Saturday, April 15, 2023

RENGAA RENGAA -14

 RENGAA RENGAA -14

ரெங்கா ரெங்கா -14

மாடசாமி சொன்ன வைத்தியம் வேலை செய்தது . ஆம் சரியாக 15 ம் நாள் காலை 9.00 மணிக்கு சார்  சார் என்று அலறியபடி ஒரு ரயில்வே கவரை . ரெ வின் கையில் தந்தார் போஸ்ட் மேன் வடிவேல். மீண்டும் ஒரு சிறு தொகை  கை மாறியது. என்று இளித்துக்கொண்டே சைக்கிளில் பறந்தார் வடிவேல். கவரை எடுத்துக்கொண்டு தாயார் சன்னதிக்கு ஓடி , இரு உள்ளங்கைகளிலும் கவரை சுமந்தபடி அம்மா உன் ஆசி யில ஏதோ வந்திருக்கு இன்று மாலை உன்னை வந்து சேவிக்கிறேன் என்று வேண்டிக்கொண்டு மணி பார்த்தான் -9.18 . ஐயோ என்று ஓடி வீட்டிலிருந்து பை / கவருடன் ஸ்டேஷனுக்கு ஓடி ரயிலைப்பிடித்து வண்டி ஏறி மூச்சிரைத்தான். . கவரை பிரிப்பதா , இல்லை ராமசாமி சாரிடம் தந்து பிரிக்கச்சொல்வதா என்று குழம்பினான் . சரி சாரிடம் கொடுப்போம் என்று அமைதி கொண்டான். ஒரு வழியாக 10.00 மணிக்கு ஜங்ஷனிலிறங்கி செக்ஷன் நோக்கி ஒடினான்..ஒருவரும் வந்த பாடில்லை.. பொறுமையாக காத்திருந்தான் 10.15 மணிக்குப்பின் ஒருவர் பின் ஒருவர் என்று மெல்ல 7 பேர் வந்தனர். சார் காப்பி வாங்கவா என்றான் ரெ . இப்பதான் கல்யாண வீட்டிலிருந்து வரோம் 11.15க்கு அப்புறம் வாங்கலாம் என்றார் சூப்பரின்டென்டென்ட் . மெல்ல நழுவி ராமசாமியைப்பார்க்கப்போனான்.

போகும் வழியில் கேப்ரியல் -ராமசாமி பேசிக்கொண்டிருந்தனர் . கவரை மெல்ல ராமசாமியிடம் நீட்டினான். என்னப்பா என்றார் ரா சா. யோவ் இது ஆடர் மேன் பிரி பிரி என்று வேகப்படுத்தினார் கேப்ரியல். இது ஆடரா சார் என்றார் ராமசாமி. இன்னா சொல்றீங்கோ, நானு ரயில்வே எத்தினி வர்சம் எத்தினி ஆபீஸ்ல டூட்டி பாத்திருக்குது. எனுக்கு தெரியும் மேன் பெட் வெப்பமா வரீங்களா என்றார் கேப்ரியல்.

அந்த கடிதத்தில், Mr .. கஸ் தூரி ரெங்கன் , you are selected for training  in ACCOUNTS DIVISION OF SOUTH CENTRAL RAILWAY - GUNTUR  for 3 months, starting on  30-04-2023 11.00 AM . You are eligible to RECEIVE PAY / ALLOWANCES /LEAVE PRESCRIBED FOR --LOWER DIVISION CLERK cum TYPIST as per the recommendations of the  7th pay  commission -GOVT .OF INDIA . என்று உயர் அதிகாரி கையொப்பமிட்டு அரசாங்க முத்திரையுடன் அனுப்பப்பட்டிருந்தது . உள்ளூர ராமசாமி மகிழ்ந்து லெட்டரை கேப்ரியல் இடம் நீட்டினார். கேப்ரியல் நான் சொன்னேன் இல்லே ஆடர் தான் மேன்.எத்தினி சம்ளம் பாத்தியா நல்லா குடுக்குறாங்கோ . நாங்கோ ஜாயின் பண்ணப்போ ஆல் டோல்ட் 920/- இப்போ உனுக்கு மினிமம் 26000/- டு 28000 /-கெடிக்கும் GOD BLESS YOU MAN  என்று தன்  மீது சிலுவைக்குறி இட்டுக்கொண்டார்.

  ரெ வுக்கு ஒருசேர மகிழ்ச்சியும் ,துன்பமும் மனதில் . இனி இந்த நண்பரகளை தினமும் பார்க்க முடியாதே என்று கவலை கொண்டான் . சரியான நேரத்தில் மாடசாமியும் வந்தே பாரத் ரயில் மாதிரி வந்தார். கடிதம் பார்த்து ‘ தம்ஸ் அப்போல் கட்டை விரலை உயர்த்தினார் . நாlல்வரும் வடை காப்பி கேன்டீனில் சாப்பிட,  மாடசாமியே  பணம் கொடுத்தார். அப்போது மாடசாமி ரெ வை எச்சரித்தார் --எவன் கிட்டயும் சொல்லாத அடுத்த வாரம் சொல்லிட்டு அப்புறம்     ரெஸிக்னேஷன் லெட்டர் கொடுக்கலாம் இல்லாட்டி இன்னிக்கே போயிட்டு வானு அனுப்பிட்டு அவனுங்க வீட்டு பயலுகள கொண்டார ஐடியா போடுவானுக , மூச் என்றார்.   ராமசாமியும் ஆமாம்பா மாடசா மி சொல்றது ரொம்ப கரெக்ட் கவனம் என்றார்.

மாலை வீட்டில் தாயார் இல்லை. அடுத்தவீட்டு சிறுவன்,,  அம்மா உறையூர் போய்விட்டு ராத்திரி தான் வருவார்களாம் சொல்லச்சொன்னாங்க என்று கத்திக்கொண்டே ஓடிவிட்டான். சரி முகம் கழுவி காப்பி அருந்தி கோயிலுக்கு சென்று எல்லா முக்கிய சன்னதிகளும் வழிபட்டான். இரவு இருந்த சாதத்தில் மோர் ஊற்றி சாப்பிட்டுவிட்டு படுத்தான் இரவு 10.45 மணிக்கு அம்மா வந்தாள் .சரி காலையில் பேசிக்கொள்ளலாம் என்று இருவரும் ஓய்வெடுத்து உறங்கினர் .

தொடரும்    அன்பன்  ராமன்

No comments:

Post a Comment

ANGER AND EGO -8

  ANGER AND EGO -8 கொந்தளிப்பும் அகம்பாவமும்-8 SEEKING- FEED-BACK   கருத்து கோரி பெறுதல் இது ஒரு மனித செயல்பாடு குறித்த அளவீ...