SAMIs COME TOGETHER- 6
சாமிகள் சங்கமம் - 6
டேய் நாம ஸ்கூல் ல படிக்கும் போது அஞ்சல் பெட்டி 520 னு ஒரு சினிமா வந்தது அது மாதிரி மின்னஞ்சல் 1500 டா நீ என்றார் மாடசாமி . ஏண்டா என்றார் ரா சா. கொஞ்ச நேரம் முன்னால ஒரு மேட்டர் சொன்ன. 3 நிமிஷம் கழிச்சு டெல்லி ஹாட் நியூஸ் , யூனிவ ர்சிட்டி தகவல்ங்கற கேப்ரியல் ங்கற , டேனியல் ங்கற , இதுக்கு நடுவுல அப்பப்ப டீ சாப்புடற நீ சரியான ஏமகிங்கரன் டா. .
சரி கொஞ்சம் பு க்ஸ்டால் பக்கம் வா. என்று மாடசாமியை தள்ளிக்கொண்டு போய் , கௌரி கல்யாணிய, அவளோட ஆர்ட் performance விடியோ எடுத்து ஒரு 12-15 நிமிஷம் வரமாதிரி ரெடி பண்ணிவெச்சுக்க சொல்லு. என்றார் - ராமசாமி .
அந்த PROFESSOR சொன்னார்களா? சீ சீ எங்க சொந்தக்காரி ஒருத்தி இதே கோர்ஸ் மைசூர் ல படிச்சா அவ சொன்னா " திடீர்னு PROOF கேப்பாங்க , தயாரா வெச்சுக்கணும்" னு சொன்னாடா , அத மறக்கற த்துக்குள்ள ஒங்கிட்ட சொல்லிடறேன் , நீ FOLLOW UP பார்த்துக்கோ என்று சுபி யை மாட்டிவிடாமல் லாவகமாக பேசி மாடசாமிக்கு மிகுந்த நம்பிக்கையும் இவர்கள் அனைவர்மீதும் எல்லையில்லா மதிப்பும் ஏற்பட , மாடசாமி மனதார குலதெய்வங்களை நினைத்து வணங்கிக்கொண்டே இருந்தான்.
சரி அந்தப்பையன் மெட்றாஸ் போணுமா ? கேப்ரியல் என்ன சொன்னார் என்றார் மாடசாமி . டேய் அவங்க செக்ஷன் STAFF போறாங்க னு சொன்னார். அதனால நமக்கு இப்ப நிம்மதி என்றார் ராமசாமி . அப்படி ஏதாவது அர்ஜன்ட் னா சொல்லு, நான் FIX பண்ணித்தரேன் என்றார் மாடசாமி. ரொம்ப தேங்க்ஸ் டா என்றார் ராமசாமி.
சார் ரிசல்ட் எப்ப சார் வரும்? எந்த ரிசல்ட் ?- ரா சா . ரயில்வே பரீட்சை ரிசல்ட் என் றான் க ரெ சாயங்காலம் போய் பாப்போம் என்றார் ரா சா . எங்க சார் கம்ப்யூட்டர் சென்டர்லயா என்றான் க ரெ .இல்ல கொள்ளடக்கரையி ல - ராசா அங்க எங்க சார் என்றான் க ரெ அங்க தான் டா 5 .00-- 6.45 வரை கிளி ஜோசியம் பாக்கறா ன் - வேணும்னா போய் பாக்கலாம் இப்பல்லாம் கிளி ஜோசியமே 5.00 ரூபாயோ மேலயோ கேக்கறான். நீ என்ன வந்து ரிசல்ட் எப்ப வரும்னு கேட்டா எனக்கென்னடா தெரியும் சரியான அம்மாஞ்சிடா நீ . ஏதாவது ரயில்வே வெப் சைட்டில வரும்னு நெனக்கிறேன் ஏதாவது உயர் அதிகாரிகளை கேட்டா தெரியும் . உடனே நீ கேப்ரியல் சார த் தேடிண்டு ஓடாத ஒன்ன தஞ்சாவூ ருக்கு போ பூதலூருக்குப்போ னு அனுப்பிடுவார். அந்தப்பக்கம் போன , நீ அங்கேயே இருக்க வேண்டியது தான் என்று மிரட்டி கஸ்தூரி ரெங்கன் வெல்லப்பாகு போல் இறுகி உறைந்தான் .
மறுநாள் காலை செவ்வாய் காலை 5. 50 பல பல வென்று விடியும் வேளை தட தட தட என்று மோட்டார் சைக்கிள் ல் மாடசாமி ராமசாமி வீட்டின் முன் இறங்கி சார் என்றான். எட்டிப்பார்த்த அம்ஜம் வாங்கோ வாங்கோ என்றாள் , மீசை இப்போது பழகிவிட்ட அடையாளமாய் தெரிந்தது . ராமசாமி பெருமாள் சேவித்து விட்டு வெளியே வந்தான் -ஹாலில் மாடசாமி GOOD MORNING BOSS என்றார் . எந்த வேண்டுகோளும் இல்லாமலே சுடச்சுட 2 பெரிய தம் ள ரில் அதீத வாசனையுடன் பில்டர் காபி கொண்டு வந்தாள் அம்புஜம் . அதற்கு முன் இந்தா என்று ஒரு கவரில் யூனிவர்சிட்டிக்கு வேண்டிய பிரதிகளையும் ரூ 400/-க்கான DD யு ம் தந்தார் மாடசாமி.
சரி
ம ள ம
ள னு காப்பிய
சாப்பிடு பைக் ல தானே
வந்திருக்க வா போவோம் என்று
துரிதப்படுத்தினார் -
ராமசாமி
“ஐயோ அவரை அந்த காப்பியகூட சாப்பிட விடாம ஏன் இப்பிடி படுத்தறேள்” என்றாள் அம்புஜம்.
பரவால்ல மேடம் BOSS சொன்னார்னா ஏதோ காரணம் இருக்கும் . காப்பி சும்மா அமிர்தமா இருக்கு மேடம் THANKS என்று கை கூப்பி அகன்றார் , மாடசாமி ரா சா வும் அவனுடன் வெளியேறி பஸ் ஸ்டான்ட் நோக்கி விரைய வழியிலேயே சுபத்திரா எதிர்ப்பட , சாலை ஓரம் மூவரும் ஒதுங்கினார். ட க் என்று பேப்பர் / DD கை மாறியது ,தெருவில் நாலாபுறமும் எவரும் இல்லை . ஒன்றுமே நடவாதது போல் 'பை ' என்று அகன்றனர். சரிப்பா நீ கிளம்பு என்று மாடசாமியை அனுப்பிவிட்டு ராமசாமி குறுக்கு ப்பாதையில் 10 நிமிடங்களில் வீட்டை அடைந்தார். ஒவ்வொரு சின்ன தேவைக்கும் எவ்வளவு மெனக்கிட வேண்டியிருக்கிறது , அந்த வேதாந்தமும் அவன் மனைவியும் டெல்லியில் எப்படி சமாளி க்கிறார்களோ என்று வியந்தார் ராமசாமி
தொடரும் அன்பன் ராமன்
No comments:
Post a Comment