RENGAA RENGAA -21
ரெங்கா ரெங்கா 21
சரியாக 9.30 க்கு வகுப்பைத்துவக்கினார். பஞ்சாபகேசன் . 11 பேருக்கு 6 பேர் மாத்திரம் ஆஜர். மெல்ல 4 பேர் 10 மணிக்கு மேல் வந்தனர். ஏன் இவ்வளவு தாமதம் என்ற கேள்விக்கு 'இல்லையே மணி 10 ஆக வில்லை என்றான் ஒருவன். சரி உங்களுக்கு வந்த CALL LETTER ல் துவக்க நேரம் பாருங்கள் என்றார் .அதில் 9.30 என்று குறிப்பிட்டிருந்தது.நீங்கள் உங்கள் டிவிஷன் அலுவல் அதிகாரியிடம் உங்களை சேர்த்துக்கொள்ளச்சொல்லி இ- மெயில் அனுப்பச்சொல்லி போன் மூலம் பேசி அனுமதி வாங்கி வாருங்கள்.; நீங்கள் ரயில்வே இல் தாற்காலிக வேலையில் இருக்கிறீர்கள் என்று தான் உங்களை தேர்வு செய்து பயிற்சி அளிக்கிறோம். நீங்கள் வேலையில் காட்டும் அக்கறையின் லட்சணம் என்ன என்று உங்கள் பாஸ் களுக்கு தெரியட்டும். இ.மெயில் இல்லாமல் உங்களுக்கு அனுமதி கிடையாது என்று அனுப்பிவிட்டு , பிற ஆசிரியர்களுக்கும் அவர்கள் யாவர் என்றபட்டியலையும், கொடுத்து இ மெயில் இல்லாமல் உள்ளே விடாதீர்கள் . நாள் கடந்தால் அவர்களின் தலையெழுத்து என்று கண்டிப்பான உத்தரவு பிறப்பித்து , உடனடியாக ATTENDANCE ரெஜிஸ்டர் பூட்டி வைக்கப்பட்டது. 10.05 க்கு ஒரு பெண் வந்தாள், அவளை அனுமதித்தார். உடனே வெளியே அனுப்பப்பட்டவர்கள் ஆ ஊ என்று வாதிட வந்தனர் பஞ்சாபகேசனிடம். அவர் கூலாக அந்த பெண்ணை அழைத்து டிவிஷன் அதிகாரியின் கடிதம் மற்றும் ஆஸ்பத்திரி DMO வின் பரிசோதனை க்குரிய தேவை பற்றிய கடிதம் இவற்றை காட்டி, அவன் சென் ற சனி அன்று நிலைமையை விளக்கி அவகாசம் கேட்டதையும் ,உயர் அதிகாரி அனுமதி + மெடிக்கல் பரிந்துரை வாங்கி வந்தால் அனுமதிப்பதாக, துறை ரீதியான பெர்மிஷன் பெற்றுள்ளாள். அவள் இந்த டிவிஷனில் ஊழியர் 6 ஆண்டுகளாக ; இப்போது தேர்வு பாஸ் செய்து பயிற்சியில் சேர்ந்துள்ளாள் ; இங்கு அனைவருக்கும் ஒரே சட்டம் தான் இங்கே கூச்சல் போடாமல் சொன்ன ஏற்பாட்டை நிறைவேற்றி வாருங்கள். இல்லையேல் வரும் வியாழன் முதல் 9.30க்குள் வந்து சேர்ந்துக்கொள்ளலாம். இன்று சண்டே எனவே 3 நாள் தள்ளி வியாழன் முதல் வாருங்கள். என்றார். எங்களுக்கு வகுப்பு போகுமே என்றார் இருவர் . போகட்டுமே என்று தானே நீங்கள் மெல்ல 10 மணிக்கு வந்தீர்கள் இப்போதென்னவோ பயிற்சியில் மிகுந்த நாட்டம் கொண்டவர்கள் போல் பேசுகிறீர்கள்.. சொன்னதை நிறைவேற்றுங்கள் என்று அனுப்பி வைத்தார். அவர்களில் ஒருவன் குண்டூர் டிவிஷன் ஆபீஸ் டிராபிக் CHIEF இடம் COMPLAINT கொடுப்போம் என்று கிளம்பினான். பலர் ஒப்புக்கொள்ளவில்லை . இவன் தனியே போய் அந்த அதிகாரியிடம் முறை இட்டான். அவர் இவன் முகத்தில் கரியைப்பூசினார் ; சாதாரணக்கரி அல்ல ரயில் கரி . யு ஹவ் நோ பிசினஸ் டு கம் லேட். you stupid , don 't think we are idiots here ; ஹூம் ஆர் யு talking about ..அவனது லெட்டர் ஐ வாங்கி I AM CANCELLING யுவர் ADMISSION என்று சீறிப்பாய்ந்தார். இவன் சார் சார் என்று மண்டியிட்டான் . அவர் உன்னை ஒரு வாரம் suspend செய்கிறேன் எனவே உனக்கு 2 மாதம் 3 வாரம் பயிற்சி அடுத்த batch ல் 2 வரம் பயிற்சி இவை முடிந்த பின் தான் வேலை என ம ள ம ள என்று ஆர்டர் அடித்துசர்வீஸ் செக்ஷன் அதிகாரியிடம் தானே போய் ஒப்புதல் வாங்கி , அனைத்து அலுவலக பிரிவினருக்கும் தகவல் நகல் அனுப்பி பஞ்சாபி கேசனை போனில் பாராட்டி you did the right thing என்று மகிழ்ச்சி தெரிவித்தார். இதற்கிடையில் வேறு இரு வகுப்புகள் முடிந்து 12.30க்கு lunch break .
