Sunday, April 23, 2023

Rengaa Rengaa -18

 Rengaa Rengaa -18

ரெங்கா ரெங்கா -18

விஷயத்தை கேள்விப்பட்ட கேப்ரியல் அல்லா கெளவிங்களும் தமிழ் நாட்டுல ரொம்ப selfish ; பசங்கோ ஒளுங்கா ப்ரோக்ரஸ் ஆவுணும் னு நெனைக்கறதில்லே பையன் பூனேக்குட்டி மாதிரி ஊட்டுலயே சுத்திக்கினு இருந்து 2000/-ரூபா கொண்டாந்தா போதும். கேரளா களவிங்கோ பாரு நீ ஆப்கானிஸ்தான் போ கஜ ககஸ்தான் போ ஆனா துட்டு மஸ்தா அள்ளிகினு வா னு world பூரா போய் வா மேன் னு அனுப்பிட்டு துட்டு சேத்துக்கினு உன்னூர் வாட்டி வே ரே கெளவனேகட்டிக்கும் . அதுனாலே தான் கேரளா பசங்கோ அல்லா ஊர்லயும் இருக்காங்கோ.

 நீ குண்டூர் போ மேன் ; life லே நம்ப டெவெலப் ஆவணும் இல்லே , கெள வி birthday க்கு 10 ரூபாய்க்கு gift குத்துடு அவ்ளோதான் குஷி ஆயிடுவாங்கோ , நீ போயினே இருமேன் என்று ஊக்குவித்தார்.அப்புறம் நாளைக்கு ஈவினிங் அஜந்தா ஹோட்டல் லே பார்ட்டி 4.45 pm ; மாடசாமி , ராமசாமி ரெண்டு பேரையும் நான் சொன்னேன் சொல்லி நாளிக்கு வர சொல்லு மேன் என்றார் கேப்ரியல்.

திருச்சி ஜங்க்ஷனில் ரெ வை விட அவன் அம்மா பற்றியபேச்சு நிறைய ஒலித்தது , சிலர் அம்மா என்றனர் சிலர் கிழவி என்றனர் பலர் கெளவி ஒரு சிலர் கெள போல்ட் டுக்கு திமிரப்பாரு என்று விமரிசையாக விமர்சித்தனர்.

நாளைக்கு கேப்ரியல் சார் பார்ட்டி மாலை 4.45  க்கு அஜந்தா ஹோட்டல் தராராம் உங்க ரெண்டு பே ரையும் கண்டிப்பா வரச்சொன்னார்.என்றான் . ரெ . ஏய் இந்த கேப்ரியல் பரவால்லைப்பா சொன்னபடி நடந்துக்கறாரே என்று ராமசாமி வியந்தார்.

மாடசாமி சொன்னார், அதில்லப்பா மெட்ராஸ் காசிம் கேப்ரியல் கிட்ட தெளிவா சொல்லிட்டார், அந்த சனிக்கிழமை உங்க ப்ரோபோசல் மட்டும் வராம இருந்திருந்தா உங்களை சஸ்பெண்ட் பண்ணி உட்டு ட்ரிபியூனலுக்கு 7 எட்டு மாசம் அலைய உடணு ம் னு பசவப்பா [அவர் தான் சவுத் zone ]பிளானிங்                      அதாரிட்டி தயாரா இருந்தார். அந்தப்பையன் சும்மா டாண்ணு 12 மணிக்குள்ளே உங்க பேப்பரை file பண்ணிட்டான். இதெல்லாம் எனக்கு நல்லா  தெரியும் ;அதுனால தான் அடுத்த 3 நிமிஷத்துல நானே endorsement லெட்டர் அடிச்சு குடுத்திட்டேன் , இல்லாட்டி நீங்க ரொம்ப suffer பண்ணும்படி ஆயிருக்கும் னு கேப்ரியல் க்கு சொல்லிட்டு வந்தே ன் னு 2 மாசம் முன்னாடி ராக்போட் ரிட்டன் போகும்போது எங்கிட்ட சொல்லிட்டார். அப்புறம் பையன் ரொம்ப ஸ்மார்ட்டா பரீட்சை எழுதிருக்கான் கண்டிப்பா செலெக்ட் ஆயிருவான் னு சொல்லிட்டார் . அதுனால தான் நான் ஒவ்வொரு சான்ஸ் லயும் அவனுக்கு ஹெல்ப் பண் றே ன் என்று தன்னிலை விளக்கம் தந்தார். . நானே ரெண்டு நாளைக்குள்ள பஞ்சாபகேசன் சார்கிட்ட பேசி நீட் டா செட் பண்ணிடுவோம் கவலைய விடுங்க பாத்துருவோம் என்று பல்லை கடித்துக்கொண்டு ரெ வின் முதுகில் ஷொட்டு வைத்தார் மாடசாமி. அம்மாடி ஷொட்டு இந்த அதிர்வா இருக்கே அறைஞ்சார் னா  எப்பிடி இருக்கும் ,அதான் அம்மா சரண்டர் ஆயிட்டா என்று உள்ளூர சிரித்துக்கொண்டான்

வியாழன் மாலை பார்ட்டியில் பங்கேற்க, சாமிகள் +கேப்ரியல் செச்ஷ ன் ஸ்டாப் வந்தனர். கேப்ரியல் , அவர் மனைவி, மைத்துனி, வயோலா அழைக்கப்பட்டிருந்தனர். கேப்ரியல் ஷொன்னார்- இது மார்கரெட் my wife இது வயோலா [my சிஸ்டர்-இன் -லா] என்று அடையாளப்படுத்திவிட்டு, ராமசாமியிடம், நீங்கோ ரயில்வே ஸ்கூல் லே அட்மிஷன் கேட்டிங்கோ இல்லே. அதுக்குதான் இவளை வர சொன்னேன். நீங்கோ எப்போ வரணும் என்ன ரூல்ஸ் அல்லாம் அவகிட்டே கேட்டுக்கோங்கோ. டைரக்ட் கான்டா க் ட் பண்ணுங்கோ அது பெட்டெர் இன்னும் அவளுக்கு கால் செட் வலே அதுக்குதான் ஹெல்ப் க்கு மார்கரெட் வந்திருக்தூ. அல்லாம் ஹாப்பி யா சாப்புடுங்கோ. யாருக்கு எது வேணுமோ சாப்புடுங்கோ , பர்சனல் டேஸ்ட்க்கு open சாய்ஸ் குடுத்திருக்கேன் enjoy என்று ஹஹ்ஹ ஹா என்று சிரித்தார். .

கஸ்தூரிரெங்கனை நீ அல்லா ஊரும் போ மேன் 5 years  லே நல்ல பெரிய ஆளா வந்துடுவே good லக் என்று வாழ்த்தினா ர். மனதார பார்ட்டிக்கு செலவு செய்தார் . அனைவரும் நன்கு மகிழ்ந்தனர்.

தொடரும் அன்பன் ராமன்

No comments:

Post a Comment

SWEET FLAG

  SWEET FLAG   Acorus calamus [Tam: vasambu ]  A herb that grows to about 2 feet and has prominent leaves   Vacha ( Acorus calamus  L...