Tuesday, April 25, 2023

RENGAA RENGAA -19

RENGAA RENGAA -19

ரெங்கா ரெங்கா -19

மாடசாமி பரபரப்பாக இயங்கினார். டே உச்சி இங்கிருந்து குண்டூருக்கு 1000/- கிட்ட ஆவும். ஆளுக்கு கொஞ்சம் போட்டு  சி டிக்கெட் எடுப்போம் . சியா என்றார்  ரா சா . ஆமாண்டா ஆந்திரா வண்டியில நான்- சி ஜென்ம விரோதியைக்கூட அனுப்பக்கூடாதுடா , பையன் ரொம்ப பயந்தவன் வெளியூர் அனுபவம் இல்லாதவன் . செலவப்பாத்த அப்புறம் அவனும் இங்கியே மோர் சோறும் ஊறுகாயும் போதும்னு நெனச்சுட்டான்னா , நம்ம தோத்துருவோம் அதுக்குதான் சொல்றேன் .இவ்வளவு பண்ணினது பெரிசில்ல இனிமே தான்  நம்ப அவனைக்கரையேத்தணும் . உன்னால முடியாட்டி சொல்லு நான் வேற ஏற்பாடு பண்ணறேன் . சீக்கிரம் செய்யணும் ஏன்னா மெட்றாஸ் வரைக்கும் கவலை இல்லை ;அதைத்தாண்டி போகணும் னா எல்லாம் பக்காவா இருக்கணும். சரிடா பணத்துக்கு ஒண்ணும் யோசிக்கல்ல ; எந்த ட்ரெயின்    எப்ப அதைதான் யோசிக்கறேன் என்றார் ராமசாமி.

மாடசாமி " வெள்ளிக்கிழமை நைட் ராக்போட் , சனிக்கிழமை [29-04]ஹைதராபாத் எக்ஸ்பிரஸ் மாலை 4.45 சென்னை சென்ட்ரல் நானே போய் ஏத்தி விட்டுடறேன்”."

ராமசாமி. "ஏன் நானும் வரக்கூடாதா ?"  மாடசாமி " சரி வா , ஒரு ஆள் போதுமேனு பார்த்தேன் "

ராமசாமி" இல்ல நான் பார்த்து வளர்ந்த பையன் , ஒழுக்கமானவன் அவனை வழி அனுப்ப எனக்கும் ஆசை இருக்காதா ? என்று தழுதழுத்தார்.

மாடசாமி " சரி வா , ஆனா அவன் முன்னால எமோஷன் ஆயிடாத அப்புறம் அவன் மனசு ஒடிஞ்சுருவான் , அதை மட்டும் ஞாபகம் வெச்சுக்க --அது போதும் , பையன் சூப்பரா வந்துருவான் கவலைப்படாத என்று ராமசாமிக்கு ஊக்கம் உண்டாக்கினார் மாடசாமி.

இப்போது மாடசாமி தொடர்ந்தார் " நேத்து நைட் பஞ்சாபகேசன் ட்ட பேசினேன் , அவர்தான் குண்டூர் சவுத் சென்ட்ரல் ரயில்வே அக்கௌன்ட் ஸ் CHIEF ., அவரு சொல்றாருநான் தான் அந்தப்பையனை இங்க குன்டூர்ல போடச்சொல்லி கேட்டுக்கிட்டேன்” னார் . நான் அசந்துட்டேன் "எப்படிசார் னு கேட்டேன் "

அவர் சொன்ன பதில் தான் சூப்பர் . “இந்தப்பையனை எனக்கு தெரியாது . செலெக்க்ஷன் கமிட்டி சேர்மன் சுந்தரம் எனக்கு நல்லா  தெரிஞ்சவரு, ஏதாவது நல்ல பையன்க சென்னைல இன்டர்வ்யூல கிடைச்சா குண்டூர் க்கு போடுங்க நான் ட்ரெயினிங் குடுத்து இங்கயே எடுத்துக்கறேன் னு சொன்னேன்” .                               நல்ல பையன்களே வர் றதில்லயா . னு கேட்டேன் . “வரானுங்க ஆனா இங்கிலீஷோ அக் கவுண்ட்ஸோ படு வீக்கா  இருக்கு . நம்ப ஊர் பசங்கன்னா அக்கவுண்ட்ஸ் நல்லா சொல்லிக்குடுத்துட்டா வேலையாவது ஒழுங்கா நடக்கும் . மத்த ஊர் பசங்களுக்கு சொல்லித்தர அளவுக்கு ஹிந்தியோ உருதுவோ நமக்கு தெரியல்ல , அதுனால தான் கஸ்தூரி ராமன் இங்க டிரைனிங்குக்கு வாரான்” னார். சார் சார் அவன் பேரு "கஸ்தூரி ரெங்கன்" சார் னு ஞாபகப்படுத்தினேன். “ சாரி” னு ரெண்டு தடவை சொன்னார். அதுனால பையன் சரியான இடத்துக்குத்தான் போறான் ; நல்லா ட்ரெயினிங்  பண்ணி விட்டுருவாரு , எல்லாம் நல்ல நடக்கும் என்று மாடசாமி மிகப்பெரிய பங்காற்றியது ராமசாமிக்கு புரிந்தது. . இரு 2 நிமிடம் என்று ராமசாமி யை வெளியே நிறுத்திவிட்டு புக்கிங் கௌண்டருக்குள் ஓடி செல்வி என்னும் புக்கிங் ஊழியரிடம் ரிசெர்வஷன் படிவம் கொடுத்து TRICHY JN  TO GUNTUR JN  via ONGOLE என்று 3AC- berth வாங்கிவிட்டு , இதோ 10 நிமிடத்தில் பணம் தருகிறேன் டிக்கெட் உன்னிடமே இருக்கட்டும் என்று சொல்லி வெளியே வந்து பணம் திரட்டி கொடுத்துவிட்டு செல்வி ரொம்ப தேங்க்ஸ் இன்னும் 10 நிமிஷம் போனா வெயிட்டிங் லிஸ்ட் ஆரம்பிச்சிடும் அதுக்குதான் டிக்கெட்டை முதல் போடச்சொல்லி உன்னை தொந்தரவு பண்ணிட்டேன் , மன்னிச்சுக்கம்மா என்றார் மாடசாமி .