சுப்பிரமணி சார் கீழே வரீங்களா என்று க ரெ வை கூட்டிச்சென்றான் . மாமி மெஸ் சாப்பாடு அளவு சாப்பாடு சரியான அளவில் சாதம் , குழம்பு ,ரசம், காய், மோர் ஊறுகாய் எளிய ஆனால் சுவையான உணவு . நீங்க சாப்பிடலியா என்றான் க ரெ . இப்ப வீட்டுக்கு போய்விட்டு அம்மா வுடன் சாப்பிடுவேன் 2.15 க்குள்ள வந்துடுவேன், நான் போகல்லேன்னா அம்மா சாப்பிடாம உக்காந்திருப்பா ; எவ்வளவோ சொல்லியாச்சு கேக்க மாட்டேங்கறாங்க . உங்க wife ? எனக்கு இன்னும் கல்யாணமே ஆகல . 1 1/2 வருஷத்துக்கு முன்ன தான் என் தங்கைக்கு கல்யாணம் பண்ணினோம் . அந்த கடன் வேற இருக்கு கொஞ்ச கொஞ்சமா அடைக்கறேன் . என்ன செய்ய நம்ப பட்ட கடனை நம்ப தான் சார் அடைக்கணும்.. வேற யாரும் கூடப்பிறந்தகவங்க? ஒரு அண்ணன் 7, 8 வருஷமா US ல இருக்கான் திரும்பிக்கூட பாக்கிறதில்ல , நம்ப தரித்திரத்தை யார் சார் பங்குபோட்டுக்க வருவாங்க ? சொத்து பத்து இருந்தா வந்து வந்து பாப்பாங்க, திடீர்னு சொந்தக்காரங்க கூட முளைப்பாங்க அது தான் சார் உலகம். என்றான் சுப்பிரமணி. ..சார் க்ளாஸ்க்கு லேட்டா இல்லாம போங்க லேட்டா ஆ போனா சார் ரொம்ப கோவப்படுவர். சாயங்காலம் 5 மணி எக்ஸ்பிரஸ் போனப்புறம் டவுனுக்கு போலாம் , அங்க அனுமார் கோயில் நல்ல விசேஷம் . பஞ்சாபகேசன் சார் அங்க நெறையா போவார் . சக்தி வாய்ந்த அனுமார். ;அவர் தான் இந்த ஊர்ல எங்களை காப்பாத்தறார் என்றான் சுப்பிரமணி . மாலை ஆஞ்சநேய தரிசனம். சென்னை கோயில் கள் , ரா சா மா சா எல்லாம் மனதில் வந்து போயின . இப்போதைக்கு சுப்பிரமணி தான் மாடல் ; வாழ்வியல் அனுபவம் அவன் பண் பட்டு நிற்கிறான் . ஆஞ்சநேயர் என்னையும் கரையேற்றுவார் என்று ஆழ்ந்து பிரார்த்தனை செய்தான். சிறிது நேரம் கடைத்தெருவில் நடந்தனர் 7.15 மணி வாக்கில் மாமி மெஸ்ஸில் மெட்றாஸ் சார் என்று அறிமுகம் இரவுக்கு சேவை 3 பீஸ் + புதினா சட்னி கணக்கில் 21/- ரூபாய் மதியம் 50/- . 8.10 க்கு ரூம் திரும்பினர் . 10 மணி வரை படித்துவிட்டு உறங்கினான் .
தொடரும் அன்பன் ராமன்
No comments:
Post a Comment