SAMIs COME TOGETHER -2
சாமிகள் சங்கமம் -2
சனி இரவு 7. 40 க்கு ராமசாமி போன் செய்தார் சுபி என்னும் சுபத்திரா வுக்கு
நானே வரணும் னு நெனச்சேன் என்ன சார் விசேஷம் என்றாள் சுபி . விஷயத்தை ராமசாமி சொன்னதும் அதிர்ந்தாள் சுபி. சார் போன்ல யோ வீட்டு;லயோ பேச வேண்டாம் சார் உங்க நண்பருடன் பொது இ டம் - ஏதாவது கோயில் வளாகத்துக்கு வாங்க மூவரும் மீட் பண்ணலாம் . நாளை ஞாயிறு மாலை 3.00 க்குப்பின் தயவு செய்து கன்பர்ம் பண்ணுங்க பேசுவோம் என்றாள் சுபத்திரா . என்னடா இவ பிகு பண்றா என்று நினைத்தார் ராமசாமி . சரி காரியம் ஆகணும்னா அவங்க சொல்படி செஞ்சாதான் சரிப்பட்டு வரும் என்று முடிவெடுத்தார்.
டேய் மாடசாமி நாளை 3-15 மணிக்கு வீட்டுக்கு வா நீ சொன்ன மேட்டர் பற்றி ஏற்பாடு செஞ்சுண்டிருக்கேன் கண்டிப்பா வந்துடு என்று கட்டளையாகவே சொல்லிவிட்டார் ராமசாமி . மாடசாமி OK என்று சம்மதம் தெரிவித்தார். சுபி க்கு 3.30 ஞாயிறு கோயில் தாயார் சன்னதி பகுதியில் சந்திக்கலாம் என்று தெரிவிக்க அவளும் சரி என ஒப்புக்கொண்டாள் .
குறித்த நேரத்தில் மா சா ரா சா , சுபி தாயார் சன்னதி மண்டபத்தில் சந்தித்தனர் . சுபி ராமசாமிக்கு வணக்கம் சொல்லி நிமிர்ந்ததும் MEET Prof . SUBHADHRA என்று ராமசாமி தெரிவிக்க , மாடசாமி கூனிக்குறுகி மிகுந்த பவ்யமாக உடலை வளைத்து ஏதோ சமயத்தலைவரை வணங்குவது போல் மிகப்பணிவாக வணக்கம் தெரிவித்தார். சுபத்திரா ஏன் இவ்வளவு அடக்க ஒடுக்கம் என்று வியந்தாள். மாடசாமி மனதில் "இந்த ராமசாமி இ வ்வளவு பெரிய ப்ரொபஸரை கோயிலுக்கு அழைத்து வந்துவிட்டானே என்னை ஏதாவது தப்பாக எண்ணிவிடப்போகிறார் ப்ரொபஸர்" என்று கலங்கினான்.
எங்காவது உக்காரலாமே என்றாள் சுபி 'ஓ ' என்றார் ரா சா .மா சா மட்டும் ஒருவித கலக்கத்துடன் நின்று கொண்டிருந்தார் . சும்மா உக்காருங்க சார் நாமெல்லாம் FRIENDS . ராமசாமி சார் எங்க அண்ணன் மாதிரி , நீங்களும் அப்படியே தான் எனக்கு என்றாள் சுபி. மாடசாமி சற்று தெளிவும் அமைதியும் பெற்று ராமசாமி அருகில் அமர சுபி " விஷயத்தை சொல்லுங்க” என்றாள். மாடசாமி தயங்க , ராமசாமி சுருக்கமாக “இவன் மருமாள் [அக்கா பெண் ] TRADITIONAL ஆர்ட்ஸ் உங்க யூனிவெர்சிட்டில படிக்கணுமாம் , உன் உதவி தேவை” என்றார். சுபி “எல்லா பர்டிகுலர்ஸ் AGE , DOB , COMMUNITY CERTIFICATE , PARENTS ' ANNUAL INCOME CERTIFICATE, PHOTO COPIES FORM FEE [400/-] குடுங்க எல்லாம் காதும் காதும் வெச்ச மாதிரி செய்யணும் BEFORE கமிங் WEDNES DAY . வெளியிலே மூச்சு விடாதீங்க. நான் FORM + BOOK ரெண்டும் அனுப்பறேன் நீங்க யாரும் வீட்டுக்கோ யூனிவெர்சிட்டிக்கோ வர வேண்டாம் ஏனென்றால் நான் யாருக்கும் influence seat அனுமதிக்க மாட்டேன் அதனாலே நான் எங்க மாட்டுவேன் னு காத்துக்கிட்டிருக்காங்க. இவங்களை சமாளிக்க எனக்கு தெரியும், சரி பொண்ணு என்ன முடிச்சிருக்கா” ? சுபி
மாசா : B .Sc Chemistry + Diploma in French Diploma in German +பரத நாட்டியம் + SILAMBAM Grade - III
சுபி : ஓ நல்ல ELIGIBILITY இருக்கு எண்ட்ரன்ஸ் ALL INDIA LEVEL எழுதணும் நான் அனுப்பும் புக் ல இருக்கும் டீ டைல்ஸ் நல்ல படிக்க சொல்லுங்க . டைரக்ட் செலக்ஷன் கெடச்சா SCHOLARSHIP சுளையா 50 000/- [P/A] கிடைக்கும் இல்லேன்னா SPONSORSHIP SEAT போடலாம் SCHOLARSHIP குறையும் அல்லது NIL கூட ஆகலாம் ஆனா SEAT ALLOT ஆகும்.
