LIGHT MUSIC-- DIMENSIONS
மெல்லிசையில் பரிமாணங்கள்
ஏதோ விளையாட்டாக ஓ சினிமாப்பாடல் தானே என்று முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு, வீடுகளில் சினிமாப்பாடல் என்ற பேச்சுக்கே பெரும் கட்டுப்பாடுகள் சட்ட திட்டங்கள் விதித்து இளம் சிறார்களை அடக்கி வைத்த நிலையிலிருந்து அவர்களாகவே அனுமன் போல் கட்டவிழ்த்துக்கொண்டு, திரை மறைவில் பாடல்கள் குறித்து அறிந்துகொள்ள, விவாதிக்க தலைப்பட்டதேன் என்ற கேள்வி பல விடைகளை உள்ளடக்கியது.
ஆம், படங்கள் ஆன்மிகம், காப்பியம் ,ராஜா ராணி, சுதந்திரப்போராட்டம் வகை கதைகள் காட்சிகள் நிலையில் இருந்து வெளியேறி, சமூக, வாழ்வியல் களங்களை முன்னெடுக்க, காட்சி வசனம் நடிப்பு அனைத்தும் இயல்பு நிலை நோக்கி பயணிக்க, பாடல்களிலும் கதைசார்ந்த நிலை தோன்றத்துவங்கி, இசை இலக்கண மரபிலேயே புதுவகை ராக மாற்றங்களை கைக்கொண்டு பாடல்கள் வடிவமைக்கப்பட்டு வெற்றியை நிலைநாட்ட திரு ஜி ராமனாதன் அவர்களின் அணுகுமுறைகள் பெரிதும் பேசப்பட்டன. அம்பிகாபதி, உத்தமபுத்திரன், வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற படங்களின் பாடல்கள் பெரும் பேசுபொருட்கள் ஆனது வரலாறு. அதே சமகாலத்தில் கல்யாண பரிசு , பாச வலை புதையல், பதிபக்தி என புதுவகை இசையில் வெற்றி கொடிநாட்டின. இந்த சூழலில் பெரும் ஆளுமைகளாக வலம் வந்தனர் -விஸ்வநாதன்ராமமுர்த்தி.
இவ்விருவரும் பரீட்சார்த்த அணுகுமுறைகளால் திரைப்பாடல்கள் வடிவம், அமைப்பு, இசைக்கோர்வை அனைத்திலும் வடிவமைத்த இசை வடிவம் "மெல்லிசை" என பெயர் பெற்றது. எண்ணற்ற புதுமுயற்சிகள் வி-ரா வின் தனிச்சிறப்பு. மேலும் இசைக்கருவிகளின் புது கட்டமைப்பு , பியூஷன் எனும் இசைவடிவங்களின் கலப்பு அனைத்திலும் கோலோச்சினார். கண்ணதாசன்- வி-ரா அணி நிகத்திய அற்புதங்கள் பல.
அந்த உள்ளார்ந்த நுநுணுக்கங்கள் அறியாத என் போன்ற பலரும் எம் எஸ் வி யின் இசையில் கட்டுண்டு பாடல் இலக்கணம் குறித்த தீவிர கருத்துகள் கொண்ட ரசிகர்கள் ஆனோம். வேறுவகை இசைவடிவங்களால் எங்களை ஈர்க்கவே இயலவில்லை என்பதே சத்திய வாக்கு.
அப்படி எம் எஸ்வி கையில் எடுத்த உத்தி/வித்தகம் யாது என தொடர் விவாதங்கள் இன்றைய காலகட்டத்தில் பொதுவெளியில் பேசப்படுவதிலிருந்தே அந்த வகை இசையின் தாக்கம் எத்தகையது என அன்பர்கள் புரிந்து கொள்ளலாம்.
இந்த விவாதத்தில் முக்கிய ஆளுமை திரு. என் ஒய் முரளி அவர்கள் [தொழில் முறையில் என்ஜினீயர்] , எம் எஸ் வி யின் இசையில் தன்னை பறிகொடுத்தவர். அவரது குடும்பமே எம் எஸ் வி ரசிகர்கள். மகள் [அவரும் என்ஜினீயர்]கீபோர்ட் கலையில் வித்தகி., மனைவியும் பாடல் ரசிகை/ பாடகி.
திரு முரளி கூறும் கருத்துகளை கூர்ந்து கவனித்து உள்வாங்குங்கள்.அப்போது புலப்படும் நான் என்ன சொல்லி வந்தேன் என்பதன் தெளிவான விளக்கம் இது வரை இரண்டு பதிவுகள் வந்துள்ளன. இரண்டையும் கேட்டு ரசித்து உணர இணைப்பு இதோ
https://www.youtube.com/watch?v=IssZ3CFwFvk nym 1
https://www.youtube.com/watch?v=zLGt18uv--E ny m 2
நன்றி அன்பன் ராமன்
No comments:
Post a Comment