LET US PERCEIVE THE SONG -53
பாடலை உணர்வோம் -53
பாடலை உணர்வோம்
பகுதியில்
மீண்டும்
ஒரு
மாத
காலத்திற்குப்பின்
நுழைகிறோம்.
எனினும்
தயக்கமோ
தடுமாற்றமோ
இல்லாமல்
நிகழ்ச்சியை
தொடர்வோம்.
இன்று நமது
தேர்வு
'என்னுயிர்
தோழி'
[கர்ணன்
1964] கண்ணதாசன்,
விஸ்வநாதன்
ராமமூர்த்தி,
குரல்
பிசுசீலா
‘கர்ணன்’ பட
பாடல்கள்
தனிச்சிறப்பு
வாய்ந்தவை.
இப்படத்தின்
முதல்
விளம்பரம்
வந்த
நிலையில்
பலர்
என்னது
இசை
விஸ்வநாதன்-ராமமூர்த்தியா?
இது
காப்பிய
படம்
ஆயிற்றே? இவர்கள்- வெஸ்டர்ன்
ம்யூசிக்
செய்பவர்கள்
ஆயிற்றே
என்று
அங்கலாய்த்து
புலம்பியதை
நினைவு
கூறுகிறேன்.
ஆனால் நடந்தது
என்ன?
ஹிந்துஸ்தானி இசை,
கருவிகள்,
ராக
அமைப்புகள்,
ஆலாபனைகள்
என
முற்றிலும்
வேறு
அமைப்பில்
பாடல்களை
வடிவமைத்து அத்துணை பாடல்களும்
இன்றும்
பேசப்பட்டு
வருகின்றன.
ஏன்
எனில்
கவிதையும்
இசையும்
கைகோர்த்த
மகோன்னதம்
இந்த
படம்.
இந்தப்படத்தில்,
அநேக
பாடகர்கள்
பயன்படுத்தப்பட்டிருந்தனர்.
மேலும்
மும்பை
திரையுலகில்
இருந்து
சாரங்கி
இசைக்க
நாராயண்
என்ற
கலைஞர்
இறக்குமதி
செய்யப்பட்டிருந்தார்
மேலும்
சில
கலைஞர்களும்
பங்களித்ததாக
அந்நாளில்
பேசப்பட்டது.
எப்படியாயினும் இப்பாடல்
ஒரு
உணர்ச்சிக்குவியல்
எனில்
ஐயம்
வேண்டாம் அதிலும் இது
தீவிர
விரகதாப
நிலையில்
பெண்
மனக்குமுறலாய்
வெளிப்பட்ட
பாடல்.
எனவே,
சொற்களில்
சூடும்
கோபமும்
அவை
விளைவித்த
ஏமாற்றமும்
பின்னிப்பிணைந்து
வெளிப்படும்
உணர்வுகள்
அடுக்கடுக்காக
பேசப்பட்டுள்ளன.
அதில்
கவியரசரின்
விவாத
விளக்கங்கள்
தனித்துவம்
மிக்கவை
பல்லவியிலேயே கோபம்
தெறிக்கிறது
என்னுயிர் தோழி கேளொரு
சேதி
"இது
தானோ
உங்கள்
மன்னவன்
நீதி
? அது என்ன
"உங்கள்"
மன்னவன்?
ஆம்
அவன்
இவளை
கண்டுகொள்ளவில்லை
எனவே
அந்நியப்பட்டுவிட்டான் என்பதை "உங்கள்
மன்னவன்
" என்று
சாடுகிறாள்.
கோபத்தின் ஆட்டம் தெரிகிறதா
? .
அரண்மனை அறிவான்
அரியணை
அறிவான்
அந்தப்புரம் ஒன்று
இருப்பதை
அறியான்
வருகின்ற வழக்கை
தீர்த்து
முடிப்பான்
மனைவியின் வழக்கை
மனதிலும்
நினையான்
அந்தப்புரம் ஒன்று
என்ற
சொல்
வரிசையில்
ஒன்று
என்ற
சொல்--
மறந்துவிட்ட
இடம்
என்பதை
வலுவாக
உணர்த்துவதை
காணலாம்
[நான்
இருப்பதை
மறந்துவிட்டாயா
என்பதை
விட
நான்
ஒருத்தன்
இருப்பதையே
என்று
சொன்னால்
ஆழமான
உணர்த்துதல்
அல்லவா?
