Wednesday, April 26, 2023

SAMIs COME TOGETHER-19

SAMIs COME TOGETHER-19

சாமிகள் சங்கமம் -19

அப்போது புத்தகங்களுடன் பானு வந்தாள் ; இங்கே டேபிள் மேல் வை என்று சொல்லிவிட்டு நிமிர்ந்து பார்த்தாள் ; ஓரமாக வேலாயுதம் நின்றிருந்தான். ஒரு சீட்டில் ஏதோ குறியீடுகள் எழுதி NATIONAL SCHOLARSHIP பெற வசதியான அக்கௌன்ட் துவங்கும் படிவம் 4 கேட்டு பாங்கிற்கு அனுப்பினாள் . பானுவை வேறொரு வேலையாக மெய்ன் லைப்ரரிக்கு அனுப்பினாள் .

கௌரி "மேடம் பேங்க் அக்கௌன்ட்” என்று வாய் திறக்க சுபத்ரா மீண்டும் தனது ஆட்காட்டி விரலால் வாய் மூடி அவளை பேசாமல் இரு என்று உணர்த்தினாள். எனக்கு தெரியும் இப்ப FORM  வரும் இங்கேயே ஓரமாக இந்த டேபிளில் உட்கார் . FORM ல் சரியா நான் சொல்வதை எழுதி 2 இடங்களில் கையெழுத்து+ 3 SPECIMEN SIGNATURE இட்டு இன்றே பாங்கில் அக்கௌன்ட் ஆரம்பிக்கலாம் இன்று நல்ல முகூர்த்த நாள். 500/- போட்டு அக்கௌன்ட் துவங்கலாம் என்றார் சுபத்ரா      

 .கௌரி ஆடு மாதிரி விழித்தாள் . உடனே சுபத்ரா 500/- இல்லையா என்றாள்  ஆமாம் என்பதாக கௌரி தலை அசைத்தாள் . சினிமாக்கு போக 2000/-ரூபாயை தூக்கிட்டு போறீங்க . அக்கௌன்ட் ஓபன் பண்ண காசே       இல்லாம கையை வீசிக்கிட்டு வருவியா நல்ல பொண்ணு நீ என்றாள் . இருக்கு மேடம் ஆனா 2000/-ரூவா நோட்டு தான் இருக்கு என்று முணுமுணுத்தாள். பின்ன 500/- ரூவா இல்லைனு தலையை ஆட்டினாயே என்று மீண்டும் பிடித்துக்கொண்டாள் சுபத்ரா . உங்களைப்பாத்தாலே பயமா இருக்கு மேடம் என்று மனம் திறந்தாள் கௌரி.

இங்க வா என்று அழைத்து அவள் கையைப்பற்றினாள்  சுபத்ரா . உள்ளங்கையெல்லாம் ஒரே வியர்வை . என்ன இப்படி வேர்த்துக்கொட்டற , இரு என்று பிரிட்ஜ்ல் இருந்து லேசான கூல் வாட்டரை கொடுத்து பருகச்சொன்னாள் . கௌரி மனம் குளிர நீர் பருகினாள் . இப்ப இப்பிடித்தான் நடுங்குவ , ரெண்டு மாசம் போனா நான் தான் ஒன்னைப்பாத்து நடுங்கணும் . ஒங்க வேலையெல்லாம் தெரியாமயா இங்கே உக்காந்திருக்கேன்.என்றாள் சுபத்ரா . கௌரிக்கே சிரிப்பு வந்து விட்டது . அப்பிடியெல்லாம் செய்ய மாட்டேன் மேடம் என்றாள் . செஞ்சு தான் பாரேன் என்ன நடக்குதுன்னு. என்றாள் சுபத்ரா. அப்படியெல்லாம் செய்யக்கூடாது னு  தெரியும் மேடம். , சாரதா அக்காவும் அட்வைஸ் கொடுத்திருக்காங்க என்றாள் . என்ன அட்வைஸ் ? சுபத்திரா ஒரு உபத்ரா அப்படீன்னா? இல்லாட்டி அவங்களைப்போய் பாக்காத கோவிச்சுப்பாங்க அது இது னு சொல்லி பழைய புஸ்தகம் படிச்சா காத பிச்சுருவாங்க னு ரெண்டு பே ரும் மெயின்காட் கேட் கிழவிங்க மாதிரி வம்பள க்கிறீ ங்களாக்கும் எனக்கு தெரியாதா. என்றாள் HOD  ஐயையோ சாரதா சொன்னது கொஞ்சம் தான் போலிருக்கு , இவங்க பயங்கரமான PROFESSOR என்று அமைதியானாள் Bank அக்கௌன்ட் ஓபன் செய்வித்து , தனது கவரிங் லெட்டர் + அக்கௌன்ட் endorse செய்து இதை speed post ல் அடுத்த கட்டிட த்தில் இயங்கும் யூனிவர்சிட்டி போஸ்ட் ஆஃபீஸ்ல் அனுப்ப வைத்தார் HOD.    2 குண்டு புத்தகங்களையும் நோட்டில் கௌரியின் கையெழுத்து வாங்கிக்கொண்டு 10 நாளில் திருப்பித்தா என்று கொடுத்த  HOD ,   நைட் போன் பேசு என்று சொல்லி கௌரியை அனுப்பினார் HOD  சுபத்திரா

தொடரும் அன்பன் ராமன்

No comments:

Post a Comment

TM SOUNDARARAJAN-38

  TM SOUNDARARAJAN-38 டி எம் சௌந்தரராஜன் -38                    POSTING NO. 1225  திரு டி எம் எஸ் அவர்களின் குரலில் வெளிவந்த பாடல்கள் ...