Thursday, January 29, 2026

GOOD- BUT A LITTLE OFF MEMORY [-25]

 GOOD- BUT A LITTLE OFF MEMORY [-25]   RICHLY MELODIOUS -5

அமுதவல்லி [1959] திரைப்படத்தில் இடம் பெற்ற ஆடைகட்டி வந்த நிலவோ பாடல்[டி.ஆர்..மஹாலிங்கம்,பி.சுசீலா},குரல்களில்     திரும்பியபக்கமெல்லாம் ஒலித்து மிகவும் புகழ் அடைந்தஒன்று.

இது பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் எழுதிய பாடல் என்பது சொல்லாமலே விளங்கும். சொற்கட்டு மாத்திரமல்ல, ட்யூன் என்னும் பாடப்படும் நடையை கவனித்தால் அது எவ்வளவு விரைவாய் பயணித்து மெல்ல வேகம் குறைத்து சரணத்தை நிறுத்தி பின்னர் இடை இசைக்கு இடம் தருகிறது? அது ஏன்? பட்டுக்கோட்டைட்யூனுக்கு எழுதித்தர மாட்டார்.  அவர் எழுதிய வரிகளுக்கு தான் ட்யூன் அமைக்க வேண்டும். அப்படி எனில் ட்யூன் தன்னை அவ்வப்போது வேகமாற்றம் செய்து கொண்டு பயணித்தால் தான் பாடலின் நளினம் காப்பாற்றப்படும்.

நான் சொல்லும் இடம் இதுதான் "'கண்ணாளனுடன் கலந்தே” ' என்று பயணிக்கும் பாடல் வரி மெல்ல வேகம் குறைந்து பல்லவியை இணைக்கும் பகுதி , இசை அமைப்பின் நேர்த்திக்கு சான்று. இதுதான் கவிஞனின் கற்பனைக்கும் இசையை பொருத்தி அமரவைக்கும் உத்தி [அந்த நாளிலேயே எம் எஸ் வி காட்டிய வித்தகம்] பின்னர் வரும் சரணத்தில் முக்கால் பகுதிக்கு பாடகி சுசீலா வுக்கு வெறும் ஹம்மிங் மட்டுமே கொடுத்து பாடலின் நீளத்தையும், நளினத்தையும் நேர்த்தியாக கையாண்டுள்ள தன்மையையும் கவனியுங்கள்.  ..

அந்த நாளிலேயே துள்ளி சிறகடிக்கும் வேகம் இசைக்கருவிகளின் உயிர்ப்பான பங்களிப்பு அதிலும் போங்கோவின் சீரான ஆனால் விரைவான பயணம்-- பாடலையையும் இசையின் மகத்துவத்தையும் தூக்கி நிறுத்திய ஆளுமை போங்கோவை தமிழ் சினிமாவில் பெரிதும் நிலைப்படுத்திய பங்களிப்பில்             எம் எஸ் விக்கு தான் முதல் இடம் என்பது எனது புரிதல்

கேட்டு ரசிக்க இணைப்பு

https://www.youtube.com/watch?v=T4WR1d9LIBw AADAI KATTI [1959] PATTUKKOTTAI, V R  TRM PS 

சுபஸ்ரீ அவர்களின் QFR ஆக்கத்தில் இதே பாடல் குறித்த நுணுக்கங்களை அறிய இணைப்பு இதோ

https://www.youtube.com/watch?v=AOnQBOrxt5I   QFR

'ஒருவன் காதலன் ஒருத்தி காதலி"

போகிற போக்கில் எழுதிய வாசகங்களை பாடலாக்கி காட்டியிருக்கிறார் திரு எம் எஸ் வி அவர்கள். பின் சும்மாவா சொன்னார்கள்?  என்ன சொன்னார்கள் ? யார் சொன்னார்கள்

கர்நாடக சங்கீத புகழ் திருமதி எம் எல் வசந்தகுமாரி " இப்ப இங்க எம் எஸ் வி இருந்தார்னா கார்  கதவை  திறக்கும் சப்தத்திற்கு 'ஸ்வரம்' சொல்லிடுவார்.

