Rengaa Rengaa -15
ரெங்கா ரெங்கா -15
காலை 5.30 மணிக்கு எழுந்து நித்ய அனுஷ்டானங்களுக்குப்பின் காப்பி சாப்பிட இருந்த நேரத்தில் ரயில்வேயில் வேலைக்கு ஆடர் வந்துள்ளதை அம்மாவிடம் தெரிவித்தான்.
நீதான் ஏற்கனவே வேலைக்கு ப்போகிறாயே என்றார் தாய் . இது நிரந்தர உத்யோகம் ஆனா வெளியூர் ல என்றான். . எங்க? குண்டூர் ஆந்திரா வில என்றான் . அங்கெல்லாம் நீ போக வேண்டாம் இங்கயே உள்ளூர்ல ஏதாவது கிடைக்குமா னு பார். இந்த வேலைக்கு நான் வரலை னு எழுதிப்போட்டுடு.. எனக்கு இஷ்டம் இல்லை என்றாள் .
இங்கயே தரித்திரத்துல அல்லாடனணு மா இன்னும் என்று கொதித்தான்.
இப்ப என்ன தரித்திரம் வந்திருக்கு. ரெண்டு வேளை சாப்பிடலையா , கோயிலுக்கு போகலியா , கௌரவமான வாழ்வு வாழலையா என்ன கொறச்சல் என்று வேதாந்தம் பேசினாள் . கஸ்தூரிரெங்கனுக்கு செத்துப்போய்விடலாமா என்றிருந்தது. இத்தனை பேர் உழைப்பை இந்த அம்மா காலில் போட்டு மிதிக்கிறாளே இந்த மாதிரி ஒரு பை த்தியம் 2023 இல் என்றால் நம்ப முடிகிறதா.. வெறும் மோர் சோற்றை தின்று வாழ்வதற்கே திணறிக்கொண்டிருப்பது புரியவில்லையா இந்த வயதில் கூட ஆண்டவா என்று நொந்துகொண்டே கிளம்பி வேலைக்குப்போனான் கடும் ஆத்திரமும் அவமானமும் பொங்க..
இவன் முகத்தைப்பார்த்த ராமசாமி நொடியில் புரிந்து கொண்டார் ஏதோ ஏடாகூடம் அரங்கேறியுள்ளது என்பதை. . மெல்ல அவனை காண்டீனுக்கு தள்ளிக்கொண்டு போய் 2 இட்லி, 1 தோசை வாங்கி அவனை சாப்பிடச்சொன்னார். என்ன ஆச்சுடா உனக்கு என்றார் . நான் வாழறதுக்கே லாயக்கில்லாதவன் சார் என்று கண்ணீர் உகுத்தான் . டேய் மனம் தளராதே எதுவாக இருந்தாலும் எங்களிடம் தெரிவி நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்றார் மாடசாமியையும் நினைத்துக்கொண்டு.
க.ரெ “இப்பதான் புரியறது நாங்க இன்னும் ஓட்டாண்டிகளாகவே இருக்கோம்னு”. . டேய் எது சொன்னாலும் புரியும்படி சொல்லுடா. -ரா சா
இதற்குள் மா சா வும் வந்து விட “ டேய் என்னமோ குதர்க்கம் நடந்திருக்கு இவன் பேசவே இஷ்டப்படல , என்னனு புரியல, நான் கொஞ்சம் தள்ளிப்போறேன் , நீ பேசிப்பார்த்து சொல்லு , என்ன செய்யணும் னு முடிவெடுப்போம் என்றார் ராமசாமி.
மாடசாமியின் மின்னல் வேக செயல்பாடு க. ரெ வை விரைவாக தன்னிலைக்கு கொண்டு வந்தது. மாசா "தம்பி முதல்ல சாப்புடுங்க வயிறு பசியில இருக்கறவனை பேசச்சொல்றதே மகா பாவம். , டேய் சபரி ஒரு வ்டை கொண்டா என்று க ரெ வுக்கு ஏற்பாடு செய்தார். என்னாச்சு தம்பி என்றார் மீண்டும் அதே "நான் வாழறதுக்கே லாயக்கில்லாதவன் சார்" என்று விசும்பினான். யார் சொன்னது சொன்னவங்களுக்கு தான் தகுதியில்லை . பயப்படாதீங்க தம்பி நான் இருக்கேன் எது வந்தாலும் சமாளிப்பேன் சும்மா சொல்லுங்க என்று தெம்பூட்டினார். வயிறு நிரம்பிய வினாடியில் மாசா 3 காப்பி கொண்டா என்று சபரிக்கு தெரிவித்து காப்பி வந்ததும் ராமசாமியை வரச்சொல்லி சமிக்ஞை செய்தார் .
