Monday, May 1, 2023

Rengaa Rengaa -22

 Rengaa Rengaa -22

ரெங்கா ரெங்கா -22

ஆயிற்று இன்றோடு 7 நாட்கள் பயிற்சி நிறைவந்தது . நாளை காலை 10.00 மணிக்கு டெஸ்ட் இதுவரை படித்த பகுதிகளில் என்று பஞ்சாபகேசன் அறிவித்தார் . சிலர் மூணு முணுமுணுத்தனர். இது போல நடக்கும் 12 டெஸ்ட் களின் சராசரி கொண்டு வேலைக்கான முறையான appointment order அல்லது தொடர்ந்து ட்ரெயினிங் என்பது முடிவு செய்யப்படும் ,முணுமுணு த்துக்கொண்டிருக்கும் நேரத்தில் 3 chapter பிடித்துவிடலாம் என்றார் ப கே .   க ரெ அன்றாடம் படிப்பவன் அதனால் அவன் டெஸ்டுக்கு இப்போதே தயார். தினமும் இரவு 8.15 --10க்குள் அன்றாடம் கணக்குகளை /கணக்கு தொடர்பான சட்ட திட்டங்களை நன்றாக புரிந்து கொண்டிருந்தான்.

மாலை வகுப்பு முடிந்ததும் பஞ்சாபை கேசன் சொன்னார் 28 நாள் பயிற்சிக்குப்பின் 21/2 நாள் லீவு கிடைக்கும் ஊருக்குப்போக வேண்டுமானால் போய் வரலாம் என்றார். 'இல்லை சார் நான் வசதி இல்லாதவன் போக்கு வரத்து டிக்கெட் சாப்பாடு என்று செலவு செய்ய 1 சம்பளமாவது வாங்கினால் தான் சரிப்படும் என்றான். க ரெ . சரி மே மாதம் 27 ம் தேதி சனி மாலை 3.00 மணிக்கு pay வாங்கிக்கொள் [எல்லோருக்குமே தான்] .இரவு 7 மணிக்கு ஒரு எக்ஸ்பிரஸ் திருச்சிக்கு இங்கிருந்து போகும். அதில் டிக்கெட் புக் பண்ண ஏற்பாடு செய்கிறேன். நீ அப்போது பணம் கொடு அல்லது திரும்பி வந்து கொடு என்று ஏற்பாடு செய்தார் .

பெரிய மனிதர்களில் சிலர் மா பெரும் மனிதர்கள் என்றுணர்ந்தான் க ரெ . மீதம் இருந்த 3 டெஸ்ட்களையும் நன்றாக உணர்ந்து எழுதினான் . இப்போது அவனுக்கு ஒரு மண்டை குடைச்சல் துவங்கியது

ஐயோ மெஸ் மாமிக்கு பணம் தாராமலா ஊருக்குப்போவது .அது உண்ட வீட்டுக்கு ஊரு செய்வதல்லவா , பெருமாளே வழிகாட்டு என்று வேண்டினான் .சரி சுப்ரமணியிடம் கேட்போம் .. அவனுக்கும் ரூம் ரெண்ட் தரணுமே என்று சிறிது குழம்பினான் .

மாலை சுப்ரமணியுடன் டவுனுக்கு போகும்போது இந்தப்பணப்பட்டுவாடா பற்றி அவனிடம் விவாதித்தான் . சுப்பிரமணி : "சார் உங்க அதிகாரி கடைசி சனிக்கு பணம் குடுத்து செவ்வாய் மாலை 2.30 க்கு திரும்ப க்ளாஸ் வைப்பார். அதுதான் செய்வார். 3.30க்கு போய் மாமிக்கு பணம் தந்துட்டுஊர்ல உங்க  வீட்டுக்கு ஏதாவது வாங்கிட்டு 5.30க்கு வந்துடலாம். .மாமிகிட்டயே 6.30 மணிக்கு டிபன் பொட்டலம் வாங்கி அடுத்த மாசக்கணக்குல எழுதிட்டு வந்து ட்ரெயின் 8.00 மணிக்கு சாப்புடுங்க என்று ஐடியா சொன்னான் . உங்களுக்கு ரூம் ரெண்ட் ?என்றான் ரெ

நியாயமா நான் ஒன்னும் வாங்கக்கூடாது சார். ஏன்னா இது ரயில்வே வெயிட்டிங் ரூம் ;நீங்க ட்ரெயினிங் இருக்கறதால தங்கலாம் . ஆனா யாராவது உயர் அதிகாரிங்க வந்துட்டா அவங்க ac ரூம் இருந்துருவாங்க அப்ப நீங்களு ம் நானும் வெளி ஹால் படுக்கலாம். நல்ல வேளை அதுலயும் ac இருக்கு. .ஒரு நாளைக்கு 20/- னு ராகவலு சொன்னார் அதுனால 600/- ரூபாய் தரணும் நான் என்றான் . ரெ . சார் அப்படி எல்லாம் கறார் கணக்கு வேண்டாம் , ஏன்னா ,சில சமயம் ஹால் படுக்கும் போது ? அதனாலே ஒரு 500/- தாங்க போதும் .

எப்பயாவது தேவைப்பட்டா 50/- , 100/- கடனா குடுங்க அடுத்த சம்பளத்துல திருப்பிடுவேன் அப்பதான் நம்ப வெறுப்பு இல்லாம நட்போட இருக்க முடியும் . சம்பளத்தன்னிக்கு எல்லாவேலையும் முடிச்சு உங்கள ட்ரெயின் ஏத்திவிட்டுடறேன் ஒரு 2 நாள் அம்மாவோட இருந்துட்டு வாங்க என்று அன்பாக சிரித்தான் .                                                  தொடரும் அன்பன் ராமன்

No comments:

Post a Comment

TM SOUNDARARAJAN-38

  TM SOUNDARARAJAN-38 டி எம் சௌந்தரராஜன் -38                    POSTING NO. 1225  திரு டி எம் எஸ் அவர்களின் குரலில் வெளிவந்த பாடல்கள் ...