திரு எம் ஜி ஆர் " விஸ்வநாதன் கையில 'தினத்தந்தி' பேப்பர் கொடுத்தால்  கூட அழகா ட்யூன் போட்டுருவார்.

அவர் [MSV] இந்த 'வெண்ணிற ஆடை [” 'ஒருவன் காதலன் ஒருத்தி காதலி"]  பாடலை கையாண்டிருப்பதை கவனித்தால் மேலே உள்ள கருத்துகளில் உள்ள நியாயம் புலப்படும்  வெறும் பாடல் வரிகளில் ஏதாவது கவிதைத்தன்மை தெரிகிறதா ?

ஊஹூம்—ஆயினும், அதை பாடலாக்கிய வித்தகம் நிச்சயம் நாம் புரிந்து கொள்ள வேண்டிய ஒன்று.

துவக்க இசை, இடை இசை அனைத்திலும் கிட்டார் , புல்லாங்குழல், ட்ரம் போங்கோ கருவிகளின் இசைப்பில் சாதாரண உரையாடல் சொற்கள் கவிதை நிலைக்கு உயர்ந்துள்ளதை உணரலாம்.  கேட்டு உணர இணைப்பு இதோ

https://www.youtube.com/watch?v=Fx2EVcsoClI ORUVAN KADHALAN VA KD V R PBS PS

இயற்கை என்னும் இளைய கன்னி [1969] கண்ணதாசன், எம் எஸ் வி, எஸ் பி பி, சுசீலா

எஸ்பி பாலசுப்ரமணியம் என்ற பெயரை தமிழர்கள் முதன்முதலில் அறிந்ததும் அசந்து பார்த்ததும் , இவ்வளவு நளினமாக பாவம் காட்டி பாடமுடியுமா என்ற பலரையும் வியக்க வைத்த குழைந்து குதூகலிக்கும் காதல்           குரலோன் வீசிய வலையும் இங்கே துவங்கியவையே. .

இந்தப்பாடலில் துவக்கத்தில் எழும் ஹம்மிங்கின் ஒலியிலேயே எல்லோரையும் ஈர்த்து மயக்கிய ராக அமைப்பு மற்றும் துள்ளும் இசை ;என்று கேட்டாலும் அதே இளமையும் இசையின் வசீகரமும் பின்னிப்பிணைந்த அற்புதம். கேட்டு கேட்டு இன்புற இதோ இணைப்பு https://www.youtube.com/watch?v=6GoYiIKn9Mg IYARKAI ENNUM  SANTHI NILAIYAM KD MSV SPB PS

அங்கம் புது விதம் [வீட்டுக்கு வீடு -1972] வாலி எம் எஸ் வி எஸ் பி பி எல் ஆர் ஈஸ்வரி

இப்படி குறும்பும் சேட்டையம் பின்னி இணைந்த டூயட் களில் இது ஒரு தனி ரகம். குரல்களில் தான் எவ்வளவு குறும்பு?. பயந்து நடுங்கும் நாயகன் , சும்மா பயப்படாதே நான் இருக்கிறேன் என்று சொல்லாமல் சொல்லும் பெண் -வித்யாசமான ஜோடி.

இசையும் ராகமும் வெகு நேர்த்தியான கலவை அதிலும் பாடல் முடியும் போது குரல்களில் வெளிப்படும் அன்னியோன்யம் என்று பல பரிமாணங்கள். கேட்டு ரசிக்க இணைப்பு இதோ .

https://www.youtube.com/watch?v=JqD6SRwLHuE ANGAM PUDHU VIDHAM VEETTUKU VEEDU VAALI MSV SPB LR E

_____________________________________________________________________________

No comments:

Post a Comment

GOOD- BUT A LITTLE OFF MEMORY [-25]

  GOOD- BUT A LITTLE OFF MEMORY [-25]     RICHLY MELODIOUS -5 அமுதவல்லி [1959] திரைப்படத்தில் இடம் பெற்ற ஆடைகட்டி வந்த நிலவோ பாடல்[...