Tuesday, May 2, 2023

SAMIs COME TOGETHER-22

 SAMIs COME TOGETHER-22 

சாமிகள் சங்கமம் -22

இன்னும் லேட் பண்ணாமல் சாராதவைப்பார்த்து ஸ்காலர்ஷிப் பேப்பர் காட்டி மேடம் வீ ட்டுக்கு போக எல்லா முடிவும் செய்து கொண்டு வரலாம் என காலையிலேயே கிளம்பி விட்டாள் மாமாமாவின் அனுமதி யுடன். அந்தப்பகுதியில் இவள் எதிர்பாராத வித மாக பட்டுப்புடவையை அணிந்த சுபத்ரா ஸ்கூட்டரில் மெய்ன் ரோட் பகுதியில் திரும்ப, கௌரி ஐயோ என்றுவேறுபுற ம் திரும்பிக்கொண்டு மெல்ல ஓரக்கண்ணால் மேடம் போயாச்சா என்று காக்கை போல் பார்க்க, மேடம் எப்போதோ பறந்துவிட்டிருந்தாள்.

சாரதாவின் இல்லத்தில் ஒரே பெண்கள் கூட்டம் சுமார் 10, 12 தேறும் 

அங்கே பாடி கை தட்டிக்கொண்டு "HAPPY  BIRTH DAY TO  YOU" என்று முழங்கி கேக் வில்லையை சாரதாவின் வாயில் திணித்து விளையாடிக்கொண்டிருந்தனர் . பூனை போல் கௌரி நுழைய சாரதா சாரி மா உனக்கு சொல்லல இதுங்க என் க்ளாஸ் மேட்ஸ் /ஜூனியர்ஸ் எல்லாம் .இந்தா காபி சாப்பிடு உக்கார்  என்று  சொல்லி 10 நிமிஷம் வெய்ட் பண்ணு வரேன் என்று திரும்பியவளை  அக்கா என்று  கூப்பிட்டு ஸ்கலர்ஷிப் கடிதம் கொடுத்தாள் கௌரி. பாத்தியா நான் சொன்னேன் ல அதே மாதிரி வந்திருக்கு என்று சொல்லிக்கொண்டே AMOUNT பார்த்தவள் வாவ் TOTAL ஸ்கலர்ஷிப் வெரி  குட் என்று மகிழ்ந்து , இங்க வாங்கடி இவளுக்கு கை தட்டுங்க என்று கூப்பிட்டு விவரம் சொன்னதும் ஒரே படபட சப்தம் .ஏ பிரேமா இங்க வாயேன் , இவ உங்க டிபாட்மெண்ட்ல PG சேரப்போறா என்று சொல்லி, இவ டெல்லி RAM ' S காலேஜ் ல பைன் ஆர்ட்ஸ் லெக்ச்சரர் , சூப்பர்  வாய் இங்கிலிஷ் அப்பிடி பேசுவா , மேடத்துக்கும் பெட் எனக்கும் ரொம்ப FRIEND இப்ப லீ வுக்கு வந்திருக்கா என்று அறிமுகப்படுத்தி விட்டு எல்லாரும் போனதும் வரேன் ஜஸ்ட் 10 மினிட்ஸ் என்றாள்  சாரதா . நானும் கிளம்பறேன் என்றாள் பிரேமா .ஏ உக்கார்  ரி , உங்க மாமியா காத்துக்கிட்டு வாசல் ல நிக்கிறாளா க் கும் என்றாள் சாரதா. [பிரேமாவுக்கு இன்னும் கல்யாணம் ஆக வில்லை என்பது தான் HIGHLIGHT ] பிறரை அனுப்பிவிட்டு சாரதா வந்ததும் , ப்ரேமாவைக்கொஞ்சம் இரு டி  என்றாள் சாரதா . ஏ ன் என்றாள் பிரேமா . ஓ ஏன், எதுக்கு, என்ன, எப்ப, , எங்கே, யார் , எப்பிடி, னு பூராவும் தெரிஞ்சாதான் உக்காருவீங்களோ , வீட்டுல பையன் அழறானா என்று கிண்டல் செய்தாள் . அடியே  உன்னை இரு க்க சொன்னது இவளுக்கு என்ன படிக்கணும் என்ன PRACTICE , EXAM PATTERN எல்லாம் சொல்லுடீன்னா என்று மிரட்டினாள் . சில முக்கிய குறிப்புகள் , புத்தக பெயர்கள் , இந்தியாவில் முக்கிய பேராசிரியர்களில் உதவி செய்யும் நபர்கள் , நம்பர் கள் குறித்து முடிவில் தனது  நம்பரையும் கொடுத்து எப்போ வேண்டுமானாலும் பேசுங்க என்றாள் பிரேமா. ரொம்ப தேங்க்ஸ் மேடம் என்றாள் கௌரி.. அக்கா மேடம் வீட்டுக்கு இன்னிக்கு போலாமா என்றாள் கௌரி . ஏய் நீ வரதுக்கு 5 நிமிஷம் முன்னால தான்  மேடம் வந்து வாழ்த்து சொல்லிட்டு போனாங்க. இன்னிக்கே போனா நல்லா இருக்காது. மேடம் கிட்ட போன் பேசவே வெட வெடன்னு நடுங்கி மயக்கம் போட்டுருவீங்க அவ்வளவு வீராங்கனைங்க நீங்க, நானே மேடம் கிட்ட பேசி சனி /ஞாயிறு ஏற்பாடு பண்றேன் , ஏ நீயும் வா என்று பிரேமாவை கூப்பிட்டாள்  சாரதா . ஒரு நாள் முன்னால சொல்லு என்றாள் பிரேமா.. மேடம் வீட்டுக்கு போகும் படலம் சாரதாவின் அறிவிக்குப்பின் தான். உங்க போன் நம்பர ரெண்டும் பெரும் ஒரே பேஜ் ல இந்த டைரில உங்க பேரோட எழுதி வைங்க , என்று நன்றி சொல்லி அனுப்பினாள் . கௌரிக்கு இது சரியான சவால் நிறைந்த இடம் கடுமையா உழைச்சு உயரத்த பிடிக்கணும் என்று உறுதி எடுத்துக்கொண்டாள் .

தொடரும்   அன்பன் ராமன்

No comments:

Post a Comment

THE CARPENTER

  THE CARPENTER   Yet another weakening artisan is the carpenter. Well, readers may construe that I am exaggerating and that carpenters ar...