SAMIs COME TOGETHER-5
சாமிகள் சங்கமம் -5
திங்கள் காலை அவரவர் வேலை நிமித்தம் ஓடி பரபரப்பான நேரம். ராமசாமி வேண்டுமென்றே செக்ஷனுக்கு போகாமல் கான்டீன் சென்றார். எதிர்பார்த்தபடியே கேப்ரியல் அங்கே சிற்றுண்டி சாப்பிட்டுக்கொண்டிருந்தார். அது முடிந்ததும் கவனமாக ராமசாமி அவர் கண்ணில் படும் படி எதிரில் அமர்ந்தார். வா மேன் டீ சாப்பிடுய்யா என்றார் கேப்ரியல் .
இல்லை சார் நான் 11.00 மணிக்கு டீ சாப்பிடுவது வழக்கம் என்றார். “ஆங் சொல்ல மறன்ட்டேனே நம்ப பையன லெட்டர் எத்துனு போறயானு கேட்டேன் . செக்ஷன் வேல எப்பிடின்னு பாத்துனு சொல்றேன் ட்டான் . இப்ப காத்தால அந்த பங்காரு இல்ல அதுதான் அந்த தீபாளி கேஸ் நானே போய் வாரென்றான் . இன்னாய்யா ஆச்சு உனுக்கு னு கேட்டேன் மனுஷன் ஆடிப்போயிட்டான் .இல்ல சார் தீபாளி முடிஞ்சுடுச்சு போய் வந்துர்ரேண்ட் டான் . செக்ஷன்ல 4 வாட்டி கிண்டல் பண் னேன் அதுக்கு பயந்துனு சரி ண்ட்டான். சோ அந்த பைனுக்கு தேங்க்ஸ் சொல்டுங்கோ இன்னொரு சான்ஸ் வந்தா குத்துட்றேன் என்றார் கேப்ரியல்..
சரி சார் என்று , கேப்ரியல் போன பின் டீ வாங்கி அப்பாடா என்று நிம்மதியாக அருந்தினார் ராமசாமி .
வெளியே வந்து மாடியேறும் சமயம் GOOD MORNING BOSS என்று குரல் பின்னாலிருந்து . திரும்பிப்பார்த்தால் பளிச் உடையில் மாடசாமி . டேய் என்ன பாஸ்ஸா ? என்னடா ஆச்சு உனக்கு ? -ராமசாமி.
“எனக்கு ஒண்ணும் ஆகல ஆனாலும் நீ இனிமே BOSS தான். சும்மா எல்லாரையும் ஆட்டிப்படைக்கற ; அந்த PROFESSOR அம்மாவை அங்க வா இங்க வா னு சும்மா TIME பிக்ஸ் பண்ணி பம்பரமா சுத்தவுடற . நான் எங்கம்மாட்ட சொன்னேன் அவுங்க அவன் பயங்கர கில்லாடி டா -சீரங்கம் கோயில்ல ஒருத்தி செருப்பை எடுத்து உள்ள கொண்டுவந்துட்டா னு அவள ஆபீஸ் ரூம் ல உக்கார வெச்சு சும்மா கதற அடிச்சியாமே . நேத்து தான் அம்மா சொன்னாங்க . எப்படா அது “? மாடசாமி
“அது இருக்கும் ஒரு 5, 6 மாசம் இருக்கும்” -ராமசாமி “அது சரி அம்மாக்கு எப்படி தெரியும்.” ? ரா சா .
"நீ போட்ட போடுல திபு திபு னு கூட்டம் கூடிடுச்சாம் அம்மா அந்தக்கூட்டத்துல இருந்தாங்களாம் நேத்து பூரா சொல்லி சொல்லி சிரிச்சுக்கிட்டே இருந்தாங்க . எவனுக்காவது இப்படி அவளை மடக்கணும் னு தெரியுமா னு ஆச்சரியப்பட்டு பேசுனாங்க. அதுனால நீ நிச்சயம் BOSS தான் "என்றார் மாடசாமி.
பின்னர் தத்தம் பகுதிக்கு சென்றனர்
பின்னர் கஸ்தூரிரெங்கனை அழைத்து நானே கேப்ரியல் சார் கிட்ட பேசிட்டேன் அவர் வேற ஏற்பாடு செஞ்சுட்டார். நீ போய் அவரப்பாக்காத வேறு எங்கயாவது போ என்று எதையாவது ஆரம்பிச்சா கஷ்டம் , நீ அந்தப்பக்கமே போகாத என்று எச்சரித்தார் ராமசாமி.
11.30 மணி அளவில் ஒரு போன் சுபத்திராவிடம் இருந்து ராமசாமிக்கு. form புதன் கிழமை தான் issue ஆரம்பம். ஒரு ஆள ஏற்பாடு பண்ணிருக்கேன் -யூனிவெர்சிட்டிக்கு சம்பந்தமில்லாத ஆள் ; அப்புறம் முக்கியமான தகவல் அந்த பொண்ணு பேரு கௌரிகல்யாணி தானே ? சுபி.
ஐயோ எனக்கு சரியா நினைவு இல்லையே என்று பதறினார் ராமசாமி . “சார் நாளைக்கு ராத்திரிக்குள்ள சொல்லுங்கோ சார். அதை விட முக்கியம் அந்த பொண்ணுக்கு தெரிந்த ட்ரடிஷனல் ஆர்ட் அவளுடைய பங்களிப்பை வீடியோ எடுத்து சுமார் 12-15 நிமிஷங்கள் வரமாதிரி ரெடி பண்ணி வெச்சுக்க சொல்லுங்கோ. இது எதையும் நீங்க விசாரிச்சு சொல்ற மாதிரி சொல்லிடுங்கோ ,நான் சொன்னதாக வேண்டாம். தேங்க்ஸ்” என்றாள் .
ராமசாமி "ஒரு நிமிஷம் சிக்னல் ரொம்ப கிளீயரா இருக்கே " fine என்றார். “சார் நான் கீரனூர் வந்து பேசறேன் ஏன்னா நான் எது செஞ்சாலும் ஓநாய் மாதிரி நோட்டம் பாக்கறாங்க, நான் நேர இங்க வந்திருக்கேன். 11/2 hrs பர்மிஷன். கவனம் சார் நன்றி” என்றாள் . உடனே அலோகேஷன் ரூம் போய் மாடசாமியை வெளியே அழைத்து காதும் காதும் வைத்த மாதிரி அனைத்தையும் சொல்லி ,பெண் பெயர் கௌரிகல்யாணி என்பதை ஊர்ஜிதம்செய்து SMS வழியே கௌ.க பெயர் சரிதான் என்று பரிமாறிவிட்டார். கழுகு மஹா எத்தன் ஆயிற்றே நெளிவு சுளிவுகளில் யமகிங்கரன் அல்லவா ?
தொடரும் அன்பன் ராமன்
No comments:
Post a Comment