Tuesday, April 18, 2023

SAMIS COME TOGETHER-15

SAMIS COME TOGETHER-15

சாமிகள் சங்கமம் -15

திடீரென்று அறிவிப்பு ப்பலகையைப்பார்த்து மிரட்சியுடன் இருவர் . சார் சார் சார் என்று அலறிக்கொண்டு , நாங்க இன்னும் இன்டர்வ்யூ அட்டென்ட் பண்ணவே இல்லை சார் என்று  ஓடி வந்தனர்.  இன்டர்வ்யூ அட்டென்ட் பண்ணாம எங்க போனீங்க என்று சுபத்ரா கேட்டார். இங்க தான் மேடம் இருந்தோம் என்று இருவரும் கோரஸ் பாடினர் . இங்கதான் இருந்தீர்களா அப்ப ஏன் ரெஜிஸ்டர் பண்ணிக்கல ? என்று இரு அதிகாரிகள் கேட்டனர் . ரெஜிஸ்டர் முந்தியே பண்ணிட்டோம் சார் என்றனர்.. இன்னிக்கு ஏன் ரெஜிஸ்டர் பண்ணல ? இன்னிக்கு தனியா பண்ணனுமா? என்று கேட்டனர் ஆமாம் எல்லோரும் இன்டர்வ்யூ க்கு ரெஜிஸ்டர் பண்ணிக்கொண்டனரே , நீங்கள் ஏன் வரவோ ஹால்லடிக்கட் கொடுத்தனுப்பவோ இல்லை.? என்றார் அதிகாரி.

எங்களுக்கு தெரியாது என்றனர். தெரியாதா என்று கோபாவேசமாக அதிகாரி எழுந்து  நின்றார்  . சுபத்ரா அவரை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு , இவனுங்களுக்கு உலகமே தெரியல்ல எங்கயோ மாரியம்மன் கோயிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்த வந்தவனுக மாதிரி ச்சைங் சக்கா ச்சைங்,   ச்சைங் சக்கா ச்சைங் னு , என்ன அது  ச்சைங் சக்கா ச்சைங் தானே ? னு குடிகாரனுங்க மாதிரி ஆடறானுங்க . இவனெல்லாம் PG படிக்கறவன் மாதிரியா இருக்கு ? வெறும் பைத்தியக்காரனுங்க. போங்க அடுத்தவாரம் சமயபுரத்துல தேரோட்டம் அங்க போய் ஆடுங்க  , கொஞ்சம் புண்ணியமாவது கிடைக்கும் . சரி இன்டர்வ்யூ எப்ப தொடங்கினாங்க ? 11.30 க்கு என்றனர். [உண்மையில் தொடங்கியது     12. 10க்கு] இப்ப மணி என்ன 2.50 , இவ்வளவு நேரம் ஏன் வரல்ல ?இன்டர்வ்யூ முடிஞ்சு செலெக்ஷன் லிஸ்ட் டெல்லிக்கு போயாச்சு. இனிமே எதுவும் செய்ய முடியாது. இதென்ன யூனிவெர்சிட்டியா சந்த மடமா இங்க வந்து சூடு சொரணைஇல்லாம   ச்சைங் சக்கா ச்சைங்,   ச்சைங் சக்கா ச்சைங் னு குதியாட்டம் போடறீங்க வெக்கமா இல்ல உங்களுக்கு ? என்றார் சுபத்ரா . அதிகாரி போங்கடா மானங்கெட்ட பயலுகளா  , இப்பவே இப்பிடி ஆடுறீங்களே உங்கள டிபார்ட்மென்ட்  ல சேர்த்துக்கிட்டா எப்பிடி ஆடுவீங்க சரி கிளம்புங்க என்று இருவரையும் துரத்தி அடித்தனர். டிபார்ட்மெண்டை பத்திரமாக பூட்ட வைத்து சாவியை யூனிவர்சிட்டி அலுவலகத்தில் உரிய செக்யூரிட்டி அதிகாரி வசம் ஒப்படைத்து , அனைவரும் அட்டெண்டர் உள்பட அஜந்தா ஹோட்டல் நோக்கி மதிய விருந்துக்கு வேனில் புறப்பட்டனர் , ஆம் அது ஒரு ஆண்டு விழா  போல இன்டர்வ்யூ தினத்தில் சுபத்ரா மேடம் தனது துறையினருக்கு வழங்கும் விருந்து . அதுவும் ஹை க்ளாஸ் விருந்து தருவது வழக்கம். .

இன்டர்வ்யூ சூப்பரா இருந்துச்சு அக்கா என்று சிரித்துக்கொண்டே மாலை 5.15 மணிக்கு சாரதாவிடம் சொன்னாள் கௌரி. நான் அப்பவே சொன்னேன் ல நீ சிரிச்சுக்கிட்டே வருவேன்னு என்று சாரதா இவளை செல்லமாக கன்னத்தில் கி ள்ளி னாள் . எப்பிடிக்கா என்று கௌரி குழந்தை  போல் கேட்க , ஏய் நான் சுபத்ரா மேடம் கிட்ட எவ்வளவு கத்துக்கிட்டு வந்திருக்கேன், மேடம் எப்பிடி எப்பிடி செய்வாங்க எனக்கு தெரியாதா ? அவங்க ஒரு பயங்கர ஆல்  ரவுண்டர் . 2 வருஷம் அவங்க ட்ரெய்னிங்க்ல , நீ எந்த உயரத்தை பிடிக்கப்ப்போற பாரு அப்ப நாங்கெல்லாம் உன்னை அண்ணாந்து தான் பாக்கணும் என்றாள் சாரதா . பார்ட்டி எப்பக்கா தரணும் என்றாள்  கௌரி . எப்பிடியும் 1 வாராம் 10 நாள் ல சும்மா கோல்டன் கலர் அட்டைல ஸ்காலர்ஷிப் எவ்வளவு னு போட்டு வரும் அப்ப உன்னை பிடிச்சுக்கறேன். சரி கோயிலுக்கு போவியா . போய் எல்லா சாமியும் கும்புடு, மாமா மாமி அம்மா எல்லார்கிட்டயும் அசீர்வாதம் வாங்கிக்க. அப்புறம் மேடத்தை பாக்கவே பாக்காத அவங்களுக்கு ரொம்ப கோவம் வந்துடும். கோர்ஸ் ஜாயின் பண்ணிட்டு அப்புறம் போய் ப்பாரு நானும் உன்கூட வரேன் -வரலாமா ? என்றாள் சாரதா . கண்டிப்பா வாங்கக்கா என்று நன்றி சொல்லி விடை பெற்றாள்  கௌரி .      

தொடரும் அன்பன் ராமன்

No comments:

Post a Comment

ANGER AND EGO -8

  ANGER AND EGO -8 கொந்தளிப்பும் அகம்பாவமும்-8 SEEKING- FEED-BACK   கருத்து கோரி பெறுதல் இது ஒரு மனித செயல்பாடு குறித்த அளவீ...