இப்போதும் மாடசாமி தான் பேசினார்.. ராமசாமி வெறும் பார்வையாளர் . இது அவ்வப்போது சரியான அண்டர்ஸ்டாண்டிங்கில் நடப்பது உண்டு. இப்படி பல சிக்கல்களை வெற்றிகரமாக தீர்த்துள்ளனர் இருவரும். அவற்றை எல்லாம் நினைவு கொண்டு தான் கௌரிகல்யாணியின் படிப்பிற்கு ராமசாமியின் உதவியை நாட க ரெ வின் பலவித சூழல்களில் மாடசாமியை ராமசாமி தேடி தன் தேவைகளை அடுத்தவரைக்கொண்டு இருவரும் ஈடேற்றியிருக்கிறார்கள். இரண்டும் இறைவனால் இணைக்கப்பட்ட அற்புத அன்பர்கள் என்பதை நான் எழுதி அன்பர்கள் அறிவேண்டிய ஒன்று அல்ல. எதுவந்தாலும் சமாளிப்பேன் என்ற மா. சாவின் சொல் ஊக்கம் தர க ரெ பேசினான்.
"அம்மா என்னை வேலைக்குப்போக வேண்டாம்னு சொல்றா என்று விம்மினான். மா சா கேட்டார் 'நீங்க ஒரே பையனா ?" ஆமாம் என தலை அசைத்தான் க .ரெ . எங்கம்மா இப்பிடித்தான் என்னை எங்கயும் போகாதைன்னாங்க, "ஏன் உன் புருஷன் போன இடத்துக்கு நாங்களும் போகணுமா ? ஒன்னை ஒன்னும் சொர்கத்துக்கு வழி கேக்கலை , சோத்துக்கு தான் வழி கேக்கி றன். என்று மிரட்டி , நீ வேற ஏதாவது சொல்லிக்கிட்டு இருந்த அப்புறம் நானும் அக்காவும் கிணத்துல விழுந்துருவோம் னு மிரட்டினேன்.டேய் டேய் நம்ப கிணத்துல தண்ணியே இல்லடா என்றார் எங்கம்மா . அதுல விளுந்தாத்தான் சாக மாட்டாம கை கால் ஒடஞ்சு உயிரோட இழுத்துக்கிட்டு ஒனக்கு செலவு வெச்சிக்கிட்டே இருக்கலாம் என்ன சொல்ற னு 6 மணி நேரம் கெடு விதிச்சேன் . தில்லை நகர்ல ஒரு கிழவி பாக்கி இல்லாம எங்கம்மா போய் விசாரிக்க , பூரா க்கெளவிகளும் ஆம்பளப்பையன வேலைக்கு அனுப்பாம எப்பிடி குடும்பம் நடக்கும் னு சொல்லி, எங்கம்மா எப்பிடியோ போங்க என்று அரை மனதாக ஒத்துக்கிட்டாங்க . இப்ப ஏதாவது சில்லறை வேணும் னா டேய் இன்னொரு டூட்டி பாருடா னு எனக்கு அட்வைஸ் . இதுதான் உலகம் . ராமசாமி அவங்கம்மாட்ட நீ பேசு சரிப்படைலை னா நான் வந்து ரெண்டு அதட்டுப்போட்டு வ ழிக்கு கொண்டாந்திருவோம் . க ரெ தெளிந்தான். சாயங்காலம் நான் திடீர்னு வந்து சரி பண்ணிடுறேன் கவலைப்படாத என்றான் ராமசாமி. கஸ்தூரி ரெங்கன் செக்ஷனுக்கு ஓடினான்
பாதி பிராம்மண கிழவிகள் இப்படித்தான் எதையாவது பைத்தியக்கார வேலை செய்றாங்க என்ன பண்றது னே புரியல என்றான் ராமசாமி. . அதில்ல டா இந்த விடோ கேஸெல்லாம் பெரும்பாலும் இப்படித்தான் அதிலுயும் ஒரே பையன்னா அந்தப்பையன் பாடு திண்டாட்டம் தான் என்றார் மாடசாமி
தொடரும் அன்பன் ராமன்
No comments:
Post a Comment