Friday, March 31, 2023

CHELLADURAI-2

 CHELLADURAI-2

செல்லத்துரை-2

மறுநாள் காலை காத்திருந்து ராமசாமியிடம் சொல்லி form வாங்கிக்கொண்டு போக தயாராக இருந்தார் செல்லத்துரை . 9.20 க்கு ராமசாமி வந்தார் , செல்லத்துரை வணக்கம் சொல்லி form வாங்க வேண்டும் என்றார் செ . து . அவர் 10. மணிக்கு வருவார் கொஞ்சம் பொறுங்க நான் மேல போய் கையெழுத்து போட்டு விட்டு வரேன் என்றார் ராமசாமி . இவ்வாறு சொல்லிவிட்டு 2 படி ஏறும் முன் கேப்ரியல் ராம் சாமி என்று கூப்பிட்டுக்கொண்டே ஓடி வந்தார் கையில் பள்ளிக்கூட form சகிதம் . கீழே இறங்கி கை கூப்பி form பெற்றுக்கொண்டார் ராமசாமி . அல்லா காலம் FILL -UP செஞ்சு , அப்பா அம்மா கை எல் த் து , அவுங்கோ செக்க்ஷன் ஆபீசர் கை எல்த்து , செக்க்ஷன் சாப்பா வாங்கி மே மாசம் 18ம் தேதிக்குள்ளே ஸ்கூல் லே குத்துடுங்கோ ; இல்லாக்காட்டி மே 15 தேதிக்கி என் கிட்டேயே குத்துடுங்கோ நான் எத்துன் போய் வயோலா கைலே குத்துட்றேன் . ரயில்வே ஸ்டாப் கீ சீட் கெடிக்கும் சொல்றா வயோலா/

பையன் போட்டோ , அப்பா அம்மா போட்டோ, அப்பா அம்மா கை எல் த்து , ஆபீஸர் கை எல் த்து, ஆபீஸ் சாப்பா அல்லாம் கம்ப்ளீட் பண்ணிட்டு எத்து ன் வாங்கோ என்று சொன்னார் கேப்ரியல்.

அப்புறம் கைலே 3-4 போட்டோபையன்து வெச்சுக்கோங்கோ,ட்ரெயின் பாஸ்  ID CARD எல்லாத்துக்கும் போட்டோ ஓ ணு ம் ரெடி பண்ணி வெச்சுக்கோங் கோ -GOOD லக் என்றார்.

அம்மா கையெளு த்தும் வேணுமா ? எதுக்கு என்றார் செல்லத்துரை . ஓ அதுவா , இந்த progress report லே இந்த பசங்க நைசா அம்மா கைஎல்த்து னு யார் கிட்டயோ வாங்கி குத்தூர் ரானுங்கோ . அப்படி செஞ்சா , இந்த form வெச்சி செக் பண்ணி பாத்துருவாங்கோ -அதுக்கு தான் கேக்குராங்கோ என்றார் கேப்ரியல். . ஓ இவ்வளவு இருக்கா என்று செல்லத்துரை /ராமசாமி இருவரும் வியந்தனர். அதுக்குதான் மேன் இது ஹஹ் ஹஹ் ஹஹ் ஹா என்று சிரித்தார் கேப்ரியல்.

இது கூடோ வயோலா ரெக்கமண்ட் பண்ணிதான் ரயில்வே போர்டு இம்ப் ளெமென்ட் பண்ணிருக்குது 3 வருசமா என்றார் கேப்ரியல். வயோலா இன்னொரு சுபத்ரா போலிருக்கு என்று ராமசாமி நினைத்துக்கொண்டார். இதை எல்லாம் பேசிவிட்டு வெளியே வரும்போது மாடசாமியும் கஸ்தூரி ரெங்கனு ம் எதிர்ப்பட்டனர். . எங்கிருந்து டா வரீங்க என்றார் ராமசாமி. இப்பதான் டீ சாப்பிட்டுட்டு வரோம் என்றார் மாடசாமி , நைசா எங்கள விட்டுட்டு டீ சாப்பிடுறீங்களா ? இவன் இன்னும் full time  அப்பாய்ண்ட்மென்ட் ஆகல அதுக்குள்ள வேலையை ஆரம்பிச்சுட்டான் பாரு என்று க. ரெ வின் காதைத்திருகினார் ராமசாமி.

அவனை ஏண்டா திட்டறே நான் தாண்டா கூட்டிட்டுப்போனேன் என்று மாடசாமி சொல்லிவிட்டு -சரி டீ வாங்கித்தரவா என்றார் -. வேணாம் நாங்க போய் பாத்துக்கறோம் என்றார் ராமசாமி .சிவந்த காதுடன் ஹி ஹி ஹி என்று சிரித்தான் கஸ்தூரி ரெங்கன்.

டேய் --இவனுக்கு இன்டர்வ்யூ சென்னை ல தான் இருக்கும்; ஆனா      கன்சஷன் டிக்கட் தருவான் தேதி வரட்டும் நீயும் வா போயிட்டு வந்துருவோம் என்றார் மாடசாமி . நான் எங்கடா வரது என்றார் ராமசாமி.

உச்சிப்பிள்ளையார் மாதிரி நீ திருச்சியை விட்டு நகரவே மாட்ட சீச்சீ வா சும்மா போயிட்டு வருவோம், உனக்கு டிக்கட்லா ம் வேணாம் நானே கூட்டிட்டு போறேன் வா ஒரு ஜாலி ட்ரிப் அடிச்சுட்டு ராயர் மெஸ் ல ஜீரா போளி வாங்கி சாப்பிட்டுட்டு  திருவல்லிக்கேணி கோயில் போயிட்டு வருவோம்டா என்று ஊக்கு வித்தார் மாடசாமி .

சார் வாங்கோ சார் என்றான் க. ரெ .

சரி என்று ஒப்புக்கொண்டார் ராமசாமி.

தொடரும் அன்பன் ராமன் 

No comments:

Post a Comment

THE CARPENTER

  THE CARPENTER   Yet another weakening artisan is the carpenter. Well, readers may construe that I am exaggerating and that carpenters ar...