SAMIs COME TOGETHER-13
சாமிகள் சங்கமம்-13
காலை 7.40, இப்போது சாரதாவின் கம்ப்யூட்டர் சென்டரில் கௌரி கல்யாணி. வா என்று வரேவற்றாள் சாரதா. ஊர்ல இல்லையா நீ என்று வினவினாள் . இல்ல மேடம் வீட்டுல கெஸ்ட் அதான் வரமுடியல்ல என்றாள் கௌரி.
மெயில் பாக்கணுமா -இங்க பாரு என்று 3 வது இடம் சுட்டிக்காட்டினாள் . துண்டுச்சீட்டின் உதவியுடன் , படிப்படியாக மெயில் பாக்ஸ் உள்ளே நுழைந்தாள் . அடுத்த வெள்ளி கா 11.00 மணிக்கு யூனிவர்சிட்டி யில் 2 மணி நேரம் தேர்வு எழுதி அடுத்த 3 நாளில் விடை இ -MAIL . மூலம் வரும் என்றும் ஹால் டிக்கட் பதிவுத்தபாலில் என்றும் அறிவிப்பு இருந்தது. . மேடம் இதுல 1 காப்பி கிடைக்குமா என்றாள் கௌரி. உடனே சாரதா FONT ஐ பெரிதாக்கி பிரிண்ட் அவுட் எடுத்தாள் .10/- ரூபாய் செலுத்திவிட்டு புறப்பட்டாள் கௌரி . காலை 11.20 பதிவுத்தபாலில் ஹால் டிக்கட் [விண்ணப்பத்தின் கடைசிப்பகுதி புகைப்படத்துடன் ] வந்து சேர்ந்தது. தாயாரிடம் காட்டி ஆசி பெற்றாள் கௌரி . மறுநாள் காலை சாரதாவிடம் தகவல் தெரிவித்து பஸ் தகவல்களை விவரமாக குறித்துக்கொண்டு வீடு திரும்பினாள் .
வெள்ளிக்கிழமை 'on லைன்' டெஸ்ட் 1 1/2 மணி நேரத்தில் முற்றிலும் ஆங்கிலத்தில் விடை எழுதினர் . கௌரி விரைவாகவே எழுதி விட்டு 2 முறை விடைகளை சரிபார்த்து , INVIGILATOR இடம் சொன்னதும் அவர் கௌரியின் தேர்வுத்தாளை UP LOAD செய்தார். வெளியில் வந்து பஸ் ஸ்டாப்பில் நிற்க சுபத்திரா பஸ்ஸில் இருந்து இறங்கி சென்றாள் இருவரும் முன் பின் தெரியாதவர்கள் போல நடந்துகொண்டனர். இரண்டும் ஜாடியும் மூடியும் மாதிரி ஒன்றுக்கொன்று பிணைப்பு இல்லாமல் காட்டிக்கொண்டனர்.
மதியம் 1.20 க்கு வீடு வந்து சேர்ந்தாள் கௌரி கல்யாணி. மாமா சென்னை எழும்பூரில் இருந்து போனில் பரீட்சை விவரங்களைக்கேட்டு , ராமசாமியிடம் சொல்லிவிட்டு ரொம்ப தேங்க்ஸ் டா , நீங்கல்லாம் ஹெல்ப் பண்ணாம இதெல்லாம் நடந்திருக்காது என்று மெய்யான நன்றி தெரிவித்தார். ராமசாமி குஷி ஆனார்., க ரெ வை அழைத்துக்கொண்டு காபி சாப்பிடப்போனார்.
அங்கே கேப்ரியல் வா மேன் போன வியாளக்கெளமே , வயோலா கீலே உல்ந்து LEFT ANKLE பிராக்ச்சர் அம்மா அம்மானு அலுவுறா . அவளபாக்கப்போய்ட்டேன் அதுதான் பார்ட்டி குட்க்கா ம போய்ட்டேன் சாரி இந்த வீக் குத்துற் றேன் . அவுரு ---மாடசாமி கிட்டே சொல்லுங்கோ இந்த வீக் மீட் பண்ணுவோம். பை என்று விடை பெற்றார்
அடுத்த புதன் கிழமை இன்டர்வ்யூ -யூனிவர்சிட்டி TRADITIONAL ART DEPARTMENT -ரூம் நம்பர் . 12 ல் காலை 11. 30க்கு என்று e -mail தகவல் கௌரி க்கு. மகிழ்ச்சியும் அச்சமும் சூழ அங்கேயே சாரதாவிடம் இன்டர்வ்யூ பற்றி கேட்டு மேடம் இன்டர்வ்யூல இருப்பாங்களா என்று பதற்றமாக க்கேட்டாள் .
ஏ லூசு என்ன கேள்வி கேக்கற அதும் PG -ALL INDIA SELECTION ல HOD சுபத்திரா மேடம் இல்லாமலா? ஏன் கவலைப்படற கண்டிப்பா மேடம் உண்டு; வந்து உங்கள கண்ணுல விரலை விட்டு [அதாவது உங்க விரலையே விட்டு] ஆட்டுவாங்க -போ போ அப்ப தான் தெரியும் என்றாள் சாரதா . ஏன்க்கா பயமுறுத்துறீங்க என்றாள் கௌரி.
எப்ப பாரு உனக்கு பயம் மேடம் உக்காருவாங்களா நிப்பாங்களா , திட்டுவாங்களா , குட்டுவாங்களா னு பொலம்பாத , சந்தோஷமா இன்டர்வ்யூ க்கு போ சும்மா இன்டர்வ்யூ னா என்ன னு புரிஞ்சுப்ப . ஆனா மேடம் அதெல்லாம் ரொம்ப நாசூக்கா HANDLE பண்ணுவாங்க ; நீயே என்ஜாய்பண்ணி சந்தோஷமா அக்கா அக்கா னு சிரிச்சுகிட்டே ஓடிவரப்போற பாரு. அப்ப நீ எங்களுக்கு [4 பேருக்கும்] பார்ட்டி குடுக்கணும் ஊக்கும் சும்மாவா? GOOD LUCK என்று வாழ்த்தி அனுப்பினாள் சாரதா
தொடரும் அன்பன் ராமன்
No comments:
Post a Comment