RENGAA RENGAA -23
ரெங்கா ரெங்கா 23
குறித்த நாளில் காலை டெஸ்ட் முடிந்து உணவு இடைவேளைக்குப்பின் க ரெ வை அழைத்து, போக வர ரிசேர்வஷனுடன் 2 டிக்கட் தந்தார் புஞ்சாபகேசன் . 3 மணிக்கு சம்பளம் உங்கள் கிளாஸ்ரூமில் தரப்படும் லெட்ஜ்ர் இல் கையெழுத்து போட்டு ஸ்டாம்ப் fee 1/- ரூபாய் தந்து விட்டு பணம் பெற்று எண்ணி பத்திரமா க வைத்துக்கொள் டிக்கெட் 1970/- இன்றோ திரும்பி வந்தோ கொடு என்றார். இன்றே தருகிறேன் சார் என்றான் க ரெ . சொன்னபடி பணம் 27000+ வந்தது .அவ்வளவு பணம் ஒரே நேரத்தில் அவன் பார்த்ததில்லை .இதைக்காப்பாற்றி வைத்துக்கொள்ள வேண்டுமே என்று கை கால் நடுங்கியது. . அதைக்கண்ட கேஷியர் புஜங்கரவ் ஒரு கவர் தந்து அவரே 7000/- அவன் கையில்கொடுத்துவிட்டு மீதியை கவரில் வைத்து இதை பத்திரமாக வைத்துக்கொள் என்று இங்கிலீஷ் ல் சொன்னார் . தேங்க்ஸ் என்றான் க ரெ . தனது பையில் கவரை பத்திரப்படுத்திவிட்டு , பஞ்சாபகேசன் அறைக்கு ஓடினான் உள்ளே இருவர் இருந்தனர் .10 நிமிடத்தில் அவர்கள் வெளியேறினர் க ரெ உள்ளே சென்று 2000/- ரூ தந்தான் அவர் உடனே 30/- ரூ தந்துவிட்டு ரயிலில் கவனமாகப்போ யாரிடமும் பேசாதே. ஊரில் மாடசாமியை நான் ரொம்ப கேட்டதாக சொல் அவனைப்போல் எல்லோரும் நேர்மையாக இருந்தால் இந்த நாடு எப்போதோ முன்னேறி இருக்கும் என்றார் ப. கே மீண்டும் ஒருமுறை மாடசாமி தெய்வமாக தெரிந்தார் க ரெ வுக்கு. வண்டி 12.30க்கு வரும் , நீ மதியம் க்ளாஸ் 2.30க்கு வந்துவிடலாம் என்று அனுப்பி வைத்தார் . நன்றியுடன் வெளியேறி சுப்ரமணிக்காக காத்திருந்தான். சுப்பிரமணி 3.20 க்கு வந்தான் உடனே அவனுடன் டவுனுக்கு போனான் . போகுமுன் ரூம் வாடகை 500/-ரூ கொடுத்தான். சுப்பிரமணி தேங்க்ஸ் சார் எங்களுக்கு 1ம் தேதி சம்பளம் அதுவரைக்கும் இது ரொம்ப உபயோகமா இருக்கும் என்று நன்றி தெரிவித்தான் . டவுன் அம்பிகா விலாஸ் ஹோட்டலில் நுழைந்து சார் இன்னிக்கு 20/-ரூ காபி சாப்பிடுங்க முதல் சம்பளம் என்றான். க ரெ சொன்னான் நீங்களும் சாப்பிடுங்கோ நான் வாங்கித்தரேன் என்றான் சூடாக காபி நன்றாக இருந்தது .சொந்தக்காசில் காபி சாப்பிட்டா ரொம்ப ஜோராத்தா ன் இருக்கு என்று அக மகிழ்ந்தான். சார் இங்க ஒரு ஸ்வீட் ஸ்டால் ல தேங்கா பர்பி சூப்பரா இருக்கும் 1 கிலோ 400/- ரூ வாங்கி ஊர்ல குடுங்க என்றான் சுப்பிரமணி. சரி 4 கால் கிலோ வாங்கினா ரா சா, மாசா , அம்மா , ரயில்வே அதிகாரி 4 பேருக்கு குடுக்கலாம் என்று எண்ணினான். சரி சார் அப்படியே செய்வோம் என்று வாங்கிவிட்டு பக்கத்து சந்தில் சென்றான். க ரெ பின் தொடர்ந்தான். அது சுப்பிரமணி வீடு தாயார் மாவரைத்துக்கொண்டிருந்தாள் .மாலையில் வெளியே ஸ்டூல் போ ட்டு மாவு விற்பாராம் . வாங்க தம்பி என்று எழுந்து தன் புடவையை சரி செய்துகொண்டாள் காபி சாப்பிடுங்க என்றார் தாய் . இப்பதான் சாப்பிட்டோம் என்று சொல்லிக்கொண்டே ஒரு கெட்டியானTRAVEL BAG எடுத்து கொண்டுவந்தான் சுப்பிரமணி . அம்மா 3 நாளைக்கு சார் ஊருக்குப்போறார் இந்த பையை கொண்டு போயிட்டு வரட்டும் என்றான் சு. ம அம்மா சரிப்பா என்று சிரித்து விடை கொடுத்தார்.
சார்
உங்க பை பணம் கொண்டு போக லாயக்கில்லை , பூட்டவும் முடியாது . இது நல்லா பத்திரமா பணம்
, துணி, ஸ்வீட் எல்லாம் கொண்டு போலாம். நீங்க ஊருக்கு போயிட்டு வாங்க அங்க அபூபக்கர்
கடைல நல்ல BAG நியாயமான விலைல வாங்கி வெச்சுக்குங்க மாசா மாசம் உபயோகப்படும் என்று
பேசிக்கொண்டே மாமிக்கு இப்போ வா அப்புறமா என்றான் சு. ம . இப்பவே கொடுத்துட்டா அவாளும்
சந்தோஷப்படுவா என்றான் க. ரெ . சரி வாங்க என்று மெ ஸ் ஸுக்கு வந்தனர். மாமி கணக்கு
2700/-ரூ அதைக்கொடுத்துவிட்டு டிபன் இருக்கா என்றதும் சேவை வெச்சிருக்கேன் 5 நிமிஷத்துல
எலுமிச்சம்பழ சேவை பண் ணி கொடுக்கறேன் உக்காருங்கோ என்றாள் . இதை அடுத்தகணக்கின் ஆரம்பமா
வெச்சுக்குங்க என்று சுப்பிரமணி சொன்னான். மாமி அடுத்த பக்கத்தில் மெட்ராஸ் சார் என்றெழுத
கஸ்தூரி ரெங்கன் என்று தன் பெயரை பக்கத்தில்
எழுதி வைத்தான். 7 நிமிடங்களில் பொட் டலத்தை வாங்கிக்கொண்டு ரூம் வந்தனர் மணி 6.20.
முகம் கழுவி , பொருட்களை நல்ல பையில் மாற்றிக்கொண்டு . பணத்தை பத்திரப்படுத்தி , பொட்டலம்
தண்ணீர் பாட்டில் எடுத்துக்கொண்டு பிளாட் பாம் வந்தனர் . சரியான கோச்சில் சுப்பிரமணி
ஏறி பெர்த் பார்த்து க ரெ வின் உடமைகளை வைத்துவிட்டு இறங்கி நல்லபடியா போயிட்டு வாங்க
என்று விடைபெறவும் வண்டி நகர்ந்தது.
தொடரும் அன்பன் ராமன்
No comments:
Post a Comment