Thursday, April 27, 2023

RENGAA RENGAA -20

 RENGAA RENGAA -20

ரெங்கா ரெங்கா -20

குண்டூர் ஸ்டேஷ ன் arrived , come , come என்று ரெ வை கூட்டிக்கொண்டு இறங்கினார்ராகவலு. விரைவாக அப்பர் கிளாஸ் வெயிட்டிங் ரூம் மேற்பார்வை யாளர் சுப்பிரமணியன் என்பவரை கூட்டி வந்து , ரெ பகலில் ஆபீஸ் போய்விட்டு இரவில் வந்து தங்கிக்கொள்ளட்டும், நீ உள்ளே பெட் போட்டு நல்லா பாத்க்கோ அவரூ மெட்ராஸ் வாடு , கவுனம் என்று தங்க ஏற்பாடு செய்து விட்டு, ரெ விடம் தம்பீ டெய்லி 20/- ருப்பீஸ் குடுங்கோ சுப்ரமணிக்கி அது போதூ என்று சொல்லி விடை பெற்றார் , வண்டி ஏறி தன்  வேலையை பார்க்க போனார். .                    மாடசாமி தென் இந்தியாவுல பெரிய ஆள் தான் போலிருக்கு என்று ரெ வியந்தான்..

சுப்பிரமணிசார் இந்தாங்க பால்” என்று சூப்பர் பால் ஒரு பேப்பர் சுப்பில் தந்தான். 5 நிமிஷத்துல ரூம் ரெடி பண்றே ன் , கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க என்று சுத்த தமிழில் சொன்னார் சுப்பிரமணி. நீங்க மெட்றாசா என்றான் ரெ . இல்ல சார் சேலம் , மேல ஆஃபீசர் பஞ்சாபகேசன் சார் காலை 9.30 க்கு வருவார்.அவர்தான்  எனக்கு இங்க வேலை  வாங்கி தந்தார் 12 வருஷமா இங்க வேலை செய்யறேன். அவரு எத்தினி பேருக்கு ஹெல்ப் பண்ணிருக்காரோ கணக்கே இல்ல , ரொம்ப high quality officer ; இந்த ரயில்வே டிவிஷன் அவருக்கு எவ்வளோ மரியாதை இருக்கு.என்று சொல்லிக்கொண்டே மள மள வென்று ac அறையில் . ரெ வை தங்க வைத்தான் சுப்பிரமணி.7 மணி வரைக்கும் தூங்குங்க , நான் வந்து கீசர் போட்டு தரேன் அப்புறம் குளிங்க அதுக்குள்ள டவுன் ஒரு தமிழ் மாமி மெஸ் இருக்கு அங்கிருந்து டிபன் வாங்கி தரேன் அதை சாப்பிடுங்க வேற ஓட்டல் ஐடெம்லாம் ரொம்ப காரம் அதுனால நான் பாத்து வாங்கி தரேன் , தூங்குங்க சார் , நன் வெளிய ஹால் தூங்குவேன் ரூம் பூட்டிட்டு படுத்துருவேன் குட் நைட் என்று படுக்கப்போனான்.

 காலை 6.20 க்கு கண் விழித்தான் க ரெ ஜன்னல் வழியே மேலே பார்த்தான் கோபுரத்தைக்காண வில்லை .ஐயோ என்று ஒரு வினாடி  பதறி பின் இப்போது குண்டூரில் இருக்கிறோம் என்று நினைவுபடுத்திக்கொண்டான். வெந்நீர் இல்லாமலே குளித்தான் , ஸ்ரீசூர்ணம் தரித்தான். காபி நினைவுக்கு வந்தது . இங்கே மாடசாமி சார் இருந்தால் எங்கே நல்ல காபி கிடைக்கும் னு கூட்டிக்கொண்டு போவார் என்று நினைவுகூர்ந்தான். 7 மணிக்கு சார் என்று சுப்பிரமணி கதவைத்தட்டினான் . உடனே வாங்கோ என்று கதவை ரெ திறந்தான் . சார் காபி வாங்கட்டுமா என்ற சுப்ரமணியிடம், ராத்திரி பாலுக்கே நான் இன்னும் பணம் தரலியே என்றான் ரெ .அதுக்கு ராகவலு சார் பணம் தந்துட்டார் சார் நீங்க ஒண்ணும் தர வேண்டாம் . என்றான் சுப்பிரமணி. சரி காபி எவ்வளவு, 15/-ரூவாய்க்கு சுமாரா இருக்கும் 20/-க்கு நல்லா இருக்கும் , 20/- சாப்புடுங்க எதுக்கு 15/-குடுத்து மோசத்தை வாங்கணும் ? என்றான் சுப்பிரமணி.