பெரிய வார்த்தை எல்லாம் சொல்லாதீங்க சார் எவ்வளவு பெரிய TTE நீங்க , உங்களுக்கு இது கூட செய்ய மாட்டேனா என்றாள்  செல்வி.. ஒரு கட்டத்தில் மாடசாமியின் உதவியால் தான் செல்விக்கு டிக்கெட் கவுண்டரில் வேலை கிடைத்தது அவளும் நேர்மையான ஊழியர்.. இப்படி பலரும் பிறர் உதவியால் முன்னேறியவர்கள் என்பது பரோபகாரரத்தின் மாட்சிமை தன்னை பெருமைப்படுத்துவது..

குறித்த நாளில் ரெ, மா சா, ரா. சா மூவரும் சென்னை சென்று ரயில்வே ரூமில் தங்கி குளித்து ஐயர் மெஸ்ஸில் காலை தோசை வடை சாப்பிட்டு மயிலாப்பூர் வெங்கடேச பெருமாள் கபாலீஸ்வரர் கோயில்களில் வழி பட்டு முடிக்கும் போது மணி 10. 57 .

 ராமசாமி டேய் ராயர் மெஸ்ஸுக்கு போவோம்டா என்றார்.

டேய் உச்சி --ராயர் சாயங்காலம் தாண்டா போளி போடுவாரு என்றார் மாடசாமி. போடா எதையாவது சொல்லாத என்றார் ராமசாமி . சரி உன் ஆசையை ஏன் கெடுப்பானேன் வா போய் பாப்போம் என்றார் மாடசாமி . மெஸ்ஸில் கூட்டம் .என்ன ஆச்சரியம் ஜீரா போளி கூட்டத்தை கூட்டி இருந்தது . இப்ப என்னடா சொல்ற? என்றார் ராமசாமி . இரு ராயர்கிட்டயே கேப்போம் என்றார் மா சா. . என்னசாமி காலை நேரத்திலேய ஜீராபோளி ? என்றார் மாடசாமி . அதுவா இன்னிக்கு இங்க FUND OFFICE BUILDING மயிலாப்பூர் ROTARY CLUB -50 வது ஆண்டு விழா மத்தியானம் லஞ்சுக்கு கண்டிப்பா ஜீரா போளி போடணும் னு சொல்லிட்டா அதுனால தான். இது

எப்பிடியோ தெரிஞ்சு போய் ஒரே கூட்டம் 1 மணிக்கு தான் லஞ்ச் அதுனால சமாளிச்சுடுவோம். வர கஸ்டமரை வராதீங்கோ னு சொல்ல முடியல மேனேஜ் பண்ண வேண்டியது தான் , அவா இல்லேன்னா நம்ப இல்லையே சார் என்றார் ராயர். இப்ப என்னடா சொல்ற?  என்றார் மாடசாமி.

மதியம் 2. 30 க்கு WOODLANDS இல் லஞ்ச். . ரெவுக்கு MIXED FEELINGS -மகிழ்ச்சியும் சோர்வும் ஒரே நேரத்தில். சாப்பிட்டு விட்டு ரூம்  போய்  3. 40 க்கு ஆட்டோவில் சென்ட்ரல் சென்றனர் . AC B-4 ல் ஏறி சீட் 31 ல் ரெவை உட்காரவைத்து நல்லாசி வழங்கி நிமிர்ந்தனர் சாமிகள்.

அப்போது TTE ராகவலு [மாடசாமிக்கு நல்ல நண்பர் ], ஏன்னா மாட் சாமி சார் ஏமி இக்கட என்றார்.   ரெ வை அறிமுகப்படுத்தி அவன் வேலையில் சேர குண்டூர் போகிறான் வேண்டிய உதவிகளை செய்து குண்டூரில் இறக்கி விட சொல்லி மாடசாமி கேட்டுக்கொண்டார். வண்டி மெல்ல நகர்ந்ததும் விடை பெற கை அசைத்தனர் மூவரும் நீர் தேங்கிய கண்களுடன் . மறுநாள் காலை 2  சாமிகள் திருச்சி திரும்பினர்.

தொடரும் அன்பன் ராமன்

No comments:

Post a Comment

SRIRANGAPATNA

  SRIRANGAPATNA Curiously, the name has no association with either Srirangam of Tamilnadu or Patna of Bihar; in its own right –it is Srira...