Tuesday, January 3, 2023

LASER IN SRIRANGAM -11

 LASER IN SRIRANGAM -11

ஸ்ரீரங்கத்தில் லேசர் - 11      

பரபரவென்று இயங்கினாள் அம்ஜம். ஐயோ மாமி இன்னும் திரட்டிப்பால் ஏற்பாடே ஆகலியே என்று ஓடிவந்தான் கே. கு.

நான் கிளறி கொண்டு வருகிறேன் நீ போ --மத்த வேலைகளைப்பார் என்றாள் அம்ஜம் . உயிர் வந்தவனாக சிரித்தான் கே.கு .

அம்ஜம் சூப்பர் திரட்டுப்பால் செய்து குங்கமப்பூ ஏலக்காய் , ஜாதி பத்திரி அளவாகக்கலந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டிவைத்தாள் . லேசர் கூட கேட்டாள் "ஏன் உருண்டை பிடிச்சுட்டேள்" அம்ஜம் சொன்னாள் "இல்லேன்னா ஒவ்வொருத்தியும் குழம்புக்கரண்டியால நெம்பி, பிள்ளை மாட்டுப்பெண் நாத்தனார் ஓர்ப்படினு வாரி வழங்கிட்டு ஊருக்குப்போயிடுவா. அப்புறம் நம்ப பாத்திரத்தை முகர்ந்து  பாத்துக்க வேண்டியது தான்.

லேசர் அதிர்ந்தாள் -அம்புஜம் பலே ஆசாமி தான் என்று.

கழுகு கேட்டான்  ஆமாம் அப்படியே பாத்திரத்தில் திரட்டுப்பால் வைப்பது தானே வழக்கம் .

அம்ஜம் கண்ணால் ஜாடை செய்து கழுகை உள்ளே ழைத்து தனியா கொஞ்சம் பாத்திரத்தில் இருக்கு அதை மணையில வெச்சுக்கலாம் என்றாள் . இப்போது கழுகு ஆஆ என்று வியந்தான்.

அனைத்துப் பொருள்களும் ஆட்டோவில் வீ யார் மண்டபத்தை சென்றடைந்தன. இரவு 10 மணிக்கு ராமசாமி தம்பதியினர் மண்டபத்திற்கு வந்து விட்டனர் . பின்னிரவு 3.30 க்கு காசிம் / பாபு குழுவினருடன் ஆஜர் . அதே சமயம் கே கு காப்பிக்கு ஏற்பாடு செய்ய, வாசலில் பிரம்மாண்ட கோலமிட சில மாமிகள் ஆயத்தம். இப்போது ஸ்கூட்டரில் போனி டெய்ல் தலையுடன் ஒருஇளம் சிட்டு வந்திறங்கி ராமசாமி இருக்காரா என கேட்க அம்ஜம்  ஆத்திரமும் மிரட்சியுமாகநீ யாரம்மா” என்றாள் .

நான் பாரதிதாசன் யூனிவர் சிட்டியில் TRADITIONAL ART -HOD டாக்டர் சுபத்திரா என்றாள். இதற்குள் கழுகு வந்துவிட, வா வா வா என்று வாயெல்லாம் பல்லாக வரவேற்றான் .

உடனே ராமசாமி குதூகலமாக ஆகி விட்டது போல் தோன்றியது சின்ன  கழுகிற்கு. என்ன இளிப்பு என்று மனதிற்குள் பொங்கினாள்.     கழுகு அசருவாதாக இல்லை.. அவனே போய் சூடாக காபி வாங்கி வந்தான்   சுபத்திராவிற்கு      

 அடுத்த 4 நிமிடங்களில் சுபத்திரா வைக்காண வில்லை. . லேசருக்கு மடிசார் உடுத்திவிட்டுக்கொண்டிருந்தாள்  டாக்டர் சுபத்திரா. 12 நிமிடங்களுக்குப்பின் புதுப்புடவை சர சரக்க .லேசர் ஒரு அளவான சந்தன ச்  சிலைபோல் மிளிர்ந்தாள். ஹேமமாலினிக்கு வடகலை மடிசார் கன கச்சிதமாக உடுத்தப்பட்டிருந்தது. DRESSING TABLE கண்ணாடியில் தன்னைப்பார்த்துக்கொண்ட லேசரே -நானா இது என்று குழந்தை போல் பல கோணங்களிலும் தன்னைப்பார்த்து பொறாமை கொண்டாள்.       

  புடவை  டு த்திவிடுவதைக்கூட  ஆய கலைகள் போல் செய்து விட்ட்டாளே   அந்த குதிரை வால் கொண்டை  என்று மிகவும் ரசித்தாள் அம்ஜம்.

  டாக்டர் சுபத்திரா கேட்டாள் " வேறு யாருக்காவது மடிசார் உடுத்தணுமா?         3 பேர்  அவளைப்பயன் படுத்திக்கொண்டனர். இருந்து சாப்பிட்டுவிட்டு போ என்றான் கழுகு. இல்ல சார் ஆல் இந்தியா மீட் VALEDICTORY  9.30க்கு   ; போயிட்டு வந்து சாப்பிடறேன் என்று 4.50 க்கு விடை பெற்றாள். வேதாந்தம் வானில் மிதந்தான் எனில் மிகை அல்ல.

கே கு,  காசிம் உள்பட அனைவருக்கும் சுட சுட காபி வழங்கினான்.வேதாந்தம் இரண்டு ரவுண்ட் காபி பருகினான். அப்புறம் கழுகிடம் குதிரை  வாலியைப்பற்றி க்கேட்டதும்  -அப்புறம் சொல்றேண்டா என்ற கழுகு-- நான் அப்பவே சொல்லல சூப்பர் மாமியைப்பிடிச்சிருக்கேன்னு -என்றான்.

மாமியா இவ இத்துனூண்டு இருக்காளே? என்றான் வேதாந்தம். உடனே கழுகு டேய் அவளுக்கு 36 வயசு யூனிவர் சிட்டி HOD - அவளைக்கண்டாலே எல்லாருக்கும் நடுக்கம்டா பல்லை தட்டி கைல குடுத்துடுவா.

ஆனா உனக்கு எல்லாப்பல்லும் இருக்கே என்று வம்பிழுத்தான் வேதாந்தம்.

டேய் என்ன யார்னு நினைச்ச ? குதிரை ஒரு சிக்கல்ல இருந்த போது நான் தான் ஐடியா கொடுத்து எல்லா பணத்தையும் REFUND வாங்கிக்கொடுத்தேன். . அதுனால நான் சொன்னா  கட்டுப்படுவா .இன்னிக்கு அவ தான் மடிசார் உடுத்திவிட்டா - அவளப் போயீ இத்துனூண்டாங்கறியே என்றான் கழுகு.

பட பட பட பீ பி பீ என்று மங்கல வாத்தியம் முழங்கியது .

தொடரும்        அன்பன் ராமன்  

1 comment:

  1. புடவை உடுத்துவதும் ஒரு ஆர்ட்தான். அதற்கும். ஒரு HOD வரவேண்டியிருக்கு.காலம்கலிகாலம்.
    வெங்கட்ராமன்

    ReplyDelete

AVOIDING MISTAKES

  AVOIDING MISTAKES                                          பிழை தவிர்த்தல் [ ரகுநாதன் தம்பதியரின் வேண்டுகோள் - அடிப்படையில் பதிவி...