எங்கிட்ட ரொம்ப பணம் இல்ல என்றான் ரெ . ஐயோ என்று ரெ வின் நிலை பற்றி வருந்தினான் சுப்பிரமணி. சார் நீங்க ட்ரைனிங் தானே வந்திருக்கீங்க -3 மாசத்துக்கு? ஆமாம் என்றான் . ரெ . [இப்போது சுப்பிரமணி 12 வருடங்களுக்கு முன் நானும் இப்படித்தானே 5/- காபி க்கு காசு செலவழிக்க திணறினேன் , பாவம் சார் என்று பச்சாதாபப்பட்டான்]. சார் மாசம் ஆனதும் 20, 000/- குறையாம வரும் , அதுனால நான் மாமிகிட்ட பேசி உங்களுக்கு கணக்கு ஆரம்பிச்ச்சுடுவோம் சம்பளம் வாங்கிட்டு குடுங்க அதுவும் நீங்க அக்க வுண்ட்ஸ் டிபாட்மென்ட் தானே ? பஞ்சாபகேசன் சார் கரெக்ட்டா எல்லாம் ரெடி பண்ணிடுவார். இப்ப நான் போய் காபி டிபன் கொண்டுவரேன் . 9.00 மணிக்கு எக்ஸ்பிரஸ் வரும் அப்ப வெயிட்டிங் ரூம் திறக்கணும். இப்ப கதவை மூடி வெச்சிட்டு கிளம்பறேன். ட்ரெயின் போனதும் அடுத்த பில்டிங்  தான் ட்ரைனிங் சென்டர் சார் 9.20 க்கு வந்திடுவார் நானே கூட்டிக்கிட்டு போறேன் அதுக்குள்ள சாப்பிட்டு முடிச்சுடுங்க அடுத்த ட்ரெயின்  3 மணிக்கு தான் அது வரை சார் செக்ஷன் வேலை இருந்தா பாத்துப்பேன் என்று கிளம்பினான். 8.20 க்கு இட்டிலி தோசை , சாம்பார் சட்னியுடன் கொண்டு வந்தான், ஒரு பிளேட்டை டைனிங் ரூமில் இருந்து கொண்டுவந்து இதுல சாப்புடுங்க என்று ஒரு தண்ணீர் பாட்டிலையு ம்  வைத்தான். திருப்தியாக உணர்ந்தான் . ரெ . சார் இந்த பேப்பரை பத்திரமா வெச்சுக்குங்க இப்ப 23/- ரூவா ஆச்சு , டெய்லி எழுதி மாசக்கடைசில டோடல் பாத்திட்டு மாமிக்கு பணம் குடுத்துடுவோம்; மாமி அவங்களும் நோட்டுல எழுதிடுவாங்க உங்க பேர் தெரியல மெட்றாஸ் சார் னு நோட்டுல எழுதியிருக்கேன் என்றான் சுப்பிரமணி . கரெ தன்  பெயர் சொன்னான்.  9.20 க்கு லெட்டருடன் அக்கவுண்ட்ஸ் ஆபிசில் ரெ , அதிகாரி பஞ்சாபகேசன் சார் முன் வணக்கம் செலுத்தி கடிதம் தந்தான். மணியைப்பார்த்தார் . கே [9.22] good என்று ரெ வை பாராட்டினார்.

மாடசாமி உன்னைப்பத்தி சொல்லிருக்கார் ; நீ தைரியமா இரு நல்லா வேலை கத்துக்கோ, கீழே சுப்பிரமணி னு ஒரு அட்டெண்டர் இருக்கான் உனக்கு உதவி செய்வான் . 9.30 க்கு முதல் ரூம் கிளாஸ் , இந்தா இந்த attendance கை எழுத்து போட்டுட்டு போய் அந்த ரூம் வெய்ட் பண்ணு , நான் வருவேன் என்று அனுப்பி வைத்தார்.

தொடரும்     அன்பன் ராமன்

No comments:

Post a Comment

TM SOUNDARARAJAN-38

  TM SOUNDARARAJAN-38 டி எம் சௌந்தரராஜன் -38                    POSTING NO. 1225  திரு டி எம் எஸ் அவர்களின் குரலில் வெளிவந்த பாடல்கள் ...