-அதைத்தான்
'போகிற
போக்கில்'
சொல்லிவிட்டார்
கண்ணதாசன்].
அப்படியெல்லாம் போகிறபோக்கில்
சொன்னாலும்
லேசில்
விடமாட்டார்
மெல்லிசை
மன்னர்.
கவிதையின்
கருத்தை
தீவிரமாக
பாடவைத்திருக்கிறார்
மன்னர்.
பாடலின் மொத்த
கால
அளவு
3 நிமிடம்
35 வினாடிகள். இதற்குள் எவ்வளவு
வண்ண
ஜாலங்கள்
காட்டியுள்ளார்
மன்னர்
.
குதூகலம் நிறைந்த
துவக்கை
இசை
சுமார்
37 வினாடிகளுக்கு. இதற்கு என்ன
குதூகலம்
என்றால்
இளவரசிக்கு
அல்ல,
அவரின்
தோழியர்
மகிழ்ந்து
ஆடி
வரும்
இசை
-எனவே
குதூகலம்.
என்னுயிர்தோழி என
தோழியை அழைக்கும் பாங்கில்
ஒரு
நெருக்கம்
தெரிவிக்கும்
குழைவு
-கவனியுங்கள்.
கேளொரு சேதி
என்று
சொல்லி
இது
தானோ
உங்கள்
மன்னவன்
நீதி என்று
'உங்கள்'
என்று
நீங்களாச்சு
உங்கள்
மன்னனராச்சு
என்று
தன்னை
விலக்கிக்கொண்டு
குற்றம்
சுமத்துகிறாள்
தலைவி.
அதை
இசையில்
வெளிக்கொணரவே
மன்னர்
உங்கள்
என்ற
சொல்லை
சற்று
அழுத்தி
பாட
வைத்துள்ளார்.
பல்லவிக்குப்பின்
சுமார்
17 வினாடிகள்
இடை
இசை
சரணத்தில்
அரண்மனை அறிவான்
அரியணை
அறிவான்
என்று
துவங்கி
ஆஹ் ஹ்
ஹ்
ஹ
அ
ஆ
அ
ஆ
அ
ஹ்
ஹ்
ஹ்
ஆ
ஆ
அ
அ
ஆ
ஆ
என்று
21 நொடிகளுக்கு
சுசீலாவின்
அற்புத
ஆலாபனை
[நீண்ட
நெடிய
அரண்மனை
முழுவதும்
சுற்றுவான்
என்பதற்கு
கோபத்தின்
வெளிப்பாடாக
ஆலாபனை. பின்னர் அந்தப்புரம்
ஒன்று
என்று
[இருந்தால்
என்ன
இல்லாவிட்டால்
என்ன என்ற] குமுறல்
தொனிக்க
அந்தப்புரம்
ஒன்று இருப்பதை
அறியான்
என்று
சாடுகிறாள்.
பாடலில் ஆழ்ந்து
கேளுங்கள்
விரகம்
சொல்லில்
இருப்பதை
பாடும்
பாவத்தில்
வெகு
சிறப்பாக
அமைத்து
கருவிகளையும்
மென்மையாகவும்
சோகம்
ததும்பவும்
இசைத்து
ஒரு
ஜீவ
நாடகம்
படைத்த
இசை
என
உணர்த்தும்
அமைப்பு
பாடலில்.
கேட்டு உணர
இணைப்பு
இதோ
https://www.youtube.com/watch?v=ON5Wh1WuAH0
ENNUIR THOZHI KD V R PS
இதே பாடலின்
வேறு
சிறப்புகளை
சுபஸ்ரீ
அவர்களின்
QFR இசை
மற்றும்
விளக்கத்துடன்
ரசிக்க
இணைப்பு
இதோ.
QFR https://www.youtube.com/watch?v=NFE0o7FTCpk
ENNUIR THOZHI
நன்றி
அன்பன் ராமன்
____________________________________________________________________________________
No comments:
Post a Comment