோவிந்தசாமிக்கு வேளை சரியில்லை போலும். தனம் [கோவிந்தசாமியின் மனைவி ] திருவானைக்காவல் பெண் பற்றிஅரசல் புரசலாக தெரிந்துகொண்டு கோவிந்தசாமியை உண்டு இல்லை என்று பிய்த்தெறிவாள் போல ருத்ரதாண்டவம் ஆட , கழுகுக்கு மூக்கு வியர்த்தது. இவனை மடக்க இதுவே சரியான வாய்ப்பு என்றெண்ணி கழுகு “கோவிந்தஸாமீ “ என்று உரத்த குரலில் அழைத்தான். கோவிந்தசாமி யின் ஆயுளில் அப்படி ஒரு நடுக்கம் தோன்றியதே இல்லை
ஐயோ இப்போது ராமசாமிவேறு எதையாவது பற்றவைத்துவிட்டால் , ஆயுசுக்கும் துயரமே என்று குலை நடுங்கினான்.
கழுகு வாயை திறந்தவுடன் --- கோவிந்தசாமி “உங்களுக்கு என்ன வேணும் குறை இல்லாம செஞ்சு தரேன்” என்றான்.
அம்ஜத்தின் பூ லிஸ்டை [25 முழம் மல்லிகை , 15 -16 முழம் கதம்பம் அரைக்கிலோ உதிரி ] அப்படியே நாளை கொடு என்றான். கழுகு
கோவிந்தசாமியின் காதில் நாளை 'கெடு ' என்றொலித்தது . நீங்க நம்பி போங்க சாமி நான் உங்களுக்கு பூரா சரக்கையும் கொண்டாந்து சேத்து ர் றேன் . என்று கழுகை வழி அனுப்பி வைத்தான்.
தனத்திடம்
இருந்து தப்பிக்க இது நல்ல சான்ஸ்
என்று திருச்சி மார்க்கெட்டுக்கு ஓடிவிட்டான் கோவிந்தசாமி இல்லையேல் அவன் அப்போதே கோவிந்தா சாமி
ஆகி இருப்பான்.
சிறிய சந்தேகங்கள் சீரிய வாழ்வில் சீறும் நாகமெனக்கிளம்புவதை தடுக்கவோ தவிர்க்கவோ இயலாமல் மக்கள் அல்லலுறுவதும் ஈசன் செயல் அன்றி வேறென்ன ? கழுகுக்கு கோவிந்தசாமி மீது அனுதாபம் பிறந்தது. அவன் என்ன பேசினாலும் எடுபடாது . பாவம் கோவிந்தசாமி.
சரியாக காலை 4. 40 மணிக்கு ஒரு கூடை நிறைய புஷ்பச்சரங்கள், உதிரிப்பூக்கள் மனம்/ மணம் கமழ கழுகு வின் வீட்டில் கொண்டு போய் சேர்த்தான் கோ . சாமி [அம்ஜம் அசந்தே போனாள் கழுகின் திறமையைக்கண்டு }
ராமசாமி கேட்டான் எவ்வளவு பணம் தரணும்.? 400/- பொழுது விடிஞ்சு வாங்கிக்கறேன் சாமி என்றான் கோ. சாமி அதை சொல்லி விட்டு கோ. சாமி தயங்கி நின்றான்.
என்ன? என்றான் ராமசாமி
ஏதாவது வேணும்னா போன் பண்ணுங்கய்யா , நான் கரெக்ட்டா செஞ்சு தர் றேன் என்றான் கோ. சாமி.
கழுகுக்கு கோ. சாமி இருக்கும் குழப்பநிலை புரிந்துவிட்டது . கவலைப்படாதே கோவிந்தா , நான் எந்த நிலையிலும் உனக்கு இடைஞ்சல் ஏற்படுத்தமாட்டேன் , நான் உன் வீட்டுப்பக்கம் வந்தால் சிக்கலில் மாட்டிவிடுவேன் என்று நினைக்கிறாய் . இந்த ராமசாமி யாருக்கும் தீங்கு நினைக்காதவன் ; நீ ஏன் குழம்புகிறாய் என்று ஆறுதல் சொல்லி , இரு என்று உள்ளே சென்று ஒரு கப் அம்ஜம் காப்பியை சூடாக தந்தான். கவலை நீங்கிய கோ. சாமி " சாமி குண்டன் கடை காப்பி ய விட நல்லாருக்கே , நம்ம வீட்டு மாமி செஞ்சதா என்று நன்றிப்பெருக்குடன் பாராட்டிவிட்டு தனது செல் போன் நம்பரை தந்து விட்டு கோயிலுக்கு பூ கொண்டு போகணும் சாமி , வரே ங்கம்மாஎன்று சொல்லி விட்டு தெருக்குழாயில் காப்பி சாப்பிட்ட தம்ளரை சுத்தமாக கழுவி திண்ணையில் கவிழ்த்து விட்டு சைக்கிளில் ஏறி விரைந்தான்.
கழுகு மனப்பூர்வமாக கோ. சாமி நன்றாக இருக்கணும் "ரெங்கா" என்று வேண்டினான்
அம்ஜம் நமக்கு இவனிடம் சொல்லி பூ வாங்கிக்கொள்ள தோன்றவில்லையே , இந்த ராமசாமி நிச்சயம் அசகாயசூரன் தான் என்று தீர்மானமாக புரிந்து கொண்டாள்.
தொடரும் அன்பன் ராமன்
அம்பு ஜம்மென்னு அம்பு எறிய கழுகு பறந்து ஓடிப்போய் பூவும் பாலும் வாங்கியது அற்புதம்
ReplyDeleteவெங்கட்ராமன்