எனக்கு SPONSOR யாரையும் தெரியாதே என்றார் மாசா . உங்களுக்கு தெரியாட்டி என்ன இதோ நம்ம அண்ணன் ராமசாமி சார் ஒரு வார்த்தை சொன்னா அவ்வளவு தான் மறுநாளே SPONSOR ஆயிடுவா அந்தப்பொண்ணு , ஆங் அவ பேர் என்ன என்றாள் சுபி - 'கௌரி கல்யாணி ' என்றார் மாடசாமி.
பாக்கி
எல்லாம் புதன் நைட் ராமசாமி
சாருக்கு வந்துடும் மிச்சத்தை போக போக பாத்துக்கலாம்
. தாயார் சன்னதியில் பேசி இருக்கோம் நல்லதே
நடக்கும் . இன்னோர் தரம் மீட்
பண்ணனும்னா வேற இடம் பாப்போம்
அது தான் SAFE என்றாள்
சுபி
என்னம்மா சொல்ற -sponsor அது இதுனு எனக்கு எப்படிம்மா தெரியும் என்று ராமசாமி நடுங்க .சார் எங்கிட்டயே சொல்றீங்களா ? நீங்க வேதாந்தம் சார் கிட்ட ஒரு வார்த்தை சொன்னா வேலை முடிஞ்சுடும் சார் -சுபி.
வேதாந்தம் என்ன செய்யமுடியும் ? -ராமசாமி சார் நீங்க ஒண்ணு அவரா செய்வார் அவர் ஒய்ப் செய்வாங்க என்றாள் சுபி . ரா சா “அப்படியா என்று வியந்தார் . சார் அந்த அம்மாவுக்கு டெல்லில எவ்வளவு செல்வாக்கு இருக்குனு நினைக்கறீங்க சும்மா அப்பிடின்னு தலையை அசைச்சாங்கன்னா PMO officers எல்லாரும் கட்டுப்படுவாங்க . இந்த scholarship -- defence அகாடமி/ NIA கட்டுப்பாட்டுல இருக்கு defence அகாடமி ல அம்மா ஒரு முக்கிய தலைவி -ஆமாம் அதுனால நீங்க சொன்னா முடிஞ்சாச்சுனு அர்த்தம். நான் [யூனிவர்சிட்டி நாமினி] சொல்லக்கூடாது ஆனா opinion கேப்பாங்க கொடுக்கலாம்னு ஆதென்டிகேஷன் சொல்லிட்டா முடிச்சுடுவாங்க நீங்கபேசிப்பாருங்க எல்லா டீடைல்ஸ்சும் கிடைக்கும் .
ஏய் நம்ப வேதாந்தம் ஒய்ப் பா அவ்வளவு பெரிய போஸ்ட்ல இருக்காங்க என்று மரியாதையுடனும் மகிழ்ச்சியுடனும் கேட்டார் மாடசாமி . ரா.சா "ஆமாம்" என தலை அசைத்தார்
சரி தெளிவா அதையும் விசாரிச்சுடறேன் , என்றுசுபி யிடம் சொல்லிவிட்டு, மாடசாமியிடம் நீ அவங்க கேட்டதெல்லாம் ரெடி பண்ணி செவ்வாய்க்கிழமை கொண்டு வா மிச்சத்தை படிப்படியா முடிச்சுடலாம் எல்லாம் பெருமாள் பார்த்துப்பார் என்று ரா சா சொல்லி அனைவரும் நன்றி தெரிவித்து விடை பெற்றனர்.
தொடரும் ராமன்