Friday, April 28, 2023

SAMIsCOME TOGETHER-20

 SAMIsCOME TOGETHER-20

சாமிகள் சங்கமம் -20

மேடம் ஏன் ராத்திரி போன் பண்ணுனு சொன்னாங்க ? ஏதாவது டோஸ் விடுவாங்களோ ? நன் ஒண்ணும் தப்பு பண்ணலியே , ஒண்ணுமே புரியலையே , மாரியம்மா மேடம் கோவப்படாம பாத்துக்கம்மா என்று வேண்டினாள் வேண்டிய . மணி 8.25 , மாமா திரும்பி வந்தார் . மாமாவுக்கு உணவு பரிமாறிக்கொண்டே கௌரி சொன்னாள் . மேடம் என்னை போன் பண்ணச்சொன்னாங்க , பேச பயம்மா இருக்கு, நீங்க பேசறீங்களா மாமா என்றாள் . மாமா நீ பேசலாம் நான் போய் சம்மந்தமில்லாம  ஹி ஹி  ஹி கௌரி மாமா பேசறேன் னு சொன்னா நீங்க கௌரியோட பேசுங்க இங்க பேசாதீங்க னு கறாரா சொல்லிட்டா நம்ப ரொம்ப சிக்கல்ல மாட்டிக்குவோம் அதுனால நீயே பேசு , நாங்கல்லாம் தேவை இல்லாம குறுக்க பேசக்கூடாது. என்றார் . வேறு வழியில்லாமல் போன் பேசினாள் . மேடம் நன் கௌரி பேசறேன் . கௌரின்னா எந்த கௌரி எங்கிருந்து பேசற ஏதாவது சொன்னா தானே தெரியும். சரி குட் ஈவினிங் குட் மார்னிங் னு சொல்லி பேர் சொல்லி ஆரம்பிக்கணும் னு யாரும் சொல்லித்தரல்லியா . இனியாவது அந்த மாதிரி பேசி பழகு . சாரி மேடம் என்றாள் கௌரி. சாரி மேடம் வேண்டாம் சரி மேடம் னு சொல்லு என்ன புரியுதா என்றார் HOD . கௌரி வெல வெலத்தாள் . மாமா "சரி டோஸ் விழுது விழட்டும் அப்பதான் சரியா கத்துக்க முடியும்" னு  தனது அக்காவிடம் சொல்லிக்கொண்டிருந்தார்..மேடம் பேசினார் இந்த சாட்டர்டே மாமா பிரீ யா இருக்காரான்னு கேட்டு சொல்லு உடனே என்றார். கௌரி "மாமா நீங்க இந்த சாட்டர்டே பிரீ யா இருக்கீங்களானு மேடம் கேக்க சொல்றாங்க ".  சாட்டர்டே 3 மணிக்கு மேல பிரீ தான் என்று சொன்னார். அதை தெரிவித்த கௌரியிடம் , மேடம் இந்த சாட்டர்டே மாலை 6.00 மணிக்கு நம்ப ராமசாமி சார் வீட்டுல மீட் பண்றோம் முடியுமா என்று சொல்ல சொன்னார். சரி என்று ஒப்புக்கொண்டனர்.நானே ராமசாமி சாருக்கு சொல்லிடறேன் என்று மேடம் தெரிவித்தார் . பின்னர் கௌரியிடம் "உனக்கு ஸ்காலர்ஷிப் லெட்டர் வந்திருக்கிறதே அதையும் பத்திரமாக எடுத்துக்கொண்டு வா என்று தெரிவித்தார் HOD .

தொடரும்          அன்பன் ராமன்

No comments:

Post a Comment

TM SOUNDARARAJAN-38

  TM SOUNDARARAJAN-38 டி எம் சௌந்தரராஜன் -38                    POSTING NO. 1225  திரு டி எம் எஸ் அவர்களின் குரலில் வெளிவந்த பாடல்கள் ...