Wednesday, March 15, 2023

SAMIs COME TOGETHER-8

  SAMIs COME TOGETHER-8

சாமிகள் சங்கமம் - 8

கௌரி கல்யாணி  P G  விண்ணப்பத்தை பார்த்து

ஐயோ மாமா என்னென்னவோ கேட்டுருக்கே என்று மலைத்தாள் . வாங்கிப்படித்த மாடசாமி கோபம் கொண்டு

லூசு மேல என்ன எழுதிருக்கான் பார். "FILL  ONLY DATA /COLUMNS RELEVANT  TO  YOU ignore other fields attach only photocopies and  up load SCANNED APPLICATION TO www. service guv .ind .in  on or before 28-04-2023. .

அதுனால எதையும் நிதானமா படிச்சு செய்ய வேண்டியதை செய். இஷ்டத்துக்கு எதையாவது செஞ்சு வெச்ச அப்புறம் ராமசாமி கிட்டப்போய் நீதான் தோப்புக்கரணம் போடணும் நான் வரமாட்டேன் .

என்னடா தோப்புக்கரணம் என்று மாடசாமியின் அக்கா வந்தார். ஒன் பொண்ணு லட்சணத்தைப்பாரு , ஒரு அப்ளிகேஷனப்படிச்சு என்ன செய்யணும்னு தெரியல்ல இவை PG படிக்கப்போறாளாம் PG என்று மாடசாமி கிண்டல் செய்தார் . பாரும்மா என்று கௌரி கல்யாணி பொய்க்கோபம் காட்டினாள்.

மாடசாமி அவர்களுக்கு செய்திருக்கும் உதவிக்கு , மாடசாமி என்ன சொன்னாலும் கட்டுப்படவேண்டியவர்களே. சின்னவதானே ஏதோ தெரியாம சொல்லிட்டா கோவிச்சுக்காதடா , நீ கோவிச்சுட்டா எங்களுக்கு யாருடா இருக்காங்க என்று அக்கா கண்ணீ ரை மறைத்துக்கொண்டு , முகத்தைத்திருப்பிக்கொண்டு பேசினாள். மாமா கோவிக்கலம்மா , ஒழுங்கா படிச்சுப்பாருன்னு தான் சொன்னாரு , நம்ப நல்லதுக்கு தானே சொல்றாரு என்று சமாதானப்புறாவை பறக்க விட்டாள் .

சரி ஏதாவது சந்தேகம் இருந்தா போன் கேளு , சரியா தெரிஞ்சுக்கிட்டு  ஒழுங்கா FILL பண்ணு ; வெளியூர் போயிருந்தாலும் போன் பண்ணு , 1 மணி நேரத்துல சரியான தகவலை கேட்டு சொல்றேன் , மாமா கோவிப்பாரு னு ஏதாவது ஏடாகூடமா பண்ணி LIFE TIME CHANCE சொதப்பி வெச்சுடாத அப்புறம் ஒன்னை  விட எனக்கு தான் ரொம்ப ஏமாற்றமா இருக்கும் என்று கௌரி கல்யாணிக்கு தெளிவு படுத்திவிட்டு தனது வேலைக்கு புறப்பட்டார் 

இதற்கிடையில் ராமசாமிக்கு போன் சுபத்திராவிடம் இருந்து அதில் அவள் பேசியதுWhatsApp பாருங்க சார்” . அதில் ஒரு போன் நம்பர் கொடுக்கப்பட்டிருந்தது இரவு 8.30 க்கு மேல் 9.30 க்குள் தொடர்பு கொள்ளலாம் . ரொம்ப குறிப்பிட்ட சிலர் மட்டும் தொடர்பு கொள்ளலாம், மாடசாமி/ கௌரி கல்யாணி நேரடியாக தொடர்புகொண்டு அப்ளிக்கேஷன் சந்தேகங்கள் தெளிவுபெறலாம் என்றும்,, மேலும் நம்பரை குறித்துக்கொண்டு செய்தியை அழித்துவிடவும் என்றிருந்தது.  20 வினாடிகளில் நம்பர் மற்றும் தகவலை குறித்துக்கொண்டு ,WhatsApp  செய்தியை அழித்துவிட்டு டீ சாப்பிடுவதுபோல் கீழே இறங்கி அலோகேஷன் பகுதிக்கு வந்து உள்ளே எட்டிப்பார்க்க , என்ன பாஸ் என்று கேட்டுக்கொண்டே மாடசாமி  வர , வாயின் மீது ஆள்காட்டி விரல் வைத்து பேசாதே என்று உணர்த்தினார் ராமசாமி..      சரி நீ ASSPDT  ரூம் பகுதிக்கு வா என்று கிசு கிசுத்துவிட்டு மெல்ல நடையைக்கட்டினார் ராமசாமி. அடுத்த 5 நிமிடத்தில் வெளியே வந்த மாடசாமி ஏதுமறியாதவன் போல் ஆங்காங்கே எதிர்ப்பட்டவர்களிடம் இரண்டொரு வார்த்தை பேசி விட்டு மிக இயல்பாக ராமசாமியைப்பார்த்ததும் ஹாய் என்று அப்போதுதான் பார்ப்பது போல குரல் எழுப்பினான்.  .இந்தா இந்த துண்டு சீட்டு உனக்கு கிடைத்திருக்கும் பெரும் சலுகை இந்த நம்பர் ரொம்ப ப்ரத்தியேகமானது, உனது niece கௌரிக்கு கொடுத்து ஏதாவது சந்தேகம் அப்ப்ளிகேஷனில் இருந்தால் இரவு 8.30 க்கு மேல்9.30 க்குள் என்று தெரிவித்து,    நம்பரை பத்திரப்படுத்திக்கொண்டு துண் டுசீட்டை தீ வைத்து அழித்து விடு என்று என்றார் ராசா. ஏதோ முகூர்த்த டயம் மாதிரி 8.30 டு 9.30 என்று கெடுபிடியா இருக்கே என்றார் மா சா

 அப்பிடித்தாண்டா குதிரைக்கொம்பு வேணும் னா சும்மாவா . சரி லேட் பண்ணாம மேல ஆகவேண்டியதைப்பாரு என்று சொல்லி விட்டு வேறு வழியில் ரூமுக்கு திரும்பினார் ராமசாமி . மாடசாமிக்கு இருப்புகொள்ளவில்லை. அதிகாரி இடம் 1 மணி அனுமதி பெற்று வீட்டில் ஒரு சிறு வேலை முடித்து  விட்டு வருவதாக கிளம்பி மோட்டா ர் சைக்கிள்  ல்  பறந்தார் மாசா . வீட்டில் கௌரியிடம் எல்லா விவரமும் சொல்லி இந்த நம்பரை மிகுந்த பாதுகாப்பாக வைத்துக்கொள் எந்த friend க்கும் தரக்கூடாது , யாருக்காவது தந்தால் எனது வேலை போய்விடும் அப்புறம் நாம் எல்லோரும் தெருவில் தான் பிச்சை எடுத்துக்கொண்டு நிற்க வேண்டி வரும். அப்போது கூட ராமசாமி தெருவில் பிச்சை எடுக்கக்கூட போக முடியாது என்று கறாராக சொல்லிவிட்டு வேலைக்கு திரும்பினார் மாடசாமி .

தொடரும்            அன்பன் ராமன் 

No comments:

Post a Comment

THE ART OF SPEAKING

  THE ART OF SPEAKING Hitherto we have looked at varied facets of Education, Communication, Human relations  and a number of Human emotions ...