Thursday, April 20, 2023

Samis come together -16

Samis come together -16

சாமிகள் சங்கமம் -16

வெளியே சிறிது தூரம் சென்ற கௌரி மீண்டும் வேகமாக திரும்பினாள். திரும்ப, சாரதா என்ன சந்தேக சங்கீதா இப்ப என்ன சந்தேகம் ஓடி வரியே என்றாள்.. கௌரிக்கு வெட்கம் பிடுங்கித்தின்றது. ஆனாலும் ஆமாக்கா இப்ப ஒரு சந்தேகம் என்றாள்.  கௌரி. சொல்லு என்றாள் சாரதா

கௌரி :"அக்கா என்னென்ன books படிக்கணும்னு தெரியல்ல உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்கக்கா இங்கே நிறைய old books விக்கிறாங்களே மெல்ல மெல்ல வாங்கி வெச்சுக்கிட்டா கொஞ்சம்கொஞ்சமா படிச்சுறலாம் இல்ல"  என்றாள் .

சாரதா "ஏ லூசு என்ன பழைய book வாங்கிப்படிக்கப்போறியா ?நீ எந்த உலகத்துல இருக்க , நீ இப்ப PG கோர்ஸ் தானே சேரப்போற ? அப்பிடீன்னா நீ பழைய புத்தகம் படிச்சன்னு மேடம் ஈஸியா கண்டுபிடிச்சுடுவாங்க. அப்புறம் நீயும் உங்க மாமாவும், ராமசாமி சாரும் இனிமே அந்த மேடத்துக்கிட்ட எந்த உதவியும் கேக்க முடியாது. உங்கள எல்லாரையும் தலை முழுகிறுவாங்க ; ஏன்னா அவங்களுக்கு அரைச்ச மாவையே அறை க்கறது சுத்தமா பிடிக்காது. நல்லா கேட்டுக்கோ CURRENT IDEAS னு ஒரு JOURNAL உங்க DEPARTMENT லைப்ரரிக்கு 2 மாசத்துக்கு ஒண்ணு வரும். மேடம் அதை வந்த அன்னிக்கே வீட்டுக்கு கொண்டு வந்து ஒரே நைட் ல  படிச்சிருவாங்க. அது + இந்திரா காந்தி காலேஜ் FINE ARTS DEPARTMENT லைப்ரரி ல 2 லண்டன் JOURNALS வருஷத்துக்கு 4 வரும். அதெல்லாம் THOROUGH வா படிச்சுடுவாங்க.. அதெல்லாம் அழகா தொகுத்து க்ளாஸ் எடுப்பாங்க இன்னும் சொல்லித்தரமாட்டாங்களானு ஸ்டூடெண்ட்ஸ் எல்லாருமே ஏங்குவாங்க..பாடம் நடக்கும்போது எவனாவது எங்கயாவது வேடிக்கை பார்த்தான்னா கண்டிப்பா FAIL ஆய்டுவாங்க  . இங்கிலிஷ் ல RAPT ATTENTION னு சொல்லுவாங்க தெரியுமா அதை எதிர் பாப்பாங்க. ATTENTIVE ஆ இருந்தா ரொம்ப ஆசை ஆசையா சொல்லி க்கொடுப்பாங்க . அவங்களா ஏதாவது BOOK வாங்கச்சொன்னா வாங்கு இல்லன்னா திட்டுவாங்க. ஒனக்கு இன்னொரு விஷயம் சொல்லவா மேடம் வீட்டுலயே ஒரு பர்சனல் லைப்ரரி வெச்சுருக்காங்க. நல்ல STUDENTS யாரா இருந்தாலும் BOOKS குடுப்பாங்க. LIBRARY நல்லா USE பண்ணனும் னு சொல்லுவாங்க. ரொம்ப அற்புதமான டீச்சர்.மொத்தத்துல ஒரு மெகா SURPRISE சுபத்திரா மேடம். . திரும்பவும் சொல்றேன் அட்மிஷன் முடியாம அவங்கள வீட்டுல போய் பார்க்க வே பார்க்காத . அவங்களுக்கு எரிச்சல் வந்துரும். அட்மிஷன் முடிஞ்சு 4, 5 நாள் தள்ளிப்போனா நல்ல மரியாதை கொடுப்பாங்க என்றாள் சாரதா . இவ்வளோ இருக்கா அக்கா என்றாள் கௌரி.

சந்தேக சங்கீதா [கௌரி]க்கு] மீண்டும் சந்தேகம் “அக்கா நீங்க கம்ப்யுட்டர் சயன்ஸ், மேடம் வேற டிபார்ட்மென்ட் இவ்வளவு தெரிஞ்சு வெச்சிருக்கீங்க எப்பிடிக்கா” என்றாள் . அது வா , நான் மட்டும் இல்ல நெறைய STUDENTS ஏதாவது தெரிஞ்சுக்கணும் நா மேடம் எங்க  இருந்தாலும் வந்துருவாங்க, மேடமும் யார் கேட்டாலும் சொல்லிக்கொடுப்பாங்க , ஹெல்ப் பண்ணுவாங்க. வெட்டி அரட்டை அடிச்சா தொரத்திவிட்டுருவாங்க. மேடத்தோட நான் இருந்த TIME  அதிகம் அதுனால நான் நெறைய தெரிஞ்சுக்கிட்டேன் , அவங்களும் எனக்கு என்ன செஞ்சா நான் முன்னுக்கு வருவேன் னு அழகா சொல்லிக்கொடுத்து இன்னிக்கு திருச்சி ல நாங்க ஒரு முக்கிய கம்பியூட்டர் சென்டர். அதெல்லாம் நெனச்சு தான் நீ மேடத்தை பார்க்க போகும் போது நானும் வரேன் னு உன்கிட்ட சொல்லிக்கிட்டே  இருக்கேன் .என்றாள் சாரதா  . அவசியம் வாங்காக்க நான் கண்டிப்பா உங்களுக்கு தகவல் சொல்றேன். ரொம்ப நன்றிக்கா . PG படிக்கணும் னா ரொம்ப முயற்சி வேணும் னு நல்லா புரியுதக்கா ; இப்ப கொஞ்சம் தெளிவா இருக்கு அக்கா. தேங்க்ஸ் என்று விடை பெற்றாள் சந்தேக சங்கீதா என்னும் கௌரி.

தொடரும் அன்பன் ராமன்

No comments:

Post a Comment

SWEET FLAG

  SWEET FLAG   Acorus calamus [Tam: vasambu ]  A herb that grows to about 2 feet and has prominent leaves   Vacha ( Acorus calamus  L...