Rengaa Rengaa -17
ரெங்கா ரெங்கா -17
சுதா மாமி எல்லா விவரமும் கேட்டபின் க ரெ வின் அம்மா
வை காய்ச்சி எடுத்துவிட்டாள் . ஒனக்கு என்ன பைத்தியமா ஒரு சென்ட்ரல் கவெர்மென்ட் வேலை
வேண்டாம் உள்ளூர்லயே வேலைனு பேச வெக்கமா இல்லை அது தான் ஒங்கள சாணி தட்டற வேலைக்கு
போங்கோ னு சரியா தான் நிர்ணயிச்சுருக்கார் . இந்த புத்தி உள்ளவாளுக்கு அந்த வேலை தான்
லாயக்கு/ சரிப்படும். . இந்தாப்பா நீ இவா பேச்சைக்கேக்காத குண்டூரா இருந்த என்ன , கோவா
வா இருந்த என்ன முன்னேற்ர வழியைத்தேடு.. உள்ளூர் மோகத்துல
மாட்டிக்காத. உங்களுக்கு பெரிய கோயில் ல பட்டர் முறை எல்லாம் இல்லை னு நினைக்கறேன்.
என்றார் சுதா. இல்லம்மா என்றான்
கரெ
. அப்புறம் என்ன கெளம்பு. என்று ஊக்கப்படுத்தினாள் . ரயில்வேக்காரங்களைக்கேட்டு என்னென்ன
ஏற்பாடு தேவைப்படும்னு தெரிஞ்சுக்கோ. பிரயாணம் எத்தனை நேரம் பிடிக்கும் னு பாத்து முன்னாலே
யே கிளம்பு. இந்தா செலவுக்கு வெச்சுக்கோ என்று 700/- ரூபாய் தந்தாள் . வேண்டாம் மா
என்கிட்டயே இருக்கு போதுமான அளவு வெச்சிருக்கேன். இவா புரியாம பேசறா கொஞ்சம் அட்வைஸ்
பண்ணுங்கோ என்று கை கூப்பினான்..
இதுகள்
அட்வைஸ் எல்லாம் புரிஞ்சுக்காது டைம் வேஸ்ட்
. நீ போயிண்டே இரு இல்லேன்னா நீ உருப்படுறதும் கெட்டுப்போய்டும். குட் லக் என்றாள்
சுதா. க
ரெ யை இனிமேல் இந்தக்கிழவியால் நிறுத்தவே முடியாது.
மறுநாள் மாலை சொன்னபடி ராமசாமி , மாடசாமியுடன் க ரெ வின் வீட்டிற்கு வந்தார். மாடசாமியை [அதாவது மீசையை ] ப்பார்த்ததும் , ஐயையோ அரிவாள்மணையில போட்டு திருத்தர்த்துக்கு ஆடு மாடு வெட்ட ற ஆசாமியை கூட்டிண்டு வந்திருக்கார் போல இருக்கே ஐயோ பெருமாளே காப்பாத்து என்று கதி கலங்கினாள், கிச்சனில் ஒளிந்து கொண்டாள் . எங்க உங்க அம்மா என்று இருவரும் கேட்க க ரெ கிச்சன் ல ஒளிஞ்சிண்டுருக்கா என்றான்.
கூப்பிடு அந்த அம்மாவை என்று மாடசாமி அலறினார். . கிழவி நடுங்கிக்கொண்டே வெளியே வந்தாள் . என்னம்மா முடிவு பண்ணிருக்கீங்க என்றார் ராமசாமி. இதுதான் சமயமென்று மாடசாமி ரெண்டுல ஒண்ணு தெரிஞ்சாகணும்வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுனு சீக்கிரம் சொல்லுங்க என்ன சொல்றீங்க என்று கசாப்புக்கடை மொழியில் பேசி மாடசாமி சீறினான். நடுங்கிக்கொண்டே ஜானகியின் குரலில் 'நான் ஒன்னும் சொல்லல்லே , அவனுக்கு எங்க இஷ்டமோ வேலைக்குப்போகட்டும் அதுக்காக என்ன வெட்டிப்போட்டுடாதீங்கோ என்று பேந்தப்பேந்த முழித்தாள் . க ரெ வுக்கு வந்த லெட்டரை ராமசாமி வாங்கிக் கொ ள்ள , இன்னொரு தரம் வேலைக்குப்போகாதே என்று ஆரம்பித்தால் , போன் பண்ணு , வந்து இந்தம்மாவை அள்ளிக்கிட்டுப்போய் பாளையம்கோட்டை ஜெயில் ல ஒரு 12 வருஷம் வெச்சுட்ரெ ன் என்றார் மாடசாமி. சரி சார் என்றான் க ரெ
நான் குண்டூர் போறதுக்கு லெட்டர் வேணுமே சார் என்றான் க ரெ . அதை நாங்க பாத்துக்கறோம் என்றார் ராமசாமி.. இனிமே வாயத்தெறந்தா ஒதைச்சு இடுப்பை ஒடிச்சுடுவாங்க , பையன் எங்க வேணுமோ போகட்டும் என்று முடிவெடுத்தாள்கிழவி . என்னம்மா சொல்ற என்றார் ரா சா. அதான் அப்பவே சொன்னேனே அவனுக்கு இஷ்டப்பபடி எந்த ஊர்லயோ வேலைக்கு போகட்டும் என்றாள் கிழவி.
சரி மாசம் 2400/- ரூபாய் வந்தா போறும் னு சொன்னீங்களே. இவனுக்கு சம்பளம் 22000/- ரூபாய் மாசம் ஒன்றுக்குனு தெரியுமா, லூசுத்தனமா பேசாம நல்ல வார்ததை சொல்லி வேலைக்கு அனுப்பி வைங்க நாங்க வரோம் என்று மாடசாமி உரத்த குரலில் பேசி கிழவி சரி என்று தலை ஆட்டினாள். . [முழு சம்பளத்தையும் சொல்லாத நீ மிச்சம் பிடிச்சு சேர்த்துவை என்று மாடசாமி அறிவுரைத்துவிட்டு ராமசாமியுடன் மோட்டார்சைக்கிளில் பறந்தார்.
தொடரும் அன்பன் ராமன்
No comments:
Post a Comment