Wednesday, April 19, 2023

Rengaa Rengaa -16

 Rengaa Rengaa -16

ரெங்கா ரெங்கா -16

மாலை 6.20 ராமசாமி ரெ வின் வீட்டில் நுழைந்தார். பக்கத்து வீட்டு நாய்குட்டியுடன் விளையாடிக்கொண்டிருந்த  ரெ அதை  கீழே விட்டு விட்டு ஓடி வந்து வாங்கோ சார் என்றான்.

ஏதோ சப்தம் என்று தாயார் கூடத்திற்கு வர , ரா சா வைப்பார்த்து, இவனுக்கு நிலை கொள்ளலை எங்கயோ வெளியூருக்கு வேலைக்கு வந்திருக்காம் போகணும்கறான் . நீங்க சித்த சொல்லுங்கோ உள்ளூர்லயே பாக்கச்சொல்லி. என்று அனைத்தும் அறிந்தவள் போல் பிரசங்கம் செய்தாள் . ராமசாமி வாயில் நோக்கி நகர அந்த அம்மா இதுக்கு வழி சொல்லிட்டு போங்கோ என்றாள் .  ராமசாமி இது தானே வழி என்று வெளி வாசலைக்காட்டினார். நான் இவனைத்திருத்தறத்துக்கு வழிகேட்டேன் என்றாள் .. அவனை மட்டும் இல்ல உங்க ரெண்டு பேரையுமே அறிவாள் மணையில் வெச்சு தான் திருத்தமுடியும் சரியான உருப்படாத கூட்டம் என்று பொரிந்தான் ரா சா. . உள்ளர்லயே     வேலைக்கு போனா ஆகாதோ என்று தோரணையாக கேட்டாள் அம்மா.

 சீரங்கத்துலயா?என்றார் ராசா. ஆமாம் என்றாள் அம்மா.                                                போன மாசமே சொல்லியிருந்தா மெட் ராசுக்கு போய் அலையாம இங்கயே வேலையை செட் பண்ணிக்கொடுத்திருப்பேனே என்றார் ரா சா. இப்ப முடியாதா என்றாள் அம்மா.

 ஏன் முடியாது ? -ரா சா.

அப்ப பாத்து குடுங்கோளேன் என்றாள் தாய். இப்ப பாத்துக்குடுக்கணும்னா 2 பேரா போனா கிடைக்கும் அதுனால நீங்களும் அவனோட போனா இங்கயே வடக்கு வாசல் வேலை தயாரா இருக்கு. வாங்கித்தரேன்.

இங்கேயே இருக்காமே நீ சொல்லவே மாட்டேங்கற என்று மகனைப்பார்த்து அம்மா கொந்தளித்தாள் .

ராமசாமி : ”ஆனா சம்பளம் கம்மி -மாசம் 30 நாளும் செஞ்சா 2400/-ரூவா[ 30 x  80] போறுமா என்றார் ரா சா. இப்ப என்ன 2500/- வரது இது [2400/-]உள்ளூர் லேயே வரதே என்றாள் .

ராமசாமி தொடர்ந்தார் :

இப்ப லாவண்யா வீட்டுல 6 மாட்டுக்கு பதில் ஒன்பது  மாடு வந்தாச்சு சாணி மலையா குமியரது. . தினம் எரு [ வறட்டி ] தட்டணும் -ஆள் கெடைக்கல்ல அதுனால நான் ரெண்டு ஆள் ஏற்பாடு பண்றதா சொல்லியிருக்கேன். நீங்கதான் உள்ளூர்ல 2400/- நல்ல தொகைனு சொல்றதுனால ரெண்டு பேரும் நாளைலேர்ந்து போங்கோ ,

உள்ளூர்லயே சௌக்கியமா இருக்கலாம். ஆனா ஒண்ணு , பால் தயிர் மோர் எதுனாலும் காசு வாங்கிண்டு தான் தருவா. அப்புறம் இந்நூண்ணு கை பயங்கரமா நாறும்      [ இவன் கிளௌவ்ஸ் போட்டுக்கலாம் னு சொன்னான்]

ஆனா தினமும் 2    2 கிளௌவ்ஸ் வீதம் வாங்கிபோட்டுண்டு காலை 7.30- 10. மாலை 3.00 -600 முழு நேர வேலை,  போய் ஜாயின் பண்ணிக்கோங்கோ சீக்கிரம் இல்லைன்னா அந்த வேலைக்கும் ஆள் வந்துருவான் அப்புறம் ஸ்ரீரங்கம்           ஸ்டே ஷன்ல போர்ட்டர் வேலைக்கு தான் போகமுடியும் அதுவும் உள்ளூர் தானே . உங்களுக்கு அதுதான் சரிப்படும் நான் நாளைக்கு மாலை யில் வரேன் முடிவு சொல்லுங்கோ . வரேன் என்று ராமசாமி கிளம்ப

 கிழவி,  மேலச்சித்திரை வீதி சுதா மாமியை ப்பார்க்க ஓடினாள்.

க ரே விடம் அந்த லெட்டரை குடுறா நான் கொண்டு போய் கேட்டுண்டு வரேன் என்றாள் . யார்ட்ட லாவண்யா கிட்டயா என்று கொதித்தான் க ரெ. . ஒங்கிட்ட லெட்டர் குடுக்க நான் என்ன இளிச்ச வாயனா . நீ மத்தியானம் 2முதல் -ராத்திரி 10.30 மணி வரைக்கும் யார் வீட்டுக்கோ மூட்டை தூக்கிண்டு உறையூருக்கு போய்ட்டு வெறும் 1 காபி வாங்கி தந்தா னு பெருமை அடிச்சுக்கறியே நீ தான் உலக மகா இளிச்ச வாய். இரு நானும் வரேன் என்று லெட்டருடன் கிளம்பினான்

தொடரும் அன்பன் ராமன்

No comments:

Post a Comment

ANGER AND EGO -8

  ANGER AND EGO -8 கொந்தளிப்பும் அகம்பாவமும்-8 SEEKING- FEED-BACK   கருத்து கோரி பெறுதல் இது ஒரு மனித செயல்பாடு குறித்த அளவீ...