SAMIs COME TOGETHER -14
சாமிகள் சங்கமம் -14
புதன் காலை 10.30 மணிக்கு சுமார் 20-25 பேர் யூனிவர்சிட்டி ரூம். 12 ல் வெராந்தா வில் கூடி இருந்தனர் . ஒரே சல சல என்று சப்தம் .
இரண்டு பையன்கள் ச்சை ங் சக்கா ச்சைங் என்று பாடிக்கொண்டு அசிங்கமாக ஆடிக்கொண்டிருந்தினர். . உள்ளே இருந்து சுபத்தரா பார்த்துவிட்டாள் . அட்டெண்டரை அனுப்பி எல்லாருடைய ஹால் டிக்கட் டு ம் வாங்கி வா, ரெண்டு பேர் ஆடிக்கிட்டு இருக்கானே அவன் ஹால் டிக்கட் வேண்டாம் பாக்கிப் பேர் தை வாங்கிக்கிட்டு வா என்று அனுப்பினாள்.
. ஆட்டம் துரித கதியில் நடந்து கொண்டிருக்க , அவனுகளுக்கு ஹால் டிக்கெட் உள்ளே கொடுக்க
வேண்டும் என்பது தெரியாது. குஷியாக ஆடிக்கொண்டிருந்தனர். வேண்டுமென்றே 12.00 மணி தாண்டியும்
இன்டர்வ்யூ தொடங்கப்படவே இல்லை. 12. 10 க்கு தொடங்கி இன்டர்வ்யூ நடந்தது 5 வது நபராக
கௌரி கல்யாணி அழைக்கப்பட்டாள். அனைவருக்கும் ஒரு பொதுவான கேள்வி வைக்கப்பட்டது .
"இந்த கோர்ஸ் எதற்காக படிக்க வருகிறீர்கள் ; இதைப்படித்தால் என்ன வேலைக்கு போக
முடியும் ?
இதுவரை வந்த நால்வரில் 2 பேர் வித்யாசமாக
படிக்க ஆசை என்றனர். ஒருத்தி எங்கள் குடும்பமே நாட்டியம் பாட்டு என்று வாழ்பவர்கள்,
அதையே நானும் தொடர விரும்புகிறேன் என்று சொல்லி தேர்வாகி விட்டாள் ஆனால் முடிவு அறிவிக்கப்படவி
ல்லை.
கௌரி சொன்ன விடை “எனக்கு வேலைக்குப்போக வேண்டும்
அதே சமயத்தில் ஆபீஸ் அறையில் எழுதிக்கொண்டிருக்க விருப்பமில்லை. மாறாக டூரிஸம் துறையில்
பணியில் சேர விருப்பம் என்றாள்.
அதெல்லாம் சரி அதற்கான தகுதிகள் இருக்கிறதா என்று பார்க்க வேண்டாமா? என்றாள் சுபத்ரா . கௌரி தயங்கினாள் . உங்க குவாலிஃபிகேஷன் சொல்லுங்க என்றார் சுபத்ரா .
உடனே கௌரி "மேடம் B.Sc Chemistry + Diploma in French Diploma in German +பரத நாட்டியம் + SILAMBAM Grade - III ; இவற்றில் B Sc ரிசல்ட் இன்னும் வர வில்லை, இது வரை நல்ல ஸ்கோர் வாங்கியிருக்கேன் மேடம் என்றாள்.
. கௌரி சொல்ல சொல்ல உதவியாளர் ஒருவர் கௌரியின் அப்பிளிக்கேஷன் பார்த்து எல்லாம் கரெக்ட் மேடம் என்றார். [கௌரிக்கு ஒரே வியப்பு,] நான் என் அப்ப்ளிகேஷனை டெல்லிக்கு அனுப்பினேனே , இங்கே அதை வைத்துக்கொண்டு செக் பண்றாங்களே பயங்கரமான கோர்ஸ் தான் போல இருக்கு என்று சற்று வெலவெலத்தாள் . திருச்சிக்கு வரவேண்டிய அனைத்து பாரங்களும் ஸ்கேன் செய்யப்பட்டு அனுப்பப்பட்டு விட்டன . இதே போல தான் ஏனைய இடங்களிலும் .
இப்போதுதான் தெரிந்து கொள்வது போல சுபத்தரா லாவகமாக கேள்வியைப்போட்டு , வேண்டிய பதிலை முறையாக வாங்கி விட்டாள் ; பிற உறுப்பினர்களும் தெரிந்து கொள்ளட்டும் என்பதற்காகவே அப்படிச்செய்தாள் . இனிமேல் யாராவது பேச முடியுமா? . கமிட்டி ஏகமனதாக கௌரியை முழு திருப்தியுடன் தேர்வு செய்தது . ஆனால் முடிவு அறிவிக்கப்படவில்லை.
கௌரியையும் சேர்த்து , இரண்டு ஆண்கள் உட்பட
மொத்தம் 7 பேர் தேர்வாயினர். முதல் மூவருக்கு [கௌரி உள்பட] முழு உதவித்தொகைக்கு ம்,
மீதமுள்ள நால்வரில் ஒரு 60% உதவித்தொகைக்கும், மற்றொரு 40% உதவித்தொகைக்கும் தகுதியானவர்கள்
தேர்வாயினர். . உடனே டெலெக்ஸ் மூலம் டெல்லிக்கு தகவல் பறந்தது . இன்டர்வ்யூ வின் வீடியோ
பதிவுகள் பதிவுத்தபாலில் டெல்லி பாதுகாப்பு அமைச்சகத்துக்கு அனுப்ப பட்டு. மதியம்
2.45 க்கு இன்டர்வ்யூ முடிந்ததாக அறிவிப்பு பலகை தொங்க விடப்பட்டது
தொடரும் அன்பன் ராமன்
No comments:
Post a Comment