Sunday, April 30, 2023

SAMIs COME TOGETHER-21

 SAMIs COME TOGETHER-21

சாமிகள் சங்கமம் -21

அங்க ஏன் வரச்சொல்றாங்க என்று மா சாவும் கௌரியும் புரியாமல் தவித்தனர்..சரி என்று ஒப்புக்கொண்டனர் . நல்லதோ அல்லதோ HOD சொன்னால் கேட்க வேண்டியது தான் .இப்போதுதான் கௌரிக்கு ஞாபகம் வந்தது SCHOLARSHIP LETTER வந்திருப்பதை சாரதாவிடம்  காட்டி விடவேண்டும் , மேலும் மேடம் வீட்டுக்கு போகும் போது சொல்கிறேன் , நீங்களும் வாங்கனு சொல்லியாச்சு அதையும் காப்பாத்தணும் இல்லேன்னா வம்பு தான். ராமசாமி சார் வீட்டுல மேடத்துகிட்ட சாராதவையும் கூட்டிக்கிட்டு வரலாமா னு பெர்மிஷன் கேட்டு மேடம் சொல்வது போல் செய்ய வேண்டியது தான் என்று பிளான் போட்டுவிட்டாள். 2 -3 நாளிலேயே எப்படி எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று புரிந்து விட்டது ; இதைத்தான் சாரதா சொல்லிக்கொண்டே இருந்தாள் . மேடத்துகிட்ட 2 வருஷம் படி அப்புறம் எப்பிடி டெவெலப் ஆயிடுவனு பாரு என்று அடிக்கடி சொன்னதன் பொருள் கௌரிக்கே புரிந்தது போல் இருந்தது சனி மாலை ராமசாமி வீட்டில் மீண்டும் சாமிகள்/ திரிவேணி சங்கமம். ஸ்காலர்ஷிப் லெட்டரை சுபத்ராவே  அழகாக பிரித்து ராமசாமி/ அம்ஜம் இருவருக்கும் காட்டி விளக்கினாள் . இவ்வளவு கட்டுப்பாடு சட்ட திட்டமெல்லாம் இருக்கா என்றனர் ரா. சா அம்புஜம் இருவரும். இல்லையா பின்ன மொத்தம் 1 லட்ச ரூவா சார் சும்மா தருவானா ? தூண்டித்துருவி ப்பார்த்து , நான் ஏதாவது லஞ்சம் வாங்கிட்டேனான்னு கூட ரகசிய விசாரணை யெல்லாம் நடந்திருக்கும் சார் . தமிழ் நாடு முழுவதும் NIA தீவிர கண்காணிப்பில் பலவித நுணுக்கமான உளவு பணிகள் துல்யமாக நடக்கின்றன அதுவும் DEFENCE MINISTRY சமாச்சாரம் னா சும்மாவா என்றார் சுபத்ரா

அதுனாலதான் நான் அட்மிஷன் முடியற வரைக்கும் யாரையும் நானும் பார்க்கவோ அவங்க என்னைப்பார்க்கவோ விடமாட்டேங்கறேன். மேலும் நாங்க முறையா செலக்ட் பண்ணி அந்த கேண்டிடேட் ரிஜெக்ட் ஆனா ஏதோ ஊழல் னு சந்தேகப்படறாங்கனு அர்த்தம். . இவளுக்கு ஸ்காலர்ஷிப் வரணுமேன்னு நான் மடியிலே நெருப்பைக்கட்டிக்கிட்டு இருந்தேன்னு எனக்கும் சமயபுரத்தாளுக்கும் தான் தெரியும். ஆனா இவ சொல்றா   என்ன பார்த்தா இவளுக்கு பயம்மா இருக்காம் கை , தலை எல்லாம் வேர்த்துக்கொட்டி அப்புறம் ஐஸ் வாட்டர் குடிக்க குடுத்து முழுசா வீட்டுக்கு அனுப்பி வெச்சேன் இவளை என்றார் HOD சுபத்ரா . கௌரி வெட்கி தலைகுனிந்து அம்ஜம் பின்னால் மறைந்து கொண்டாள். இறுதியில் ஸ்காலர்ஷிப் உத்தரவில் வித்யா வேதாந்தம் கையெழுத்திட்டிருப்பதை  காட்டி அந்த பெண்மணி எவ்வளவு உயர் பதவியில் இருக்கிறார். என்று விளக்கி . நல்ல வேளை  அவங்க கிட்டயெல்லாம் தொங்கும்படியா வெக்காம கௌரவமா ஜெயிச்சுட்டா கௌரி என்று உண்மையான மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் சுபத்ரா . மாடசாமி எவ்வளவு உயர்ந்த மனிதர்களுடன் நாம் நெருங்கிப்பழகும் வாய்ப்பை இறைவன் தந்தருள்கிறான் என்று தெய்வங்களுக்கு நன்றி தெரிவித்தார் . மீண்டும் சூப்பர் அடை கொத்துமல்லி சட்னி , ஜமாய்த்திருந்தாள் அம்ஜம். . கௌரிக்கு மாபெரும் TREAT போல தோன்றியது.

விடை பெரும் தருணம் கை கூப்பி மாடசாமி தெரிவித்தார் "மேடம் யூனிவர்சிட்டி போன்ற இடங்களுக்கு நான் போனதே இல்லை அதுனால அங்க உள்ள நடைமுறைகள் தெரியாது. இவ சின்னவ ஏதாவது முன் பின் நடந்திருந்தா எங்களை மன்னிச்சிடுங்க , நானும் அவளுக்கு எனக்கு தெரிஞ்ச அட்வைஸ் எல்லாம் அப்பப்ப சொல்லிக்கிட்டு தான் இருக்கேன் என்று கலங்கினார். உடனே சுபத்ரா சார் நீங்க என் சகோதரர்னு முத நாளே நான் சொன்னதை மறந்துட்டீங்களா ? ஒரு தடவை பார்க்கும் போதே நல்லவங்களா  வேஷம் போடறவங்களானு நான் ஈஸியா கண்டுபிடிச்சுடுவேன் வேஷ கோஷ்டிக்கெல்லாம் இங்க இடமே கிடையாது , இன்டர்வ்யூக்கு வந்துட்டு டான்ஸ் ஆடினவனுங்க கதி என்ன னு அவளைக்கேளுங்க சொல்லுவா என்றார் HOD. .இதுக்கெல்லாம் கலங்காதீங்க .அவ எங்க வீட்டு குழந்தை ங்கற உணர்வோடு தான் எங்க யூனிவர்சிட்டி ஸ்டுடென்ட்ஸ் எல்லாரையும் நான் வளர்த்திருக்கேன். ராமசாமி சார் கொடுத்த ஒரு சிறிய ஓப்பனிங் ல தான் இன்னிக்கு டெல்லில எங்க யூனிவர்சிட்டி பெருமையடையும்படி மாரியம்மா அசீர்வாதம் கிடைச்சிருக்கு. அவளை நான் சொல்றமாதிரி follow பண்ண சொல்லுங்க , சூப்பரா வந்துருவா அப்புறம் நம்ப அவளை foreign ல தான் போய் பாக்கணும். என்று வணங்கி விடை பெற்றாள்

தொடரும்   அன்பன் ராமன்

No comments:

Post a Comment

TM SOUNDARARAJAN-38

  TM SOUNDARARAJAN-38 டி எம் சௌந்தரராஜன் -38                    POSTING NO. 1225  திரு டி எம் எஸ் அவர்களின் குரலில் வெளிவந்த பாடல்கள் ...